காத்திருக்கின்றேன்

முன்னம் … எப்போதும் போல இல்லா வண்ணம் நேசிக்கின்றேன் உன்னை! என் காதலை உன்னிடம் சொல்வதாய் இல்லை! என்றேனும் உணர்ந்து, நீயாக எனை தேடும் வேளையில் உனக்காக வழங்க மொத்தமாக சேர்த்து வைத்து உனக்கான முத்தங்களை!

ஒற்றை ரோஜா

ஒத்தையடிப் பாதை வழி  புத்தகம் சுமந்த படி நான் போகையில் ஒற்றை மலரோடு அத்தை மகன் வந்து நின்றான். தெத்துப் பல் தெரியும் வண்ணம் புன்னகை புரிந்தான். கொத்தோடு முள்ளிருந்த ஒற்றை ரோஜா மலர் கொடுத்து மொத்தமாக என்னை கொள்ளை கொண்டான். சின்ன ரோஜா மலர் சுகந்தம் பரப்ப, மெல்லமாக. என் சிவந்த இதழ் இரண்டும் சின்னதாய் முத்தம் பதிக்க! மலர் கொடுத்த அத்தை மகன் வெட்கம் கொண்டான். முத்தம் Read more

நா.முத்துக்குமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி

பாட்டொன்று எழுதுவதற்கு அமர்ந்து விட்டால் பசிதூக்கம் அத்தனையும் மறந்தே போய் மெட்டினையே நினைவினிலே அசை போட்டு மெல்லிசையை அதனிலே கரைவ தற்கே இட்டமுடன் பாட்டெழுதி தந்து விட்டு இமைமூடாமல் இருந்தது எத்தனை நாளோ ? பூட்டிவைத்த இதயங்கள் கொண்ட பேரும் பொன்னான உன்பாட்டில் கரைந்த னரே ! வெள்ளித் திரையதற்கு பாடல் போதுமென வான்திரைக்கு வந்த்துவோ ஆசை கொஞ்சம் அள்ளித்தான் அணைத்த்துவே அன்பு கவியை அரும்பாடல் தனைசெய்து தேசத்தின் விருதினை Read more

உன்னதமாம் சுதந்திரத்தை உயிராகக் காப்போம்!

காந்தியெனும் உத்தமரால் சுதந்திரத்தைக் கண்டோம்! ….. காவிவண்ணத் தியாகத்தை அவருருவில் கண்டோம்! சாந்தியெனும் சத்தியத்தின் சீலராகக் கண்டோம்! ….. சரித்திரத்தில் வெள்ளைவண்ணத் தவஒளியைக் கண்டோம்! காந்தியத்தின் மகிமையெல்லாம் கற்பதிலே கண்டோம்! ….. கருத்தானப் பசுமைவண்ணம் அவர்செயலில் கண்டோம்! ஏந்தியுரைச் செய்திடுவோம் ஏற்றத்தைக் காண்போம்! ….. இயக்கமான சக்கரத்தை இதயத்தில் வைப்போம்! வெள்ளையனே வெளியேறு விளங்கிடவே சொன்னோம்! ….. வென்றதனால் அந்நியனை விலகிடவே செய்தோம்! நல்லமனம் சுதந்திரத்தை நயப்புறவே பெற்றோம் ….. Read more

மௌனம்

மௌனமே மொழியானது உனக்கும் எனக்கும் மந்திர விழி பேசுது மயக்கம் கிறக்கம் சுந்தர கவியானது இதய இயக்கம் சேர்ந்திட முடியாதது வாழ்வியல் குழப்பம் கனவினில் கூத்தாடுது பேசாத அன்பின் நெருக்கம் விடிந்ததும் மனம் ஏங்குது புரியாத வார்த்தையின் விளக்கம் உறவினில் கலந்தாயே சிறகுகள் விரிக்க விறகாக்கி எரிப்பாயோ இந்த வீணையை உணராமல் இல்லை உலகாக்கி கேட்டு மகிழ்வாயோ இந்த ஊமையை சபை ஏற்றி மகிழ்வாயோ

எழுதத் துடிக்கும் மனசு…!

எழுதத் துடிக்கிறது என் மனசு.. எழுத காகிதம் காணாமல் கனக்கிறது மனசு.. மெய்யான ஒன்றை பேனா மையால் தான் எழுத வேண்டுமா..? என் இதயக் காகிதத்தில் இரத்தத்தால் எழுதி வைத்த கிறுக்கல்களை மொழிபெயர்க்கிறேன்..! நான் ஒரு இரட்டைப் பிறவி.. உயிர்ப் பலிகளுக்கு உடன் பிறப்பு யுத்த பூமி என் பிறந்தகம் – அங்கு செத்த உயிர்களே என் ஊர் மக்கள்.. உயிர் குடித்ததற்கு அத்தாட்சியாய் ஈட்டி முனையின் ஈற்று விளிம்பில் Read more

நட்பு

அன்புகொண்ட நண்பரோடு பழகுகின்ற போதினில் என்புஞ்சதையும் உள்ளதுபோல் இருவர்நட்பும் அமையுமே. எந்தநாளில் எந்தநேரம் என்னதீமை நேரினும் அந்தநாளில் அந்தநேரம் அதனைப்போக்க நண்பனே மின்னல்போல வந்துமுன்னே இன்பஞ்சேரச் செய்வனே. துன்பங்கூட நண்பனாலே இன்பமாக மாறுமே. வாழுகின்ற போதிலன்பு நண்பரொன்றி இருக்கையில் சூழுகின்ற இன்பதுன்பில் வானும்மீனும் தோற்குமே. இன்பமொன்றே வேண்டுமென்று எண்ணுவீரேல் யாவரும் இன்றுதொட்டு நண்பரையே தேர்ந்தெடுத்து வாழ்கவே . நல்லநண்ப ராகஎன்றும் வாழுகின்ற நண்பரே வெல்லமாக உள்ளநட்பு விளங்குமென்றும் நன்றுதான்.

​உச்சிக் குளிருதடா!

கட்டி அணைக்கையிலே உச்சிக் குளிருதடா! விட்டு விலகையிலே நெஞ்சம் கணக்குதடா! உந்தன் ஸ்பரிசமது உயிரைப் பிழியுதடா! எந்தன் மனசினிலே இன்பம் வழியுதடா ! உச்சி முகர்ந்தாலே உள்ளம் சிலிர்க்குதடா! எச்சில் அமுதமாக என்றும் இனிக்குதடா! மீசைக் குத்தினாலும்மி ருதுவாய் இருக்குதடா! ஆசை நிரம்பிடவே அன்புப் பெருகுதடா! அள்ளி அணைக்கையிலே அச்சம் தடுக்குதடா! சொல்லும் வார்த்தையிலே சொர்க்கம் தெரியுதடா! முத்தம் பதிக்கையிலே மேகம் கருக்குதடா! சத்தம் இன்றிமழை சாட்சியாய் இறங்குதடா! உன்னை Read more

கன்னியே

சிலைபோல் மேனி சிரித்தால் பூ நீ சிந்தனை வளைக்குதடி – கடல் அலைபோல் உந்தன் நினைவே எந்தன் அடிமனம் துளைக்குதடி கண்ணே உன்னைக் காணக் காணக் கனவுகள் வளருதடி – என் திண்மை மனமும் சேயிழை உன்னால் தேய்ந்தே தளருதடி கனியே உந்தன் மதிமுகம் கண்டால் காலம் மறக்குமடி – எந்தக் கனிந்த நல்ல துறவியின் மனமும் துறவைத் துறக்குமடி கறுப்பே களையாம் யாரோ சொன்ன கருத்தும் உண்மையடி – Read more

அப்துல் கலாம்

(முதலாமாண்டு நினைவஞ்சலி :27/07/2015) விஞ்ஞானம் வென்றீரே; மனங்கள் யாவும் … விதைத்தவித்து விளைந்துநிற்க கண்டீ ரில்லை அஞ்சாமை அகற்றினீரே; அறிவுக் கண்ணை … அகத்தினிலே சுடர்விடவேச் செய்த நீவிர் நெஞ்சமெலாம் நிறைந்தமகான் கலாமென் போமே … நேர்படவே வாழ்த்துகாட்டி நெறிகள் சொல்லி மிஞ்சிநிற்கும் மனிதகுல மாண்பு நீரே … மின்னிமறைந் திடவல்ல வாழ்வும் என்றோய். விஞ்ஞான சிறப்பெல்லாம் உன்னைப் பாட … வீணாகா இளைஞர்கள் மனத்தில் நின்றாய் மஞ்சத்தின் பிடிமறந்து Read more