தொடர் 06

கவிஞனை மட்டுமின்றி வாசகனையும் கவர்ந்திழுக்கும் ஒரு கவிதை வடிவம். கவிஞனின் எண்ண ஓட்டங்களோடு வாசகனின் எண்ண ஓட்டங்களையும் உறவாட வைக்கும் ஒரு கவிதை வடிவம் ஹைக்கூ. வாசிக்க கூடிய ஒவ்வொரு முறையும் பல கோணங்களைக் காட்டி நகரும் அற்புத ஆற்றல் ஹைக்கூவிற்கு உண்டு. இத்தகைய ஆற்றலை கொண்டிருப்பதனால்தான் ஜப்பானில் தோன்றிய இந்த கவிதை வடிவம் மேற்கத்திய நாடுகளில் பெரும் புகழை எளிதில் பெற்று விட்டதெனலாம்.

இந்தியாவில் காலம் கடந்து நுழைந்தாலும் கவனிக்கத் தக்கதொரு இடத்தினை ஹைக்கூ பெற்று விட்டதெனலாம். துவக்கத்தில் மொழிபெயர்ப்பு கவிதைகளாகவே காணக் கிடைத்த இதனை கவிக்கோ அப்துல் ரகுமான் சின்னதான ஒரு வரையறையோடு தமிழுக்கு உகந்தபடி எழுதத் தூண்டினார். அதன்பின் தொடர்ந்த பலரது ஹைக்கூ கவிதைகள் அவர் மேற்கோள் காட்டிய வழியில் நடைபயின்றாலும். பலரது மேற்கத்திய மொழிபெயர்ப்பு கவிதைகள் இடையில் நுழைந்து ஹைக்கூவில் பல மாறுதல்களையும் உண்டு பண்ணியது..

1966 இல் சுஜாதா அவர்கள் கணையாழியில் இதன் மொழிபெயர்ப்பு கவிதைகள்.. கட்டுரை என எழுத.. 1968 இல் நடை இதழில் சி.மணி அவர்கள் ஆங்கில ஹைக்கூ மொழிபெயர்ப்பினை தந்தார். தொடர்ந்து தி.லீலாவதி உள்ளிட்ட பலரது மொழிபெயர்ப்புகளும் நேரடி தமிழ் ஹைக்கூகளும் மலர, 1990 இல் கவிஞர்.நிர்மலா சுரேஷ் தனது ஹைக்கூ பற்றிய ஆய்வுக் கட்டுரையில், அதுவரை வெளிவந்த ஹைக்கூக்களை ஆய்ந்து..ஹைக்கூவிற்கான பண்புகளென இவற்றை குறித்தார்..

 • 3 அடிகளில் எழுதப்பட வேண்டும்
 • ஹைக்கூ கற்பனையை ஏற்காது
 • உவமை…உருவகம் ஹைக்கூவில் கூடாது
 • உணர்ச்சிகளை நேரடியாக வெளிபடுத்தக் கூடாது
 • ஹைக்கூ தன்மைப் பாங்கினை தவிர்க்கும்
 • ஒரு சொல் மட்டும் குறியீடாய் பயின்று வருதல் இல்லை
 • ஹைக்கூ இருண்மையை மேற்கொள்ளாது
 • கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை
 • பிரச்சாரமின்மை..எளிமையாக கூறுவது
 • ஒரு விசயத்தை சொல்வதைக் காட்டிலும் சொல்லாமல் விடுவது( இது வாசகனை ஊகிக்க வைக்கும் )
 • சின்ன உயிர்களையும் சிறப்பித்து பாடுவது.
 • ஈற்றடி சிறப்பு
 • மெல்லிய நகைச்சுவை உணர்வு அரும்பும் படி கவிதை எழுதுவது
 • இயற்கையைப் பாடுவதுடன்..
 • இயற்கையை மனித உணர்வோடு சேர்த்துப் பாடுவது.
 • ஆழ்மன உணர்வோடும்..மெல்லிய சோகமும் கவிதையில் இழையோடும்படி அமைப்பது
 • பிற உயிர்களையும் தனக்கு இணையாக மதித்துப் பாடுவது.

என ஹைக்கூவின் பண்புகளை பட்டியலிட்டு தந்தார். இன்று பலரும் இந்த கருத்துகளை கையாண்டே ஹைக்கூ படைத்து கொண்டிருக்கிறார்கள். மேற்கண்ட பல பண்புகளை கண்டாலே தெரியும் ஜப்பானிய ஹைக்கூ எழுதும் முறையும், மேற்கத்திய ஆங்கில கவிஞர்களின் ஹைக்கூ முறையும் கலந்த ஆய்வு இதுவென்று..நாம் 5_7_5 அசையமைப்பை கைவிட்டு விட்ட படியால் அதனை பெரிதும் வலியுறுத்தவில்லை> பல கவிஞர்களும் அதனை பெரிது படுத்தவில்லை. நமது தமிழ் மொழி அமைப்பில் 5_7_5 அசை கட்டுப்பாட்டில் எழுதலாம். தவறில்லை.

ஆனால் அதற்கான சிந்தனையிலும் கவனத்திலும் நாம் ஹைக்கூ எழுத முற்படும் போது பல சிரமங்களையே சந்திக்க வேண்டியிருக்கும் என்பதனாலும், பல கருத்துகள் கவிதையில் கிடைக்காமல் போய்விடக் கூடிய அபாயம் இருந்ததாலும்.. கவிஞர்கள் அசைக் கட்டுப் பாட்டை பெரிது படுத்தவில்லை.

இங்கு குறிப்பிட்ட ஒவ்வொரு பண்பையும் நாம் விளக்கமாக அடுத்தடுத்த பதிவில் உதாரணங்களுடன் காணலாம்.

அதுவரை.. நீங்கள் அசைபோட…

ஆலயமணியின் மீது
ஓய்ந்து உறங்குகிறது
வண்ணத்துப் பூச்சி.

– யோஸா பூசன்

பெட்டிக்கு வந்தபின்
எல்லா காய்களும் சமம் தான்
சதுரங்கக் காய்கள்.

– இஸ்ஸா.

இன்னும் வரும்..

தொடர் 05 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

தன்முனை

மலர்வனம் 6

தன்முனை

ஜென்ஸி

நெஞ்சொடு கிளத்தல்

புத்தக அந்தாதி

1.
சிரிக்க. வைத்தவர்களை
மறந்து விட்டு
அழ. வைத்தவர்களை – ஏன்
நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?

 » Read more about: மலர்வனம் 6  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 18

தொடர் 18

வெண்பா வகைகளில்

குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
நேரிசை பஃறொடை வெண்பா
இன்னிசை பஃறொடை வெண்பா

ஆகியவற்றை இதுவரைக் கண்டோம்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 18  »