காந்தியெனும் உத்தமரால் சுதந்திரத்தைக் கண்டோம்!
….. காவிவண்ணத் தியாகத்தை அவருருவில் கண்டோம்!
சாந்தியெனும் சத்தியத்தின் சீலராகக் கண்டோம்!
….. சரித்திரத்தில் வெள்ளைவண்ணத் தவஒளியைக் கண்டோம்!
காந்தியத்தின் மகிமையெல்லாம் கற்பதிலே கண்டோம்!
….. கருத்தானப் பசுமைவண்ணம் அவர்செயலில் கண்டோம்!
ஏந்தியுரைச் செய்திடுவோம் ஏற்றத்தைக் காண்போம்!
….. இயக்கமான சக்கரத்தை இதயத்தில் வைப்போம்!

வெள்ளையனே வெளியேறு விளங்கிடவே சொன்னோம்!
….. வென்றதனால் அந்நியனை விலகிடவே செய்தோம்!
நல்லமனம் சுதந்திரத்தை நயப்புறவே பெற்றோம்
….. நாட்டுநலம் காக்கின்ற நமதுரிமை கொள்வோம்
உள்ளமதில் காந்தியவர் உயர்வினிலே ஆண்டோம்
….. உருப்படியாய் ஒருநாடாய் உருவாக்கிக் கொண்டோம்
நல்லதமிழ் திறமனைத்தும் நாம்காக்க வேண்டும்
….. நல்லோர்கள் பார்வையிலே நனிசிறக்க வேண்டும்!

கற்றவரும் சமநோக்கில் கலந்திடவே வேண்டும்!
….. கலைபலவும் சிதையாமல் காத்திடவே வேண்டும்!
பெற்றவரும் தாய்மொழியைப் பெரிதுவக்க வேண்டும்!
….. பிள்ளைகளின் மனதினிலே பிணைத்திடவே வேண்டும்!
நற்றவரும் வாழ்த்துரைக்க நாடுயர வேண்டும்!
….. நலமான திட்டங்கள் நாடிடவே வேண்டும்!
உற்றவரும் மற்றவரும் ஒன்றாக வேண்டும்!
….. உன்னதமாம் சுதந்திரத்தை உயிராகக் காப்போம்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.