Welcome Tamilnenjam

வணக்கம்!

நாணுகிறேன்!

வெட்கத் தாழ் போட்டு நாணுகிறேன்! கனவுகளில் துகிலுரித்து பார்க்கிறாய்! கவலைகள் கடிணங்கள் எதுவுமில்லை! மழலையாய் உன் மடியில் மலர்கின்றேன்! இரகசிய கனவுகளின் ரகசியம் பூட்டுகின்றேன்! விழிகள் வழியே தெறித்து ஓடுகிறாய்! புலன் இன்பங்கள் பொய்படும்! மெய் அன்பு ஞான பிரபஞ்சத்திற்கு வழி விடும்! புனிதனே புரவியில் வந்து அள்ளிச் செல்லு! நெடு மலை அருவி அடிவாரம் பள்ளி கொள்ளு! விடிந்திடும் முன்னே விடை பெற்றுச் செல்லு! கனவில் வந்ததை கவிதையில்…

வார்த்தை வமை

நாக்கு வமையானதுதான். இதனால் நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை ஆதைவிட வமையானது. இதைக் குறித்து வள்ளுவர் தனது 129 வது குறட்பாவில் இவ்வாறு குறிப்பிடுகிறார். தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் இறாதே நாவினாற் சுட்ட வடு. அதாவது தீயினால் சுட்டப்புண் வெளியே வடு இருந்தாலும், உள்ளே ஆறிவிடும். இனால், நாவினால் பிறரை தீயச்சொல் கூறிச் சுடும் வடு என்றுமே ஆறாது. பேச்சாற்றல் இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரியப் பரிசு. மற்ற…

கறுப்பு நிறத்தழகி !

கறுப்பு நிறத்தழகி ! இயற்கையின் நிறத்தினை இயல்பானத் தரத்தினை இருளின் வடிவாக இருக்கப் பெற்றவளே ! கருப்பை இருப்பைக் கவர்ந்து ஈர்த்து கறுப்பை நிறமாய்க் காலத்தில் பெற்றவளே ! உடலோ கறுப்பு உதிரமோ சிவப்பு கட்சியில் இதுதானே கழகத்தின் சிறப்பு ! பேரழகி உன்னைப் பார்த்தால் போதும் , தார்ரோடு என்றும் தலைகவிழ்ந்து கிடக்கும் . அடுப்புக்கரி தோற்றுவிடும் அணங்குஉன் முன்னாலே , அட்டக்கறுப் பென்பது அகிலத்தில் இதுதானோ !…

ஏழ்மையின் எதிர்பார்ப்பு

வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு ------ வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு தாழ்ந்திடாமல்  மானத்தைக் காப்ப தற்குத் ------ தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை வீழ்ந்திடாமல்  தலைநிமிர்ந்து நிற்ப தற்கு ------ விளங்குகின்ற அடிப்படையாம் இந்த மூன்றே ஏழ்மையிலே  தவிக்கின்ற மக்கள் எங்கள் ------ எதிர்பார்ப்பாம் இவைகிடைத்தால் வாழ்வோம் நாங்கள் ! பிச்சையாக  இலவசங்கள் தேவை யில்லை ------ பிறக்கின்ற கருணையதும் தேவை யில்லை முச்சந்தி  தனில்நின்று கையை ஏந்தி…

நூல் வெளியீட்டு விழா

ஸாகிரா டீச்சரின் உள்ளத்தில் குடியிருந்த வலியும், குழப்பமும் இன்னும் முற்றாகத் தணியவில்லை. அதிலிருந்து முழுமையாக விடுதலை பெற முயற்சிக்கிறாள். அதுவும் அவளால் முடியாமல் இருந்தது. அவளது நூல் வெளியீட்டு விழாவுக்கு இன்னும் ஒரு சில தினங்களே பாக்கி இருந்தன. அதற்குள் அவளது இல்லத்தை வந்தடைந்த ஒரு கடிதம் அவளது உள்ளத்தை மிகவும் காயப்படுத்தியது. இன்னும் எதிலும் நிம்மதியாக ஈடுபட முடியாத அளவுக்கு வேதனை அவளை ஆட்கொண்டிருந்தது. இன்னும் யார் யாருக்கு…

உடையாத நீர்க்குமிழி

படிதாண்டாப் பத்தினியாய் அடுப்புக் குள்ளே ----- பகலிரவும் அடியாளாய்ப் பணிகள் செய்தே அடிவுதைகள் ஏளனங்கள் பட்ட போதும் ----- அழுகையினைத் துயரத்தை விழுங்கிக் கொண்டு கடிவாளக் குதிரையாகச் சுமையி ழுத்துக் ----- கல்லெனினும் புல்லெனினும் கணவன் என்றே படிப்பின்றி இருந்தநிலை மாறிப் போகப் ----- பட்டத்தால் பகுத்தறிவு பெற்றா லின்று ! எண்ணத்தில் வலிமையின்றி இருந்த பெண்ணோ ----- எழுச்சிப்பா பாரதியின் புதுமைப் பெண்ணாய்க் கண்ணீரைச் சிந்திமூலை அமர்ந்தி ருந்த…

ஆடைகட்டிவந்த அல்லிமலர்

இரவிவர்மா ஓவியமா இராமன்கதைக் காவியமோ ? வானவர்க்கும் கிடைக்காத வந்திருக்கும் திரவியமோ ? மின்னலுக்கு ஆடைகட்டி மேதினியில் உதித்ததுவோ ? கன்னலுக்குத் தேன்பாய்ச்சி காலிங்குப் பதித்ததுவோ ? வெடித்திருக்கும் வெள்ளைரோஸ் விவரிக்கும் பேரழகோ ? கொடுத்துவைத்த கோமகனும் குடியமரும் தேரழகோ ? முல்லைமலர் போலிருக்கும் மூக்குத்திப் பொன்னழகோ ? உள்ளமதை வெளிப்படுத்தும் உயர்வானக் கண்ணழகோ ? இதழ்பூசும் வண்ணமது இதயத்தைக் கவர்ந்ததுவோ ? விதவிதமாய்க் காதணிகள் விருந்துக்கு வந்தனவோ ?…

அடிப்படைக் கல்வி வாழ்வுக்கு அச்சாணி

Grund Schule Klauberg in Solingen Germany, Solingen  இன் ஆரம்பப் பாடசாலை தன் எண்ணங்களால் வரி தொடுக்கின்றது. நின்று நிமிர்ந்து புதுப் பொலிவுடன் எதிர்கால உலகை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நான் இன்று பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை எனப்படும் உடல் திருத்தச் சிகிச்சை செய்யப்பட்டு சோலிங்கன் நகரில் வீற்றிருக்கும் ஆரம்பப் பாடசாலை. எனது பெயர் அன்றும் இன்றும் கிளௌபேர்க் (Klauberg) ஆகும். என்னை இப்போது பார்க்கும் போது எனக்கே பெருமிதமாக இருக்கின்றது.…

மன்னிப்பு

“தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பது இறை இயல்பு” மனிதராய் பிறந்த நாம் அனைவருமே தவறு செய்திருக்கின்றோம், செய்கின்றோம். தவறு செய்யாத மனிதன் இல்லை. இவ்வாறு தவறு செய்யும் நாம் மன்னிப்பு கேட்டிருக்கின்றோமா? அல்லது பிறர் செய்த தவறைத்தான் மன்னித்திருக்கின்றோமா? இது நிகழ்ந்திருக்குமா என்றால் சற்று சிரமம் தான். அப்படி நிகழ்ந்திருந்தால் தான் மகிழ்ச்சி நிலைத்திருக்குமே. தவறு செய்யும் பெரும்பாலானோர் மன்னிப்பு கேட்பதில்லை. மன்னிப்பு கேட்க யோசிக்கிறார்கள். காரணம், நான்…

வீழாதே தோழா

புத்தக மதிப்புரை நூலின் பெயர் : வீழாதே தோழா பொருள் : சுயவரிகள் தன்னம்பிக்கை வரிகள் நூலாசிரியர் : மனோபாரதி, manobharathigr@gmail.com www.facebook.com/manobharathigr கைப்பேசி : +91 8903476567   என் உயிர்க்கினிய தம்பி மனோபாரதி, துடித்தெழும் புலியாக வெடித்தெழும் நெருப்பாக கருத்து வித்துகளை விதைத்திருக்கிறான்! இது முளைத்தால் மரம்! இல்லையேல் உரம்! எதுகை மோனை ஏர்பூட்டி நடக்க, நன்செய் வயலில் நாற்று நடமாடுவதாய் வளமான கவிதைகளைப் படைத்திருக்கிறான்! தடைகளைத்…