பாடல் – 58

பழமையை நோக்கி அளித்தல் கிழமையால்
கேளிர் உவப்பத்தழுவுதல் – கேளிராய்த்
துன்னிய சொல்லால் இனம்திரட்டல் இம்மூன்றும்
மன்னற் கிளையான் தொழில்.

(இ-ள்.) பழமையை – (நண்பரின்) பழையராகுந் தன்மையை. நோக்கி – பாராட்டி, அளித்தல் – (அவருக்கு வேண்டுவனகொடுத்து) காப்பாற்றுதலும், கேளிர் – சுற்றத்தார், உவப்ப – மகிழும்படி. கிழமையால் – உரிமையால், தழுவுதல் – அணைத்தலும்; கேளிர் ஆய் – உறவினராய், துன்னிய – குழும்படி, சொல்லால் – இன்சொற்களால், இனம் திரட்டல் – நல்லினத்தைக் கூட்டலும்; இ மூன்றும் – ஆகிய இந்த மூன்றும், மன்னற்கு இளையான் – இளவரசனுடைய, தொழில் – தொழில்களாம்; (எ-று.)

(க-ரை.) இளவரசனா யிருப்பவன் முன்னோரோடு பழகிவந்த அமைச்சர் முதலியோரைப் பேணுதலும், இனத்தாரை உரிமையுடன் காப்பாற்றுதலும், நல்லவரைத் தனக்கு நட்பாக்குதலும் செய்ய வேண்டும் என்பது.

பழமையாவது பழமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவர்க்கு உடன்படும் நட்பு. துன்னிய : செய்யிய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். அமைச்சன் அரசனுக்குக் கிளையாயிருத்தல் பற்றி மன்னற்கிளையான் அமைச்சன் எனலுமாம். திரட்டல் : பிறவினைத் தொழிற்பெயர்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »