கவிப்பேரரசு வைரமுத்து வாழியவே!
வடுகப்பட்டி ஈன்றெடுத்த வைர முத்து வாழ்வாங்கு வாழியவே ! வாழ்வில் என்றும், துடிப்போடு கவியெழுதும் துள்ளல் உண்டு துணையாகும் இவரெழுத்து துன்பம் போக்கும், படிக்கின்ற வரிகளெல்லாம் பாமரன் போற்றும் பண்பாட்டின் தலையூற்றைப் பதமாய்ச் சொல்லும், வடிக்கின்ற கவியெல்லாம் வாழ்வின் அமுதம் வற்றாது அவர்புகழோ வானும் வாழ்த்தும். திரைத்துறையில் நீராடி தீந்தமிழ்ச் சொல்லில் தினம்விளையா டிவரும்நம் தெள்ளுத் தமிழின் நறைபழுத்தச் சொல்லாளன் நாட்டின் செல்வம் நயமாக எடுத்துரைக்கும் நல்லேர் உழவன், குறையில்லாத் Read more







