தொடர் 56

நாம் காணப் போவது, ஹைக்கூ கவிதையில் மிக முக்கியமான விசயம்.

ஒரு ஹைக்கூ கவிதையில் எவையெல்லாம் இடம் பெறலாம். எவையெல்லாம் தவிர்க்க பட வேண்டும் என்பதை இந்த பகுதியில் காண்போம்.

முதலில் ஹைக்கூவில் இவை அவசியம் இடம்பெற வேண்டியவை என எவற்றையெல்லாம் சொல்லலாம் எனக் காண்போம்.

 1. கவிதையில் கிகா எனப்படும் பருவகாலம் அவசியமாய் காட்டப்பட வேண்டும்..சில கவிதைகளில் தவிர்க்க வேண்டியதிருப்பின் தவறில்லை.
 2. பருவகாலம் என்பது நேரடியாய் பருவ காலத்தை மட்டும் குறிப்பதல்ல…அந்த பருவகால தொடர்புடைய விசயங்கள்..பொருள்கள் கூட இடம் பெறுவது நல்லது.
 3. ஒரு ஹைக்கூ வாசித்து முடிந்த பின் காட்சியானது மனக்கண்ணில் விரிதல் அவசியம்.நீங்கள் எழுதிய கவிதையை காட்சியாக வடிக்கும் வண்ணம் எழுதப் படுதல் அவசியம்.
 4. கவிதையில் ஒரு செயல் அல்லது வினை நடைபெற வேண்டும்..அந்த செயல் ஒரு கருத்தினை வெளிப்படுத்துவதாக கூட அமையலாம்.
 5. ஒரு கவிதையில் குறைந்த பட்சம் இரு காட்சிகளை பதிவு செய்வதோடு..பலவித கருத்துக்களை உருவாக்கும் விதத்தில் கவிதையை அமைத்தல் நல்லது.
 6. ஒவ்வொரு அடிகளும் பல கேள்விகளுக்கு உட்படுதல் நல்லது..அதுவே கவிதையை பல கோணங்களுக்கு இட்டுச் செல்லும்.
 7. கவிதையில் கிரெஜி எனப்படும் வெட்டுவார்த்தையானது (திருப்பமானது) இரண்டாவது அடி முடிவில் அமைவது அவசியம்.
 8. இயற்கையை பேசுவதும்..சின்ன உயிர்களை சிறப்பித்து கூறவும் செய்யலாம்.

அடுத்து..கவிதையில் இடம்பெற தேவையில்லாதவை அல்லது எதை கவனமாக கையாள வேண்டும் என்பதைக் காண்போம்..

 1. கற்பனை..உவமை..உருவகப் படுத்தல் தேவையில்லை
 2. உணர்ச்சிகளை நேரடியாக கவிதையில் காட்டுவது தவறு.
 3. கவிதையில் “நம்மை” முன்னிலை படுத்தி காட்டுவது தவறு.
 4. உயர்திணை..அஃறிணை களை கவனமாக கையாள்வது நல்லது.
 5. ஒருமை..பன்மை உணர்ந்து எழுதுதல் அவசியம்.
 6. மனித உணர்வுகளை பொருட்களுக்கோ..மரம் செடி கொடி போன்றவைகளுக்கோ காட்டக் கூடாது.
 7. கவிதையில் நேர்மறை சிந்தனைகளை கையாளுங்கள்…எதிர்மறை சிந்தனைகளை தவிருங்கள்.
 8. கவிதையில் “கிறது…” என இரண்டாவது அடியில் அமைவதை தவிர்க்க முயற்சிக்கலாம்..இது கவிதையின் அழகை சற்று சிதைக்கவே செய்கிறது..நிகழ்கால சிந்தனை எனும் பெயரில் இவ்வாறு அமைப்பதை மாற்றி சிந்திக்கலாம்.
 9. கவிதையின் மூன்றடிகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டி உறவாடுதல் அவசியம்..ஈற்றடி திருப்பம் என்று அதை முன்னிரு அடிகளுக்கு பொருந்தா வண்ணம் அமைத்தல் கூடாது.

இவ்வாறு தங்களின் கவிதையை வடிவமைக்க ஹைக்கூ சிறக்கும்.

அது சரி…”கிறது..” என வராமல் கவிதையை எவ்வாறு வடிவமைப்பது என சந்தேகம் தோன்றுகிறதா ? இதை கவனியுங்கள்..

தேர்தல் வந்து விட்டது
அலங்கார தேவதைகளாய்..
சுவர்கள்..!

**

வீட்டில் நிசப்தம்
முற்றத்தில் அனாதையாய்..
நான் பின்னிய ஸ்வெட்டர்..!

**

உள்ளுக்குள் புழுக்கம்
விளக்கு கம்பத்தை
விட்டில் பூச்சிகள் மொய்த்தது..!

 • அனுராஜ்..

இவையனைத்தும் என்னால் 1985 இல் எழுதப்பட்ட கவிதைகளே. இன்று முகநூலில் சிக்கிக் கொண்டு நானும் “”கிறது..”” வருமாறே எழுதிக் கொண்டிருக்கிறேன். அதை நானும் மாற்ற முயற்சிக்கிறேன். என்னோடு நீங்களும் முயற்சியுங்கள். நல்ல ஹைக்கூ கவிதைகள் பிறக்கட்டும்.

இன்னும் வரும்

முன் பதிவு 55


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

தன்முனை

மலர்வனம் 6

தன்முனை

ஜென்ஸி

நெஞ்சொடு கிளத்தல்

புத்தக அந்தாதி

1.
சிரிக்க. வைத்தவர்களை
மறந்து விட்டு
அழ. வைத்தவர்களை – ஏன்
நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?

 » Read more about: மலர்வனம் 6  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 18

தொடர் 18

வெண்பா வகைகளில்

குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
நேரிசை பஃறொடை வெண்பா
இன்னிசை பஃறொடை வெண்பா

ஆகியவற்றை இதுவரைக் கண்டோம்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 18  »