முன்னுரை

உலக அரங்கில் சில எலும்புத் துண்டுகளை மட்டுமே வைத்து, டைனோசருக்கு உருவம் கொடுத்து, பல நாவல்களும், பல்வேறு திரைப்படங்களும் வெளியிட்டு, தன் ஆளுமையை நிலைநாட்டிய மேலை நாட்டினருக்கு மத்தியில்…

“கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடியில்” பிறந்த, நம் தமிழ் இனத்தின் கலை, இலக்கியங்களோடு புதைந்தும், கோவில் பிரகாரங்களில் தன் வரலாற்றுச் சுவடுகளை, இன்றும் சுமந்து கொண்டு இருக்கும், யாளிகள் பற்றிய நூல்களோ..? விரல்விட்டு, எண்ணும் படியே இருப்பது வேதனை…

இந்திய இராணுவத்தில் பணியாற்றும், சிவ.தங்கராஜ் என்ற நான். ‘தமிழ் தம்பி’ என்ற புனைப்பெயரில்…

மறைந்து போன யாளிகள் பற்றிய தேடல்களை தூண்டும் நோக்கத்தோடு, இந்த சரித்திரக் கதை புனைக்கப்படுகிறது…

எனது கற்பனைகளில் வரும் காட்சிகள், வருங்காலத் தேடல்களின் ஆய்வின் முடிவில், உண்மைத்தன்மையை பிரதிபலிக்கும் வரிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கக்கூடும்.

இருப்பிடம் விட்டு இருப்பிடம் நகர்ந்து, தமது அறிவியல் ஆளுமையை
அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் வியந்து நிற்க.

ஊர்கள் விட்டு, ஊர்கள் நகர்ந்த நாம், பல நாடுகளை கடந்து சென்று ஆளுமை செய்கின்றோம்..!

இன்று உலகமே வியக்கும் வகையில், கோள்கள் விட்டு கோள்கள் தாவி, புருவம் உயர்த்த விஞ்ஞானத்தில் வியக்கும் உச்சத்தில் இருக்கிறோம்.

நாம்,
நமது பயணங்கள்…
அகல்விளக்கு வெளிச்சம் போலவே இன்றும் இருக்கிறது.
தொலைதூரம் வரை பிரகாசம் தந்தும்,  தன் காலடியில் மண்டியிட்டு கிடக்கும் அகழாய்வு எனும், இருளில் புதைந்து கிடக்கும் யாளிகளோடு என் கற்பனைப் பயணம்…

இன்றைய காலத்திய கதைமாந்தர்களோடு காலக்கோட்டிற்குள் நுழைந்து,  உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன்…

அன்புடன்,
தமிழ் தம்பி..✍️

கதைக்குள் செல்வோம்…