05

ஹைக்கூ சின்னதாய் காட்சியளிக்கும் ஒரு பெரிய அற்புதம் எனலாம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் இதனை சிந்தர், வாமனக் கவிதைகள் என்கிறார். கூடவே ஹைக்கூ வெறும் வடிவம் என்றே பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அது உள்ளடக்க தளத்திலும் மரபு வழிவந்த நுட்பமான பரிமாணங்களையும் கொண்டது. ஜென் புத்தமத தத்துவப் பார்வையும், ஜப்பானிய வாழ்க்கை முறையும் சார்ந்த ஒரு நுட்பமான கவி வடிவம் ஆகும்.

நாம் தமிழில் ஜென் பார்வை கொண்டு கவி படைக்க வேண்டியதில்லை. ஹைக்கூ வின் எல்லா மரபுகளையும் தூக்கிக் கொண்டு வந்து கவி படைக்கத் தேவையில்லை. தனக்கு உணர்வுகளைத் தூண்டியக் காட்சியை கவிஞன் கேமராக் கண்கொண்டு அப்படியே படம் பிடித்து தந்து விட்டால் போதும். அமைதியான குளத்தில் எறிகின்ற கல் போன்றது ஹைக்கூ அலைகளை கவிஞன் வரைய தேவையில்லை. தன்னிடம் எழுந்த உணர்வினை வாசகன் உள்ளத்தில் எழ விட்டு விட வேண்டும்.

ஹைக்கூ வில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய இரு மரபுகள் உண்டு. ஹைக்கூ வில் முதல் இரண்டடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் அந்த ஈற்றடியில்தான் உள்ளது. அது திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்தும்.

மற்றொரு மரபு, ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூ ஊழல் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல அவசியமற்ற இணைப்புச் சொற்களை அது தவிர்த்துவிடும். உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காக பெயர்ச் சொல்லையே பயன்படுத்தும். இவ்விரண்டு மரபுகளையும் நாம் அவசியம் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், கம்பீரமும்,  ஆற்றலும் இவற்றில்தான் உள்ளது.

இது கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் கவிஞர் அறிவுமதி அவர்களின் புல்லின் நுனியில் பனித்துளி நூலுக்காக வழங்கிய அணிந்துரையில் தந்த விளக்கம்..

துவக்கத்தில் பலரும் இந்த சிந்தனையை கையாண்டுதான் ஹைக்கூ படைத்துக் கொண்டிருந்தனர். 1990 க்கு பிறகு, இன்னும் சில வரைமுறைகளோடு ஹைக்கூ மலரத் துவங்கியது. அதற்கு கவிஞர். நிர்மலா சுரேஷ் தனது ஆய்வு கட்டுரை வாயிலாக ஹைக்கூவிற்கான பண்புகளாய் சிலவற்றை தொகுத்து தந்தார். அதனை பின்வரும் பகுதியில் காணலாம். அதுவரை..

உன் வீடு இடிந்தாலென்ன
என் வீடு இடிந்தாலென்ன
புயலுக்கோ பாதை தேவை..!

( வேற்று மொழிக் கவிதை. எழுதியவர் பெயர் தெரியவில்லை )

புயலுக்குத் தேவைப்படும் பாதை போலவே, இன்று ஹைக்கூவிற்கும் பாதை,  தெளிவான பாதை தேவைப் படுகிறது.

இன்னும் வரும்…

தொடர் 04 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

தன்முனை

மலர்வனம் 6

தன்முனை

ஜென்ஸி

நெஞ்சொடு கிளத்தல்

புத்தக அந்தாதி

1.
சிரிக்க. வைத்தவர்களை
மறந்து விட்டு
அழ. வைத்தவர்களை – ஏன்
நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?

 » Read more about: மலர்வனம் 6  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 18

தொடர் 18

வெண்பா வகைகளில்

குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
நேரிசை பஃறொடை வெண்பா
இன்னிசை பஃறொடை வெண்பா

ஆகியவற்றை இதுவரைக் கண்டோம்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 18  »