வேப்பமரத்து விருந்தாளிகள்

வீடுகட்டும் வேலை நடந்துக் கொண்டி ருந்தது. சுற்றிலும் கல்லும், மண்ணுமாய் குவிக்கப்பட்டிருந்தது. வேலையாட்கள் பரப் பரப்பாக வேலையில் ஈடு பட்டிருந்தார்கள். இங்கப் பாருப்பா! இந்த செங்கல் எல்லாம் மேல போகணும். ஒரு நாலுபேர் பின்பக்கம் பூச்சு வேலையை முடிங்க! நாளை காலையில முன்பக்க வேலைக்கு சாரம் கட்ட ஆட்கள் வந்திடுவாங்கன்னு அந்த வீட்டைக் கட்டும் பொறுப்பை ஏற்றுள்ள பொறியாளர் எல்லோரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். வேலை செய்யும் ஆட்கள் முன்னும் Read more

டாக்டர் அக்கா

நான் அப்போது புளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அம்மாவும் அப்பாவும் இல்லாததால் பாட்டி நாகம்மாளின் ஆதரவில் இருந்தேன். சமாதானபுரத்தில் இருந்து ஜெபபுரவிளைக்கும், புளியூருக்கும் போகும் வழியில் இடதுபுறம் உள்ள பெரிய தென்னந் தோப்புக்குள் இருக்கும் பழைய மோட்டார் ரூம்தான் எங்களின் வீடு. அதற்கு அடுத்து எப்போதும் வற்றாத பெரிய கிணறு இருக்கும். தண்ணீரும் கொஞ்சம் உப்பு கலந்துதான் இருக்கும். தென்னந்தோப்பின் காவலே நானும் Read more

ஊழிற் பெருவலி

ஒழுகினசேரி பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸூக்காகக் காத்திருந்தேன். எனது ஆட்டிறைச்சிக்கடை ஒழுகினசேரி பாலத்தில் இருந்து சுடுகாடு போகும் பாதையில் இருக்கிறது. வாரம்தோறும் புதன்கிழமை வள்ளியூர் சந்தைக்கு ஆட்டுத் தோலை விற்கப் போவேன். அதுபோல தான் அன்றும் பஸ்ஸூக்காக நின்றிருத்தேன். பஸ் ஸ்டாப் ஒருகினசேரி பாலம் தாண்டி இருக்கிறது. நான் போவதற்கு முன்னாடியே அங்கு அழுக்குச் சீலையோடு போதையில் ஒருபெண் படுத்துக் கிடந்தாள். சீலை விலகி கால் முட்டி வரை தெரிந்தது. அதில் Read more

கணையாழி

நான் நினைக்கவே இல்ல இப்படி நடக்குமென்று ”நீ இப்புடியா பேசுவாய் …என்ன என்னண்டு நெனசாய்டா. உண்ட பகடிக்கு இங்க இருக்கிற ஆக்கள்தான் செரி … எனக்கிட்ட வெச்சிக்காத நானும் உன்னப் போல ஒரு அரசாங்க ஊழியந்தான்..” கபீல் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு காரியாலயத்தை விட்டு வெளியேறினான் நான் வாயடைத்துப் போனேன் . அவன் இப்படிப் பேசுவானென்று நான் கொஞ்சங் கூட எதிர்பார்க்கவில்லை. நான் நகைச்சுவையாகத்தான் சொன்னேன். அவன் சீரியஸாக எடுத்துக் Read more

எங்கும் நிறைந்தவன்

ஓதி முடித்தத் திருமறையை உறையிலிட்டு மூடி வைத்துவிட்டு எழுந்த உஸ்மான் ஹாலில் இருந்த இருக்கையில் வந்து அமரவும், கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய அவர் அண்ணன் மகன் அஸ்கர், “அஸ்ஸலாமு அதலக்கும் சாச்சா…” என்றவாறு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. “வஅலைக்குமுஸ்ஸலாம் அஸ்கர். இப்பத்தான்ன் வர்றியா?” என்று கேட்டார். “ஆமாம் சாச்சா..” என்ற்வாறு புத்தகங்களை ஷெல்ஃபில் வைத்துவிட்டு வந்து அவர் அருகில் அமர்ந்தான் அஸ்கர். “சாச்சா, உங்களுக்கு ஓர் அதிசயத்தைக் காட்டப் Read more

யார் அந்த நிலவு?

பக்கத்து வீட்டு பரிமளம் வந்து அந்த விஷயத்தைச் சொன்னதிலிருந்து ரேகாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. “நீ என்னப்பா சொல்றே? சரியா பார்த்தியா?” என்று மீண்டும் நம்பமுடியாதவளாய்க் கேட்டாள் ரேரகா. “பஜார்ல காய் கறி வாங்கப் போயிருந்தேம்பா. யாரோ ஒரு பொண்ணை ஸ்கூட்டர்ல உட்கார வச்சுக்கிட்டுப்போய்க்கொண்டிருந்தார் உன்னோட வீட்டுக்காரர்” – திரும்பவும் சொன்னாள் பரிமளா. ‘குபீர்’ என ஆத்திரம் அவள் உடல் முழுக்கப் பரவியது. யாரவள்? கேள்வி எழுந்து அவள் மண்டையைக் குடைய ஆரம்பித்தது. Read more

தாய்மை

“என்னங்க இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கும் இல்ல உங்க அம்மா இருக்கணும் யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கங்க” “என்ன மகா என்ன பண்ணுச்சி அந்த கிழவி… நீ ஏன் டென்சனாகுற… ” ” எனக்கு பிடிக்கல அவ்வளோதான்… சீக்கிரம் நானா அவங்களானு முடிவெடுங்க… ” ” நான் இதுக்கொரு முடிவு கட்றேன்… நீ கிளம்பு செல்லம் நாம சினிமாவுக்கு போய்ட்டு அப்படியே ஒரு நல்ல ஓட்டலுக்கு போய் நைட் Read more

சந்தர்ப்பம்

என்னையா கேஸு? ” “ஐயா பொண்டாட்டி தலைய துண்டா வெட்டிட்டு கத்தில ரத்தம் சொட்ட சொட்ட வந்து சரண்டர் ஆகியிருக்கான்யா !!” “அந்தாள லாக்கப்ல உக்கார வச்சிட்டு டீ சொல்லுயா!” பொறுமையாக டீ யை குடித்தவர் லாக்கப்பைத் திறந்து அவனருகில் அமர்ந்து, “வெட்டிக் கொல்ற அளவு அப்பிடி என்னையா கோவம் உனக்கு ?!” “சார் காலைல வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வரும்போது வீட்ல இருந்து இன்னோரு ஆம்பள வெளியில வந்தா Read more

புதுச் சப்பாத்து

இரவின் இருள் கிழித்து தன் அதிகாரத்தை பரப்பும் முயற்சியில் அதிகாலை சூரியன் தன் கதிர்களை மெல்ல மெல்லப் பரப்பி மலை முகடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தான். அவன் மீது கொண்ட காதலாலோ என்னவோ பனித்துளிகள் எல்லாம் கசிந்து உருகிக்கொண்டிருந்தன. கரைந்து போகும் பனித்துளியின் காதோரம் சேதி சொல்லி காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது. சில்லென்று மேனியை மோதிக் கடக்கின்ற குளிர்ந்த காற்றின் ஈரப்பதனையும் காலைப் பொழுதின் ரம்மியமான சூழலையும் ரசிக்க முடியாதவளாய் சுற்றி Read more

இணைந்த வாழ்க்கை

நல்ல கட்டுமஸ்தான உடல், அதற்கேற்ற உடை. கையில் ஒற்றை மலருடன் உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் கடற்கரையின் மணற்பரப்பில் உட்கார்ந்திருந்தான் அருண்.. பார்வை கடல் அலையில் விளையாடிடும் சிறுவர்கள் மீதும், அவர்கள் விரட்டிடும் நண்டின் மீதும்.. சிறிது நேரம் நினைவில் மூழ்கினான்.. இதே கடற்கரையில் நான்கு வருடங்களுக்கு முன்பு.. மாலதி மற்றும் அவளுடைய சித்தப்பா மகனும் அருணின் நண்பனுமான திலக் , அருண் மற்றும் திலக்கின் அப்பா அம்மா சில நண்டு Read more