உங்களில் ஒருத்தி

காதறுந்த மஞ்சப்பைதான் SCHOOL BAG.. அரசு நடுநிலைப்பள்ளி ஐந்தாம்வகுப்பு வரை. பாலினப் பேதமின்றி, “இவன் அடிச்சான் டீச்சர்” “இவள்என் சிலேட் ஒடச்சுட்டா”.. இதான் அதிகபட்ச! பசங்க பொண்ணுங்க குற்றச்சாட்டா இருக்கும்.. மதியம் பெரும்பாலும் பழையசாதம். ஊறுகாய்மட்டைக்கு ரெண்டு பைசா. இதுதான் லஞ்ச்.. எப்போதோ இட்லி. சக தோழர்களும் நடுத்தரவசதிதான் என்னைபோல. தோழர்கள் பிட்சா பர்கர் போல அதிசயமாய் பிய்த்துக்கொள்வார்கள். அவர்கள் கொண்டுவரும் பழையது எப்போதும் போல் எனக்கு.. எட்டாம்வகுப்புவரை அப்பள்ளியில் Read more

பதறிய காரியம் சிதறிப்போகும்

வாலிபமிடுக்கு, வாலிப்பான உடற்கட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரும்பிய மீசை, வாழ்க்கையின் அத்தியாயங்களை மீட்டவொண்ணா பேதலித்த நிலையில் ஜடமாய்ப் படுத்திருந்தான் பருவக்காளை விசாகன். குமுறிக்குமுறி அழுத கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் தாரை தாரையாக வடிய அவன் முன்னே அமர்ந்திருந்தாள் அவன் தாய் அமலா.   ஆண்டாண்டு காலங்கள் வானொலி என்னும் சமுதாய முன்னேற்ற வான் பரப்பில் பொன்மொழிகளையும்,  வாழ்வியல் சிந்தனைகளையும் வடித்து வடித்து பிறர் வாழ்வுக்கு வளம் சேர்த்த இந்த உள்ளமானது Read more

உனக்கென இருப்பேன்…

3 நிமிட சிறுகதை “ஹாய்டா ராஜேஷ்..” “ஹாய் உமா.. என்ன சர்ப்ரைஸ் காலிங்..” “என்னமோ தெரியலடா.. இன்னிக்கி காலையிலேயிருந்தே ஒன்னோட நெனப்புதான்.. அஞ்சி வருஷத்துக்கு முன்னால இந்த தேதியிலதான் நாம மொதமொதலா சந்திச்ச நாளுங்குறதாலகூட இருக்கலாம்..” “ஓ.. அதுக்கப்புறம் நம்ம வாழ்க்கையில எவ்ளவோ நிகழ்ச்சிகள் நடந்துட்டதால நா மறந்துட்டேன் உமா.. காதல்ல பெண்களுக்கு மட்டும் ஞாபகசக்தி அதிகம்தான்..” “ஆமா ராஜேஷ்.. சிட்டியிலேயிருந்து ஒங்க கிராமத்துக்கு என்.எஸ்.எஸ். கேம்ப்க்காக வந்த என்ன Read more

நன்றி மறந்த சிங்கம்

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன். அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன். “மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்ற குரல் கேட்டது. தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன். அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு Read more

காத்திருப்பு

பிரண்டு படுத்த படுக்கையிலே தடவிப் பார்த்த கைகளுக்குத் தட்டுப்படாத மனைவி தேகம் உணர்ந்து துடித்தெழுந்தான் விஜய். என்ன செய்கிறாள் இவள். இன்னும் நித்திரை கொள்ளாமல் அவன் கைபட்டு மின்சாரம் தொழிற்பட்டு மின்விளக்கு வெழுத்தது. அறையின் வெளியே அவதானித்தான். சமையலறை வெளிச்சம் கதவிடுக்கூடாக கண்களுக்குப் பட்டுத் தெறித்தது. சமையலறை சென்றான். அங்கு மேசையிலே கைநீட்டிக் கையே தலையணையாய் மேசைமேல் முகம் புதைத்து தனை மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள், கீதா. “கீதா……” தட்டி Read more

கண்ணுக்கு ஏன் கறுப்புக் கண்ணாடி?

வாசல் கதவை விரைவாய்த் திறந்து ஓடி வந்த பவித்ரா, விசையாகத் தன் கைப்பையைச் சுழற்றி எறிந்தாள். கட்டிலில் சடாரென்று விழுந்தாள். வெம்மி நின்ற அழுகை வெடித்தது. அடக்கமுடியாத கண்ணீர் மடை வெள்ளம் திரண்டதுபோல் தாரைதாரையாகத் தலையணையை நனைத்தது. விரக்தியின் விளிம்பில் நின்று விசும்பினாள். பவித்ரா அழகுப்பெண். திருமணநாளுக்காய் நாள்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கும் கனவுக் கன்னி. கௌரவமான குடும்பம், வெளிப்படையான போக்கு, பெற்றோற் பேச்சுக்கு மறுப்புக் கூறி அறியாத பண்பு. கல்லூரிப்படிப்பைக் Read more

வசீகரம்

நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் ‘சொல்லுடா..’ என்றான். ‘எங்கடா இருக்க… இண்டர்வியூ போனியே என்னாச்சு..’ என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ். ‘மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன்டா.. கடைசி ரவுண்ட் ஹெச்.ஆர். ரவுண்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்…’ என்றான் அன்வர். ‘ஓ.. ஓ.கே.டா.. நல்லா பண்ணு.. ஆல் தி பெஸ்ட்… நான் அப்பறமா கால் பண்றேன்’ என்று Read more

கீறல்கள்

முகில்கள் மறைத்துக் கொண்டிருக்க, அதனூடே தனது ஒளிக் கீற்றை நுழைக்க, பகீரதப் பிரயத்தனம் செய்து, வெற்றியும் கண்ட சூரியன், வெளி மண்டலத்தில் தனது கதிர்களைப் பரவவிட்டுக் கொண்டிருந்தான். இளவேனில் காலந்தான் இது என்பதை, ஓரளவுக்காவது, பிரதிபலிப்பதாக இருந்தது. அன்று இந்துக்களுக்கு ஒரு விசேட நாள். விரதம் இருப்பவர்கள், தமது துன்பங்களை கடவுளிடம் முறையிட வருபவர்கள், நண்பர்களை சந்திக்க வருபவர்கள், இப்படியாக எல்லா ரகத்தை சேர்ந்தவர்களாலும், பிள்ளையார் கோயில் நிரம்பி வழிந்து Read more

விறகுவெட்டி

– கே.எம். சுந்தர் ஸ்டீபன் அண்ணன் வீட்டில் விறகு வாங்காமல் மரத் துண்டுகளாக வாங்கி உடைத்துக் கொள்வார்கள். 20 பேர் கொண்ட குடும்பத்தின் வரவு சிலவுகள் 40 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்க முடியும் என்பது இப்போது புரிகிறது. மர முண்டுகள் வந்து இறங்கியவுடன் 60 வயதுக்கும் சற்று அதிகமான “கருப்பசாமி”யும் அடுத்த நாள் காலையில் அதிகாலையில் தன்னுடைய சரக் புரக் செருப்புகளோடு வந்து விடுவான். அவனுடைய கெட்டித் தோல் Read more

கொஞ்சம் ஏ டைப் ஜோக்

ஏ.டி.ஆர் விமானத்தில் சக பயணியாக இறங்குபவர்களை எளிதில் அடையாளம் கண்டுவிட முடிகிறது. அப்படித்தான் அவரை அடையாளம் கண்டுகொண்டு, அவர் வியந்து, கட்டிப் பிடித்து, கை கொடுத்து விடைபெற்றபின், நண்பர் கேட்டார். “அவர் தானே?” “ஆமா” “நிஜமாவே அவர் தானே? அந்தxxx கம்பெனியில இருந்த ஜி.எம்?” “ஆமா” என்று அழுத்தமாகச் சொல்லி சீரியஸாக நடக்க முயன்று தோற்று, சிரித்தேன் (தோம்) விசயம் இதுதான். ஒரு வருடம் முன்பு , மஹாராஷ்டிரத்தின் பின் Read more