எனக்கான கார வெத்தலையில
காம்பு கிள்ளி…
பக்குவமா சுண்ணாம்பு
பாக்கு பரிமாறி…
கொடுத்துபுட்டு நான் மென்னு
தின்னும் வரை காத்திருந்து…
நாக்கு நீட்டு மாமான்னு…
என்…
சிவந்த நாக்க பார்த்தே
பசியாறுவ புள்ள நீ!
ஒருநா… வெத்தலைய
நான் மடிச்சு நீட்ட…
“அய்யோ…
என்ன மாமா… இது…!” ன்னு
நீ வெத்தலை போடாமேயே
உம் முகமெல்லாம் சிவந்து போச்சு!
– கோவை.நா.கி.பிரசாத்
2 Comments
sowkath ali. H · ஜூலை 20, 2016 at 20 h 06 min
நச். எளிமையான வரிகளில் இனிமையான கவிதை.
Ananthi Raghunathan · ஜூலை 29, 2016 at 17 h 45 min
???????