ஒழுகினசேரி பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸூக்காகக் காத்திருந்தேன். எனது ஆட்டிறைச்சிக்கடை ஒழுகினசேரி பாலத்தில் இருந்து சுடுகாடு போகும் பாதையில் இருக்கிறது. வாரம்தோறும் புதன்கிழமை வள்ளியூர் சந்தைக்கு ஆட்டுத் தோலை விற்கப் போவேன். அதுபோல தான் அன்றும் பஸ்ஸூக்காக நின்றிருத்தேன். பஸ் ஸ்டாப் ஒருகினசேரி பாலம் தாண்டி இருக்கிறது.

நான் போவதற்கு முன்னாடியே அங்கு அழுக்குச் சீலையோடு போதையில் ஒருபெண் படுத்துக் கிடந்தாள். சீலை விலகி கால் முட்டி வரை தெரிந்தது. அதில் அடி வாங்கிய தழும்புகளும், புண் தழும்புகளும் இருந்தன. பல நாட்கள் குளிக்காததுபோல் அவள்மீது நாற்றம் வீசியது. முந்தானை விலகி இருந்தது. எனக்கு செல்போனில் அழைப்பு வந்ததும் அந்த ரிங்டோன் சத்தத்தில் திடுக்கிட்டு, தலைதூக்கி எட்டிப் பார்த்தாள். போனில் என் மகள் கோவில் திருவிழாவுக்கு ஊருக்கு வருவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். அவளிடம் பேசிக் கொண்டிருந்தாலும், போதையில் கிடந்த பெண்ணையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.

அவள் மெதுவாக எழும்பி கொஞ்சம் தள்ளாடியபடியே உட்கார்ந்தாள். இரு புருவத்தையும் தூக்கி கண் கருவிழிகளை மேலே வைத்தபடி என்னைப் பார்த்தாள். நான் பேசி முடித்துவிட்டு போனை பாக்கெட்டில் வைத்தேன். அவளது பிளவுஸ் திறந்து கிடந்ததால், சாறு பிழிந்து எடுத்துவிட்டு வீசும் கரும்புச் சக்கையென அவளது முலைகள் வறண்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. அதில் சின்ன புண் காயங்களும் இருந்தன. ஒரு காலத்தில் இவள் பேரழகியாகத்தான் இருந்திக்க வேண்டும் என்று அவள் நிறத்தைப் பார்க்கும்போது தோன்றியது.

என்னைப் பார்த்துக்கொண்டு சிரித்தாள். நான் சிரிக்காமல் பஸ் வருகிறதா? என இடதுபுறம் திரும்பிப் பார்த்தேன். ‘யென்ன, சிரிச்சா மாறி சிரிக்க மாட்டியா?’ என்று அவள் கேட்டாள். நான் மௌனமாக நின்றேன். ‘ நீ ஆட்டிறைச்சி கடெ செல்வம்தான?’ எனக் கேட்டாள். ‘ஆமா ஒனக்கு எப்புடி தெரியும்?’ என்று கேட்டேன். ‘இந்த நாரோயில்ல, ஒன்னப்போல கொஞ்ச பேரத் தவிர மீதி யெல்லாருக்கும் யென்னத் தெரியும். அதுல பாதி பேரு யென்ன ஓத்துருக்கானுவ. ஓங் கடெயில வேல பாத்த முத்துலிங்கமும் யென்ன ஓக்க அடிக்கடி வருவான். அப்ப ஒங்கிட்ட வேல பாக்கதா சொல்லிருக்கான். நானும் அடிக்கடி இறச்சிக் கடெ வழியா வடக்காத்துக்குப் போவும்போது பாத்துருக்கேன்’ என்று சொன்னாள். நான் சற்று அதிர்ந்து நின்றேன்.

எச்சிலை விழுங்கியபடி ‘ஒனக்கு யென்னப் பாத்தா என்ன தோணுது? தேவிடியான்னு தோணுதா?’ என்று கேட்டாள் ‘அப்பிடி யெனக்குத் தோணல. ஒரு வாழ்ந்து கெட்ட பொம்பளன்னு தோணுது’ என்று சொன்னேன்.

‘நா வாழ்ந்து கெட்டவளா? நான் கெட்டுப் போய்தான் வாழவே தொடங்கினேன். ஒடம்பு வலிக்குது. ஒரு முப்பது ருவா தா. ஒரு கட்டிங் போடணும்’ என்று கேட்டாள்.

அப்போது சைக்கிளில் வந்த ஒரு பையன் சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டு கவரில் கொண்டு வந்த பார்சலை அவளிடம் கொடுத்தான். எதுவுமே பேசாமல் அவள் முந்தானையை விலக்கி முலைகளின் சைடில் தொங்கிக் கொண்டிருந்த பிளவுஸ் ஊக்கை முலைகளை மூடி மாட்டினான். முந்தானையை அவளின் தோளில் நேராகப் போட்டுவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

‘ஒரு பய வந்து ஒன் செம்பர மாட்டி விட்டுட்டு போறான். ஒனக்கி ஒழுங்கா செம்பர மாட்டிட்டு இருக்கணும்னு அறிவு இல்லையா?’ என்று கேட்டேன்.

‘நா செம்பர மாட்டிட்டுதான் படுத்து கிடந்தேன். நா சிக்குலக் கெடக்கும்போது யெந்தத் தேவிடியாப் பயலோ வந்து யென் முலையத் தடவிட்டுப் போய்ருக்கான். இப்ப வந்துட்டு போன பைய யென் மொவன் தான்’ என்று அவள் சொல்ல எனக்குக் குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

‘சரி வாலிபப் பிராயத்துல ஒரு பைய இருக்கானே, இனியாது நீ ஒழுங்கா இருக்கலாம்லா?’ என்று நான் கேட்டதும் சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினாள்.

‘நா ஒழுங்காக் குளிச்சி எடுத்து இருந்தா பாக்கறவனுக்கு யெங்கூடப் படுக்கணும்னு தோணும். இந்தெப் போலீஸ்காரப் பயக்க, பிராத்தல் பண்ணுதியான்னு மாத்தி மாத்தி அடிப்பானுவ. நிம்மதியா இருக்க முடியாது. அதுல இருந்து தப்பிக்கத் தான் இந்த கிறுக்கி, பாண்டச்சி வேசமே போட்டுருக்கேன்’ என்று சொன்னாள்.

நீட்டிப் போட்டிருந்த இரண்டு கால்களையும் கையால் தடவிக் கொண்டிருந்தாள். கால்களில் அடிவாங்கி வீங்கிப்போன தழும்புகள் இருந்தன. சின்ன வட்டவட்ட புண் தழும்புகளும் தெரிந்தன. ‘யென்னப் பத்தி ஒனக்கு யெதாவது தெரியுமா? என்று கேட்டாள். தலையை ஆட்டிக் கொண்டே ‘தெரியாது’ என்று சொன்னேன்.

‘நா பத்தாம் கிளாஸ் படிக்கும்போது, ராஜா தியேட்டர்ல, யென் ப்ரெண்ட்டுகூட ‘ராஜாவின் பார்வையிலே’ படம் பாக்க வந்தேன். அப்போ நா ரொம்ப அழகா இருப்பேன். நாங்க இருந்த சீட்டுக்குப் பின்னாடி இருந்தவன் கால வச்சி தட்டிட்டே இருந்தான். நானும் திரும்பிப் பார்த்தேன். ஆளு நல்ல வாட்டசாட்டமா அழகா இருந்தான். அதனால சும்மா இருந்தேன். மறுபடி தொடர்ந்து தட்டிக்கிட்டே இருந்தான். அவெனத் திரும்பிப் பாத்து பாத்து யெனக்கும் புடிச்சிப் போச்சி. படம் முடிஞ்ச ஒடனே யெங்க பின்னாலயே வந்துட்டான். நானும் திரும்பிப் பாத்து திரும்பிப் பாத்து வந்தேன்.

யெங்க ஊருக்கு வந்ததும் நா வீட்டுக்குப் போய்ட்டேன். மறுநாளும் வந்துட்டான். வந்து பேசினான். யென்ன புடிச்சிருக்குதுன்னு சொன்னான். யெனக்கும் அவனெப் புடிச்சிருந்ததாலே அவென் யென்ன பாக்க டெய்லி வந்தான். அப்ப ஒரு நாளு, வா நாம படம் பாக்கப்போலாம்னு கூப்ட்டான். நானும் போனேன். படம் பாக்கும்போதே யென் ரெண்டு முலையையும், தொடயயும் தடவிக் கொண்டிருந்தான். என்னால அதுக்கப் பொறவு சும்மா இருக்க முடியல. ஒடம்பெல்லாம் காமத்தீ பரவி நின்னுச்சி. வா கல்யாணம் பண்ணிக்கலாம்னு கூப்பிட்டான். நானும் அவென்கிட்ட மயங்கி கிடந்ததுனால சரின்னு அவென்கூட பைக்கிலப் போய்ட்டேன்.

செம்மாங்குளத்துக்குப் பின்னாடி ஒரு வீட்டுல கொண்டுபோய், ரெண்டு நாளுல கல்யாணம் பண்ணிக்கலாம் இங்கெயே இருப்போம்னு கட்டிப்புடிச்சி ஒடம்பத் தடவுனான். அதுக்கப் பொறவு அவுத்துப் போட்டுட்டோம். மொத்தமா முடிச்சிட்டான். வெளியே போவான் மறுபடி வந்து ஓப்பான். போவான் வருவான் ஓப்பான். இதுதான் நடந்துட்டே இருந்தது.

பக்கத்து வீட்டுல உள்ள வயசான பொம்பள யெனக்கு நேரத்துக்கு நேரம் சாப்பாடு தரும். அப்பதான் அவெ சொன்னா, ‘யெ மக்கா, எப்புடிட்டி இவெங்கிட்ட வந்து தொலைக்கிய?. அவெனுக்கு ஏற்கெனவே கல்யாணமாச்சி ரெண்டு புள்ள இருக்கு. அதுக்கப்பொறவும் பாக்குற எல்லாத்தையும் கல்யாணம் பண்ணுகேன்னு ஏமாத்திக் கொண்டுவந்து, நல்லா ஓத்து முடிச்சதும் ஒவ்வொருத்தனுக்காக் கூட்டிக் கொடுத்து பைசா சம்பாதிப்பான். பக்கத்துல ரெண்டு வீட்டுல இருக்க நாலுமே இவென நம்பி வந்து ஏமாந்ததுக தான். திரும்பிப் போவ முடியாம நரகத்தை அனுபவிச்சிட்டு இருக்கு. அவென் சாராயம், அரிஸ்டம் விக்கிறவென். பெரிய பெரிய ரவுடி டீமுக்கூடயும் பழக்கம் உண்டு. நீ சின்னெப் புள்ளயா இருக்க. இங்கெ இருந்து போய்டு மக்கா. என்னெயும் இதுபோல ஒருத்தன்தான் ஏமாத்துனான். நா இப்ப கஞ்சா வித்துட்டுருக்கேன்’ என்று சொன்னாள்.

அப்ப எனக்கு அழுகையா வந்திச்சி. திரும்பி போவவும் மனசு வரல. யெங்க அம்மையும் அப்பாவும் கவர்மெண்ட் டீச்சருங்க. நா திரும்பிப் போனா, அவியளுக்குக் கேவலம்னு போவாம இருந்துட்டேன். எல்லா எடமும் தேடிட்டு மூணு மாசம் கழிச்சி, நா இருந்த எடத்துக்கு யென் அம்மையும் அப்பாவும் வந்தாவ. அம்ம ஒரே அழுக. இப்படி பண்ணிட்டியேன்னு அப்பாயும் ஒறஞ்சி போய் நின்னாரு. ரெண்டுபேரும் நீ வா நாம வீட்டுக்குப் போவலாம்னு கார் புடிச்சி கூட்டிட்டுப் போவப் போகும்போது, நா தப்பிச்சு ஓடிட்டேன். அப்ப யென் வயித்துல கரு உண்டாயிருந்திச்சி.

அவெங்க போன பொறவு மறுபடியும் அந்தெ வீட்டுக்குப் போனேன். யென்ன கொண்டு வந்தவன் வடசேரி ரோட்டுல ஓடோட ஒருத்தனை வெட்டிக் கொன்னதுல, அந்த ஆள போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க. அவெனுக்க கூட்டாளிங்க, யென்ன பாக்க வருவதுபோல யென் ஒடம்ப ஒரசத் தொடங்குனாங்க. வலுக்கட்டாயமாப் படுக்க வெச்சானுக. போலீஸ்காரனுங்க அடிக்கடி வரத் தொனங்குனாங்க. பக்கத்து வீட்டுக்காரிய கூட படுக்க வரக்கூடியவனுவள விட்டுட்டு, அவளுகள போலீஸ் புடிச்சிட்டுப் போகும்.

அப்படி ஒரு நாளு யென்னயும் எஸ்ஐ துரை பாத்துட்டான். அவென் ராத்திரி வந்தான். யென்ன மிரட்டுனான். ஓத்தான். அடிக்கடி வரத் தொடங்குனான். காணக்குறைக்கு யென்னக் கொண்டுவந்த ராஜூவுக்க கூட்டாளிங்க வேற… வயித்துல கரு ஏழு மாசமாச்சி. அப்பதான் பக்கத்து வீட்டு கஞ்சாக் கிழவி சொன்னா. ‘மக்கா வயிறுவேற பெருசாகிட்டு. இவெனுவக ஒன்ன ஒழுங்க புள்ள பெக்க விடமாட்டானுக. அதனால ஒரு வழி சொல்லுகேன் கேட்குறியா?’ன்னு கேட்டா. ‘என்னது?’ ன்னு நானும் கேட்டேன். ‘கொஞ்சம் கஞ்சா தாரேன். நீ குமார் தியேட்டர் பக்கத்துல நில்லு. நா ஆள அனுப்புகேன். போலீஸூக்கும் தகவல் கொடுக்கேன். அப்ப போலீஸ் வந்து ஒன்னப் புடிச்சி ஜெயில்ல போடும். நீ ஜாமீனுல வரமாட்ட. அதெனால ஜெயில்லயே புள்ளய பெத்துரு’ன்னு சொன்னா. என்னால அழுகைய நிறுத்த முடியல

வேற வழியில்லாம அவெ சொன்னதைப் போல செஞ்சேன். ஜெயிலுக்குப் போனேன். அப்பதான் ராஜூக்கு ஆயுள் தண்டனை கிடைச்சிருக்குன்னு தகவல் கெடைச்சி, ஜெயில்ல எல்லாருமே ராஜூக்க கீப்புன்னு கூப்புடுவாங்க. அங்கெ உள்ள போலீஸ்காரிய அறுக்குற அறுப்புலதான் கெட்டவார்த்தையே படிச்சேன். பிள்ள பொறந்த பொறவு அங்க உள்ள வார்டன் யென்ன ரொம்ப நல்லாப் பாத்துகிட்டா.எல்லாப் பொருளும் வாங்கித் தருவா. அப்ப ஒரு நாளு ‘யென் வீட்டுக்குப் போய்ட்டு வரலாமா?’ன்னு கேட்டா . நானும் சரின்னு காருலப் போனேன். அங்க ஒரு ஆம்பள மட்டும் இருந்தான். யெங் கையில இருந்த புள்ளய வாங்கிட்டு, ‘நீ அவருகூடப் பேசிட்டு இரு’ ன்னு சொல்லிட்டு வெளியப் போய்ட்டா. அந்த ஆம்பள போலீஸ் டிஎஸ்பின்னு சொன்னான். ‘ நா சொல்லுறத கேட்டா, ஒன்ன சீக்குரம் வெளிய விட்டுருகோம்’னு சொன்னான். அடுத்து வேற என்ன கேட்டுருப்பான்னு ஒனக்கே தெரியும்’ என்று சொல்லிச் சிரித்தாள்.

எனக்கு அவளின் வலி கொச்சையாகத் தெரியவில்லை. பைக்குள் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து குடித்தேன்.

‘கொஞ்சம் தண்ணீ தா. இந்தெ ரெண்டு இட்லியயும் தின்னுருகேன்’ என்று கேட்டாள் . பாட்டிலைக் கொடுத்தேன். அவள் சாப்பிடுவதை மட்டும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வள்ளியூருக்கு பஸ் வந்தது. அதில் நான் ஏறவில்லை. உடனே என்னைப் பார்த்து அவள் சிரித்தாள். மீதிக் கதையையும் கேட்க நான் நிற்கிறேன் என்று புரிந்து கொண்டாள். சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் தண்ணீரில் கையை நல்லாக் கழுவாமல் எச்சிலை சீலையில் துடைத்துக் கொண்டு பாட்டிலை என்னிடம் நீட்டினாள்.

சீலையில் வாயைத் துடைத்துவிட்டு ‘அதுக்கப் பொறவோ நாலஞ்சு மாசம் கழிச்சி வெளிய வந்தேன். எங்கெயும் வேலைக்குப் போக முடியல. எல்லாரும் யென்ன படுக்க வைக்கத்தான் நெனைச்சாங்க. இந்தெ ஒடம்புக்குள்ள ஒரு உசுரும் இருக்கும்னு யாரும் நெனைக்கல. எஸ்.ஐ துரையும் அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணுனான். இன்ஸ்பெக்டர்கூட படுக்கக் கூப்புடுவான். குழந்தையைக் கஞ்சா விக்குற கிழவி பாத்துக்கிடும். அதானல நா கொஞ்சம் நிம்மதியா இருந்தேன்.யெங்கூடப் படுக்குறவனுக தரக்கூடிய ரூவாய அந்தெக் கிழவிகிட்ட குடுத்து, புள்ளயப் பாத்துக்கச் சொல்லுவேன்.

போலீஸ்காரனுவ மட்டும் ருவா தரமாட்டானுவ. நாரோயில் மூணு ஸ்டேஷன் லாக்கப்புலயும் யென்ன போட்டு இன்ஸ்பெக்டருக ஓத்துருக்கானுவ. எல்லாத்யுதையுமே விட்டுட்டு பூக்கட்டி விக்கலாம்னு ராஜேஷ் தியேட்டர் முன்னாடி வித்துட்டு இருந்தேன். அப்ப காருக்கு டீசல் போட வந்த எம்.எல்.ஏ. யென்னப் பாத்துட்டான். அவெனும் விசாரிச்சி எஸ்.ஐ துரை மூலமாப் பிடிச்சான்.

துரையும் யெங்கிட்ட வந்து ‘ரெண்டு நாளு வெளியூர் போணும்வா’ன்னு கூப்பிட்டான். வேற வழியில்லாம அவென் கொண்டு வந்த காருல ஏறினேன். கடம்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனோம். அதுக்கப் பொறவு கன்னியாமரி மெட்ராஸ் டிரையில்ல போலாம்னு சொன்னான். டிரையின்ல ஏசி பெட்டிக்குள்ள கூட்டுட்டுப் போனான். யெனக்கு அவென் மேல அப்ப ஒரு பாசம் வந்திச்சி. கடைசியில பாத்தா அந்தப் பெட்டியில நம்ம நாரோயில் எம்.எல்.ஏ. அவென் கூடப் படுக்க வைக்கத்தான் கூட்டிட்டு வந்துருக்கான்னு தெரிஞ்சிச்சி. எம்.எல் ஏ. சட்டசபைக்குப் போறாவனா? யென்ன சோலி பாக்கா டிரையில்ல வாரவனான்னு தெரியல. அடிக்கடி கூப்பிடுவான். அதுனால போலீஸ் டார்ச்சர் கொறைஞ்சிது.

மறுபடி பூ விக்க வந்தேன். டிஎஸ்பி பூவோட என்னையும் சேர்த்து தூக்கிட்டு வரச் சொல்லி, எதாவது வீட்டுல என்னையும் பூவையும் சேர்த்தே கசக்கி எடுப்பான். ஒருநாளு இப்படித்தான் யென்னைக் கொண்டுபோய் கன்னியாமரில ஒரு லாட்ஜ்ல குளிக்க வச்சிட்டு ஜட்டியும் பாடியும் புதுசா வாங்கித் தந்து போடச் சொன்னான். நானும் போட்டுட்டு நின்னேன். அப்பதான் ஏழுபேரு வந்தானுக. அவெனுகளும் போலீஸ் ஆபிஸர்களுகதான். அவெனுகளுக்கு நான் விஸ்கி ஊத்திக் குடுக்கறதுதான் வேல. அன்னைக்கு எவனுவளும் என்ன ஓக்கல. ஆனா சிகரெட்டால உடம்பெல்லாம் சூடு வச்சானுவ. ஒருத்தன் யென் புண்டை மயிரை சிகரெட்டால கருக்குனான். நா துடிச்சேன். கத்துனேன். முலையில, குண்டியில, தொடையிலனு போதையில எங்கெல்லாம் சூடு வச்சானுவனு அவெனுகளுக்கே தெரியாது.

போலீஸ்காரனுவ கூப்புட்டு போகலன்னா லத்தியால அடி வெளுத்துருவானுவ. இந்தெக் கொடுமையில இருந்து தப்பிக்க ரவுடி ஒருத்தனுக்குக் கீப்பாப் போனேன். ஆரம்பத்துல நல்லாதான் இருந்தான். அவெனப் பாக்க வரக்கூடியவனுக யென்னப் பாத்ததும், அவென்கிட்ட ரேட்டு பேசிருவானுக. அவென் யென்ன வச்சி ஏழெட்டு வருசம் சம்பாதிச்சான். நாரோயிலுக்கு சினிமா சூட்டிங்குக்கு வரக்கூடியவனுகளுக்கும் யென்ன அனுப்பி வைச்சிருக்கான். அவெனையும் கோஷ்டி மோதல்ல வெட்டி கொன்னானுவ. ஒரு சைடுல போலீஸ், அரசியல்வாதின்னு. சில நேரம் காலேஜ் பயக்க கூப்புடுவானுக.

அப்படியே வாழ்க்கை போய்ட்டு இருக்கும்போது சிலபேரு குடிக்க ஊத்தித் தருவானுவ. அதையும் குடிச்சிட்டு அவெனுக கூடப் படுத்துருப்பேன். பீரியட் நேரத்துல கூட யென்ன கொண்டுபோய் கொடுமைப் படுத்துவானுக. வாழ்க்கையில மொத மூணு நாளுதான் நான் செக்ஸை உணர்ந்து அனுபவிச்சேன். அதுக்கப் பொறவு விதிதான் அனுபவிச்சிது.

எம்.எல்.ஏ. மூலமா பூவாருக்கு ஒருதடவ கூட்டுட்டுப் போனானுக. அங்கெ அவென் கட்சியில பெரிய பொறுப்புல இருக்க கூடியவன். அவெனால எதையும் பண்ணமுடியல. என்ன பண்ணச் சொல்லிட்டே அடிச்சிட்டு இருந்தான். திடீருனு யெனக்கு கோவம் வந்துட்டு. அவெனப் போட்டு அடிச்சிட்டேன். அவ்வளோதான். வெளிய நின்ன கட்சிக்காரங்க, யென்னப் போட்டு அடிஅடின்னு அடிச்சானுவ. நா கஞ்சா வித்தேன். ப்ராத்தல் பண்ணுனேனு கேஸைப் போட்டு உள்ளத் தள்ளிட்டானுவ.

ஒன்னரை வருசம் ஜெயில் வாழ்க்கை . அப்ப ஜெயில்ல புது வார்டன் அவெ பொம்பளை, இருந்தாலும் நைட்டு அவெ ரூமுல என்னப் படுக்க வச்சி தடவுவா. யெனக்க முலையயும், கூதியயும், குண்டியயும் அறுத்துப் போட்டுரலாமான்னு தோணும். வெளிய வந்த பொறவும் அதே கொடும’என அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போது என் மனம் கனத்திருந்தது.

‘பல தடவ செத்துப் போக நினைச்சிருக்கேன். ஆனா யெம் புள்ளய நினச்சி முடிவை மாத்திருக்கேன். கஞ்சா விக்குற கிழவி ஸ்கூல்ல யென் மொவனச் சேர்த்து படிக்க வச்சா. அவென் நல்லாப் படிக்கமாட்டான். நிறைய அக்குரமம் பண்ணுவான். தாய் பெத்து தகப்பன் வளத்தணும் இல்ல, தாய் கண்டிப்பானவளா இருந்து வளக்கணும். அப்பதான் பிள்ளைங்களும் நல்லா வளரும். யென் புள்ளக்கு ரெண்டுக்குமே குடுப்புனை இல்ல. அதான் அப்படித் திரிஞ்சான். அவென் ஸ்கூல்ல ஹெட்மாஸ்டர் அவென டிசி வாங்கிட்டுப் போகச் சொன்னாரு . நா ஸ்கூல்லப் போயி, அவெரு காலுல விழுந்து கெஞ்சினேன்.

அப்ப அங்கெ உள்ள கிளார்க்கு அவெருக்க காதுல எதையோ ஓதுனான். உடனே அவெரு ஒரு துண்டுப் பேப்பர்ல ஒரு அட்ரஸை எழுதித் தந்து, இந்த அட்ரஸ்ல சாயங்காலம் ஏழு மணிக்குப் பொறவு போய்ப் பாருன்னு சொன்னாரு. அதுக்கப் பொறவு பிரச்சனை இருக்காதுன்னு சொன்னாரு. நானும் போனேன். கடைசியில பாத்தா, அந்தெ அட்ரஸ் அவர் வீட்டு அட்ரஸ். அவெருக்குப் பொண்டாட்டி இல்ல. புள்ளைங்க வெளியூர்ல படிக்குதுங்க. என்ன காரணத்துக்குலாமோ யார் கூடலாமோ படுத்துருக்கேன். யென் புள்ள படிப்புக்காக ஹெட்மாஸ்டர் கூடப் படுத்தேன். அடுத்த தடவ அவெரு என்னெக் கூப்புடனும்னா ‘ஒன் அம்மாவ என்ன வந்து பாக்கச் சொல்லு’ன்னு சொல்லி விடுவாரு. நானும் ஸ்கூலுக்குப் போகாம, நேரா வீட்டுலப் போயி பாப்பேன்.

யெனக்கு யெவென் கூடயும் படுத்து அதிகமா பணம் சம்பாதிக்கணும்னு ஆச கெடையாது. அதுக்காக நா அலைஞ்சதும் கெடையாது. நம்ம வடசேரி சந்தையில நா உள்ள போனாலே எல்லாவனுமே ஊழைப் போடுவானுக. அயிட்டம், தேவிடியா, சரக்குனு யென் காதுபடவே கத்துவானுக. எதாவது பொருளத் தொட்டா ‘நீ தொடாத, நாங்களே எடுத்துத் தாரோம்’னு சொல்லுவானுக. நா யென் விதிய நெனைச்சிக்கிட்டு நடப்பேன்.

அப்படி ஒரு நாளு நா வடசேரி சந்தைக்குப் போய்ட்டு பஸ் ஸ்டாண்ட்டுல பஸ்ஸூக்கு நின்னேன். வீட்டுக்குப் போவ கையில காய்கறி வாங்குன கவரு. அப்ப வந்த போலீஸ்காரன் ‘யென்ன சுமதி, படுத்து பொங்கி சாப்புட்டுட்டு தான் இப்ப வருவியோ?’ன்னு கிண்டலடிச்சிட்டுப் போனான். அப்பதான் யென் சித்திப் பொண்ணு செண்பா திடீருன்னு யெங்கிட்ட ஓடி வந்தா. அக்கான்னு கூப்பிட்டா. ரொம்ப வருசங்கழிச்சி பார்த்தது. அவெளுட்ட பேசிட்டே இருந்தேன்.

‘அக்கா ஒம் புள்ளயப் பாக்கணும்க்கா. நானும் ஒங்கூட வீட்டுக்கு வாரேன். சாயங்காலம் போய்டுறேன்’னு சொன்னா.
‘வேண்டாம் மக்கா. நீ போ. நானே ஒரு நாளு அவெனக் கூட்டிட்டு வாரே’ன்னு சொன்னேன். அவெ கேட்கல. சரி வான்னு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன். அங்கப் போயி அவெளுக்கு சாப்பாடு குடுத்துட்டு இருக்கும்போது, ரெண்டு போலீஸ்காரனுவ வந்து, “நீ ஒடனே ஸ்டேஷனுக்கு வா. ஒரு கையெழுத்து போடணுமாம். இன்ஸ்பெக்டர் கூட்டிட்டு வரச் சொன்னாரு’ ன்னு சொன்னானுக. நா ‘நாளைக்கு வரட்டா’ ன்னு கேட்டேன். ‘இல்ல இன்னைக்கே போடணும் வா’ன்னு கூப்பிட்டுட்டே இருந்தானுக. ‘சரி நீங்கெ போங்க. நா வாரேன்’ ன்னு சொல்லிட்டு, செண்பாவ வீட்டுல விட்டுட்டு, ‘நா இப்ப வந்துருகே’ன்னு சொல்லிட்டு ஸ்டேஷனுக்குப் போனேன்.

அங்க போன யென்ன புடிச்சி உக்கார வச்சிட்டானுவ. ஏதோ ரெய்டுக்குப் போவும்போது ஒருத்தி மாட்டிருக்கா. அவெ கூட இருந்தது ஒரு பிசினஸ் மேனாம். அவெ அந்தாளோட கீப்பு. அதுனால அவென் போலீஸூக்குப் பணம் கொடுத்து அவெள விடச் சொல்லிட்டான். அவெளுக்குப் பதிலா யென்ன அந்த கேஸூல போட பிளான் பண்ணி கூப்புட்டுருக்கானுவன்னு அப்பறம்தான் தெரிஞ்சிச்சி. நா போலீஸ்ல எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும் எதுவும் நடக்கல. இருட்டிருச்சு. தங்கச்சி வேற வீட்டுல தனியா இருப்பாளேன்னு மனசு ஆலாப் பறந்துச்சி. ‘சார் வீடு வர போய்ட்டு உடனே வந்துருகேன் சார்’ ன்னு எவ்வளவோ கெஞ்சிக் கேட்டேன். விடல. யென்ன மகளீர் ஸ்டேஷனுக்குக் கொண்டு போனாங்க.

காலையில எங்கெ வீட்டுப் பக்கம் இருக்குற கிணத்துல ஒரு பொண்ணு செத்துக் கெடப்பதா போலீசுக்குத் தகவல் வந்திச்சு. எல்லாரும் போனாவ. அடையாளம் தெரியல. அப்ப யென்ன கூட்டிட்டுப் போய் காட்டுனாங்க. நாங்க போறதுக்கு முன்னாடி அந்தப் பொண்ண கிணத்துல இருந்து வெளிய எடுத்துட்டாங்க. நா நேரா வீட்டுல ஓடிப்போய் பாத்தேன். தங்கச்சியக் காணோம். ஒரு வேள அவெ வீட்டுக்குப் போய்ட்டாளோன்னு கிணத்தடிக்குப் போனேன். நா போயிப் பாத்ததும் அப்படியே பொத்துன்னு செத்த பொண்ணு மேல விழுந்துட்டேன். அது… அது… யென் தங்கச்சி செண்பா’ என்று சொல்லும்போது கண்ணீரைக் கண்களால் அவளுக்குத் தடுக்க முடியவில்லை. என் கண்களிலும் நீர் ததும்பி நின்றது. கண்ணீரைத் துடைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.

‘செல்வம், அந்தெ நேரம் நா அனுபவிச்ச வலிய யென் வாழ்க்கையில நா அனுபவிக்கல. செண்பாக்கு இருபத்தேழு வயசு இருக்கும். சித்திரையில கல்யாணம்னு சொன்னா. கடைசியில… ம்ம்ம்…’ என்று சுமதி பெருமூச்சு விட்டாள்.

‘போலீஸ் விசாரிச்சதுல அன்னைக்கு ராத்திரி ரெண்டுபேரு வந்துருக்கானுவ. அவெனுக இவெ அழகா இருக்கதப் பாத்துட்டு அவெளும் யென்ன போலதான்னு நெனைச்சி அவெள வலுக்கட்டாயமா ரேப் பண்ருணியிக்கானுவ. அவெ அலறிட்டுக் கிடந்ததால விறகுக் கட்டையால தலையில அடிச்சிருக்கானுவ. அவெ மயங்கிக் கிடந்துருக்கா. எல்லாத்தையும் முடிச்சிட்டு பாக்கும்போது அவெ செத்துக் கிடந்துருக்கா. ராத்தரியிலேயே அந்தப் பாழும் கிணத்துல தூக்கி வீசிட்டுப் போயிருக்கானுவ. போலீஸ் அவெனுகளப் புடிச்சி அடி தொலிய உறிச்சிச்சி. அவெனுக இப்பெ வெளிய வந்துட்டானுக. இப்ப தொழிலதிபருன்னு சுத்துகானுவ’ என்று சொன்னாள்

என் சிந்தனை பல கோணங்களில் ஓடிக் கொண்டிருந்தது. இதுவரை நான் நாகர்கோவிலில் கேட்டு அதிர்ந்த சம்பவம் அது. செண்பாவைக் கொன்றது ஒரு வழியில் என் சொந்தக்காரர்கள். மனதில் அந்தக் கசப்பை அழிக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. மௌனமாக நின்றேன். பாட்டிலைத் திறந்து தண்ணீரைக் குடித்துவிட்டு சுமதியைப் பார்த்தேன். அவள் தனது உடலைப் பார்த்தாள். அழுக்கு உடலும், சேலையின் கிழிசல்களும் அவளுக்குப் புனிதமாகத் தோன்றியது.

‘என்ன செல்வம், யெம் மேலே பாக்க, இவ்வளவு அழுக்கா பைத்தியக்காரி போல ஏன் இருக்கேனுதான’ என்று கேட்டாள். நான் அமைதியாக நின்றேன்.

‘தங்கச்சி செத்த பொறவுதான் இப்படி அழுக்கா சுத்தத் தொடங்குனேன். நாம குளிச்சி எடுத்து அழகா சுத்துனாதான எல்லாவனும் வாரான். அதுனால பாண்டையா சுத்துனா எவனும் வரமாட்டாலேன்னு இப்படியே திரிஞ்சேன். ஆனாலும் இப்ப நா பிச்சையெடுப்பேன். குடிப்பேன்.

போதையில எங்கயாது படுத்துக் கிடந்தேன்னாலும் ஆட்டோல தூக்கிப் போட்டு எங்கயாது கொண்டுப் போயி சோலிய முடிச்சிட்டு, அப்படியே போட்டுட்டு வந்துருவானுவ. சில நேரம் பஸ் ஸ்டாண்ட்டுல படுத்துக் கிடந்தா, பிச்சைக்காரனுக கூட குடிக்க வாங்கித் தந்து யெங்கூட படுப்பானுக. நரிக்குறவன் கூட படுத்துருக்கான். கையில்லாதவன், காலு இல்லாதவன்னு எவனுக்கெல்லாம் தோணுதோ அவெங்கலாம் குடிக்க வாங்கி தந்து படுத்துருக்கானுவ. ஒரு தடவை ஒரு லெப்பர்ஸி யென்ன ஓத்துருக்கான்னு நெனைக்குறேன். அதான் ஒடம்பெல்லாம் ஒருமாதிரி சொறி வந்துருக்கு. போலீஸ்காரன் முதல் ரவுடி வரை எல்லார் கிட்டயும் வாங்குன அடி இன்னும் வலிக்குது. யென் உயிர் பிரியும் போதுதான் வலியும் பிரியும். அதான் ஒடம்பு வலிக்குது. குடிக்க முப்பது ருவா தா’ என்று அவள் கேட்டாள்.

இக்கதையை எழுதிய ராம்தங்கம்

எனக்குக் கதறி அழவேண்டும் போல இருந்தது. ஆனால் அழுகையை அடக்கிக் கொண்டு பாக்கெட்டில் இருந்து ஐய்ம்பது ரூபாயை ‘இந்தா வச்சிக்க’ என்று எடுத்துக் கொடுத்தேன்.

‘நல்லா இரு’ என்று சொல்லிவிட்டு எழும்பி ரோட்டைக் கடக்க ஆரம்பித்தாள். அப்போது வேகமாக வந்த பைக் அவளின்மீது மோதியது. பொத்தென விழுந்தாள். பைக்கில் வந்த பையன், பைக்கைப் போட்டுவிட்டு அவளைத் தூக்கினான். நானும் ஓடிப் போனேன். ‘வாங்கக்கா ஆஸ்பத்திரிக்குப் போலாம். அடி ரொம்ப பட்டுருக்கும்’ என்று அந்தப் பையன் அவளைக் கூப்பிட்டான்.
‘வாழ்க்கையில எவ்வளவோ அடி பட்டிருக்கேன். இதுலாம் ஒன்னமில்ல. நீ போ மக்கா’ என அவள் சொன்னாள். அவன் விடுவதாக இல்லை. ‘சரி நானே ஆஸ்பத்திரிக்குப் போகேன். ஒரு நூறு ருவா தந்துட்டுப் போ’ என்று கேட்டாள். அவனும் பர்சில் இருந்து ரூபாயை எடுத்து கொடுத்தான். நானும் அந்தப் பையனுமாக அவளை கைத்தாங்கலாகப் பிடித்து எதிர் பஸ் ஸ்டாப்பில் உட்கார வைத்தோம். அவள் பஸ்ஸ்டாப் தூணில் சாய்ந்து இருந்தாள். அந்தப் பையன் கிளம்பினான். நானும் எதிரேஉள்ள பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றேன். அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

போன அந்தப் பையன் கொஞ்ச நேரத்துல திரும்பி வந்தான். எனக்கும் அப்போது பஸ் வந்தது. நான் பஸ்ஸில் ஏறி ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்தேன். அவன் பைக்கை நிறுத்திவிட்டு பஸ் ஸ்டாப்பில் இருந்த அவளிடம் ‘ அக்கா ஆஸ்பத்திரிக்குப் போகலையா?’ என்று கேட்டான். அவள் பதில் கொடுக்கவில்லை. அவளது தோளை அசைத்தான். பொத்தனக் கீழே விழுந்தாள். அவள் உயிர் பிரிந்திருந்தது.

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »