பாடல் – 92

விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை
யொன்றும் உணராத ஏழையும் – என்றும்
இறந்துரை காமுறு வானுமிம் மூவர்
பிறந்தும் பிறவா தவர்.

(இ-ள்.) விழுத்திணை – (அற ஒழுக்கங்களைப் பெறுதற்குரிய) சிறந்த குலத்தில், தோன்றாதவனும் – பிறவாதவனும்; எழுத்தினை – இலக்கண நூலை, ஒன்றும் உணராத – எவ்வளவு சிறிதும் அறிந்து கொள்ளாத, ஏழையும் – பேதையும்; என்றும் – எப்பொழுதும்; இறந்து – முறைதப்பி, உரை – சொற்களை, காமுறுவானும் – பேச விரும்புகின்றவனும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், பிறந்தும் – மக்கட் பிறப்பிற் பிறந்தும், பிறவாதவர் – (பிறப்பின் பயனையடையாமையால்) பிறவாதவராவார்; (எ-று.)

(க-ரை.) நற்குலத்திற் பிறவாதவனும், படிப்பில்லாதவனும் மரியாதை தப்பிப் பேச முயல்கின்றவனும், மனிதர் என்று சொல்லத் தகாதவர் என்பது.

விழுத்திணை – விழுப்பமாகிய திணை : பண்புத்தொகை. எழுத்து – தன்னை யுணர்த்தும் இலக்கண நூலக் காதலால் காரியவாகுபெயர். ஒன்றும் : உம் முற்றுப் பொருளுடன் இழிவு சிறப்புப் பொருளிலும் வந்தது.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

(இ-ள்.) பத்திமை சான்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98

பாடல் – 98

செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

(இ-ள்.) செந்தீ –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98  »