தொடர் 24.

ஹைக்கூவில் வார்த்தை சுருக்கம்

இந்த தொடர் துவங்கிய போது வாசகர் ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். அதிகப்படியான வார்த்தைகளைக் கொண்டும் பலர் ஹைக்கூ எழுதுகிறார்களே. ஆனால் வார்த்தைச் சுருக்கமே நல்லது என்கிறீர்களே… எது சரியானது என்று.

இதை இங்கு தெளிவு படுத்துவோம்..

ஜப்பானில் பிறந்த ஹைக்கூ.. முதலில் தன் பயணத்தைத் துவக்கியது மேற்கத்திய நாடுகளில் தான். ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தில் இருந்தமையால்… அங்கு தான் முதலில் ஹைக்கூ பிரபலமானது. அவர்களால் ஈர்க்கப்பட்ட ஹைக்கூ மேற்கத்திய நாடுகளில் மொழி பெயர்க்கப் பட்டதோடு, அவர்களது சிலபலில் எழுதப்பட்டது. ஏற்கனவே நாம் இங்கு கண்டிருக்கிறோம். மேற்கத்திய கவிஞர்களுக்கு கற்பனையின்றியோ, அதிகப்படியான சொல்லாடல் இன்றியோ கவிதை எழுதும் பழக்கமில்லை. நம் தமிழில் முதலில் நாம் கையாண்டது அவர்களது ஹைக்கூ கவிதைகளின் மொழிபெயர்ப்பையே.. . எனவே வார்த்தைகள் அங்கு அதிகப்படியாகவே வந்து விழுந்திருந்தன. ஆனால் நேரடி ஜப்பானிய ஹைக்கூ மொழி பெயர்ப்பில் அந்தளவு வார்த்தைகள் இல்லை. அங்கு 5 – 7 – 5 அசையமைப்பில் சிக்கனமாகவே ஹைக்கூ எழுதப்பட்டது. அசையை மேற்கத்திய கவிஞர்களும் பின்பற்றினர் எனினும், மொழிபெயர்ப்பில் அதை விரித்தே எழுதும் படியாயிற்று. அது மொழிபெயர்ப்பின் தவறுதானேயன்றி கவிதையின் தவறல்ல.

ஆகவே தான், ஆங்கில மொழிபெயர்ப்பினைக் கண்ணுற்ற பலரது ஹைக்கூகளும் வார்த்தைகளை சிக்கனமாக பயன்படுத்த தவறினர் எனலாம்..

உதாரணமாக இதை கவனியுங்கள்..

இரவின் மேகங்கள் கடந்து செல்கையில்
சற்றுக் கருமை படரும்
நிலவின் முகப்பு

  • கோபாலகிருஷ்ணன்

இக்கவிதையை இவர் தன்முனைக் கவிதைக்காக நான்கு வரியில் வடிவமைத்து எழுதியிருந்தார். நான் இதனையே மேற்கத்திய பாணி ஹைக்கூவாக எடுத்துக் கொண்டு, ஜப்பானிய பாணியில் எழுதப்படுமாயின்…

விரையும் மேகங்கள்
சற்றே கருமை படரும்
நிலவின் முகப்பு.

என மாற்றினேன். இந்த வார்த்தை சுருக்கமே ஹைக்கூவிற்கு அழகு சேர்க்கும்.

அதே போல்…

ஆர்வமாய் கதை சொல்ல சிறுமி
கேட்டுத் தலையாட்டும்
பக்கத்தில் நின்ற ஆட்டுக்குட்டி.

  • வேலூர் இளையவன் (ஹைக்கூ உலகம் தொகுப்பு)

சிறுமி சொல்லும் கதை
கேட்டுத் தலையாட்டுகிறது
ஆட்டுக் குட்டி..!

என வார்த்தைகளை சுருக்க இன்னும் சிறப்பாவதைக் காணலாம்.

பொதுவில் வார்த்தைகளை சுருக்குங்கள். நிறைய முறை வாசித்துப் பாருங்கள். தொடர்ந்து கவிதையை ஒரு சிற்பியின் கண்ணோட்டத்தில் செதுக்குங்கள். உண்மையில் அது அழகாய் மிளிரும்.

இன்னும் வரும்…

 முன்தொடர் 23


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 45

தொடர் – 45

ஹைக்கூ எளிய கவிதை வடிவம்… ஆனால் உள்ளார்ந்த பல விசயங்களைக் கொண்டிருக்கும் உன்னத கவிதை வடிவமாகும்.

இக் கவிதை வடிவில் கருப்பொருளோடு இரண்டறக் கலந்திருப்பது பல விசயங்கள்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 45  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 44

தொடர் – 44

ஹைக்கூவில் பாஷோவின் ஆளுமை

பாஷோ.. ஹைக்கூவின் பிதாமகர்.. ஜப்பானியக் கவிஞர் கி.பி.1644_ ல் பிறந்து 1694  ல் மறைந்த ஒரு மாபெரும் ஹைக்கூ ஆசான்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 44  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 43

தொடர் – 43

ஹைக்கூ வகைமை

ஹைக்கூவில் பல்வேறு வகையான புது முயற்சிகளை அவ்வப்போது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் கவிஞர்கள்.

ஏற்கனவே ஹைக்கூ.. சென்ரியுவோடு

ஹைபுன்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 43  »