தொடர் – 35

ஹைக்கூவில் படிமம்

படிமம் என்பது நாம் எண்ணும் கருப்பொருளை வேறு ஒன்றின் மீதோ அது பறவை..பூச்சி..மரம்..செடி..கொடி என எதுவாகவும் இருக்கலாம்..அல்லது வேறு ஒரு பொருளின் மீதோ ஏற்றிச் சொல்வது படிம உத்திமுறை.

இப் படிமக் குறியீடுகளை குறிப்பிட்ட எல்லைக்குள் வகுத்துக் கொண்டு..அந்த சூழலுக்கும்..நிகழ்வுக்கும் ஏற்ப கவி அமைப்பது எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்கும்..

படிம உத்தி முறையே துவக்கத்தில் ஹைக்கூவில் கையாளப்பட்டது. ஏனெனில் அது வாசகனை பல கோணத்தில் சிந்திக்க வைக்க பேருதவி புரியக் கூடியதாகும்.

ஜப்பானியக் கவிதைகளில்… அடிக்கடி காணப்படும் புத்தர், ப்ளம் மரங்கள், பட்டாம்பூச்சி, தவளை, சக்குரா மலர்கள், தேநீர் கோப்பைகள் கூட ஜப்பானிய கவிஞர்களுக்கு படிமங்களாக உறுதுணை புரிந்திருக்கின்றன.

ஒரு எளிய மனிதனுக்குத் தெரிந்த ஒன்றின் மீது தன் கருத்தினை ஏற்றிச் சொல்வதன் வாயிலாக கவிஞன் சொல்லும் கருத்து எளிதில் அனைவரையும் சென்றடைந்து விட, இந்த படிம உத்திமுறை ஹைக்கூவில் அதிகம் உபயோகப் படுத்தப்பட்டது.

ஆனால்… இதனை இன்று பெரும்பாலான கவிஞர்கள் பயன்படுத்துவதில்லை. மாறாக நேரடியாகவே தங்கள் கருத்தினை பதிவு செய்து விடுகிறார்கள்.

ஹைக்கூ கருத்துப் பொருண்மையில் எழுபது அல்லது 80 சதவிகிதத்தை வெளிப்படுத்துவது நல்லது..அத்தகைய ஹைக்கூ மிகச்சிறப்பானது… என்கிறார் ஆர்தர் கிறிஸ்டி எனும் மேற்கத்திய ஹைக்கூ கட்டுரையாளர்.

ஹைக்கூவின் அமைப்புமுறை, எதனைச் சொல்லவேண்டுமோ அதனை எவ்வாறு வெளியிடவேண்டும் என்றாய்ந்து சொல்லுதல் நல்லது.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து.

என்ற திருவள்ளுவர் கூறிய நெறி ஹைக்கூவிற்கு சரியாக பொருந்தும்.

சிறந்த சொல்லாட்சியும், அழகியப் படிமத் தொடர்ச்சியும் ஹைக்கூவிற்கு அடிப்படை சொற்சிக்கனம்,பொருட்செறிவு இருத்தல் ஹைக்கூவில் அவசியம்.

இந்த ஹைக்கூக்களை கவனியுங்கள்..

காலைத் தேநீர் அருந்தும் துறவி
சாமந்திப்பூ மலர்வது போல
அமைதி.

  • மட்சுவோ பாஷோ (1644 – 1694)

ஒரு துறவி தேநீர் அருந்துவது மலர் மலரும் நிலை போன்றது. அவ்வளவு மென்மை.

ஆர்வமுள்ள ஈயே
உன்னை புத்தராக்குகிறேன்
எனது கைத்திறத்தால்..!

மலர்வதில் அதிக ஆர்வம்
கொள்ளவில்லை
எனது பிளம் மரம்.

  • இஸ்ஸா (1763 – 1827 )

இரண்டு பிளம் மரங்கள்
நான் விரும்புவேன் அவை மலர்வதை
ஒன்று விரைவில்… இன்னொன்று பிறகு.

தேநீர்ப் பூக்கள்
அவை வெள்ளையா..?
மஞ்சள் நிறமா..?

  • யோஸா பூசன் (1716 – 1784)

வாசிக்கும் போது தெரியும் படிம உத்தியை கையாண்டிருக்கும் விதம்.

தமிழிலும் இந்த உத்தியை கையாண்டனர் முன்னர்.

இதை கவனியுங்கள்..

விடுதலைப் போராட்ட
தியாகி வீட்டில்
கூண்டில் கிளி.

  • நெல்லை.சிவபுத்திரன்

இதில் கூண்டில் கிளி படிமம் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இன்னும் வரும்.. 

முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 40

தொடர் – 40

லிமர்புன்

ஹைக்கூ கவிதை வகைமைகளில் அடுத்தபடியாக நாம் காணவிருப்பது லிமர்புன்.

இது சற்றேறக்குறைய ஹைபுன் போலவே தான். முன்னதாக ஒரு உரைநடையோ அல்லது கவிதையோ பதிவிட்டு இறுதியில் அந்த உரைநடைக்கு பொருந்தி வருமாறு..ஹைக்கூவிற்கு பதிலாக லிமரைக்கூவை பதிவிட்டால் அதற்கு லிமர்புன் என்று பெயர்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 40  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 39

தொடர் – 39

ஹைபுன்

ஹைக்கூ கவிதை வடிவில் ஜப்பானிய கவிவடிவமான ..ஹைக்கூ மற்றும் சென்ரியு மிக முக்கியமானவை.

இந்த வகை கவிதைகளை மேற்கத்திய கவிஞர்களும்,

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 39  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 38

தொடர் –38

ஹைக்கூ வாசிக்கும் முறை

கவிதை என்பது இலக்கியத்தின் உயரிய வடிவம்..நமது தமிழ் இலக்கிய மரபில் வெண்பா, விருத்தம், கலிப்பா, கும்மி என பல வகைகள் உண்டு.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 38  »