பாடல் – 54

தன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா
நன்பயம் காய்வின்கண் கூறலும் – பின்பயவாக்
குற்றம் பிறர்மேல் உரைத்தலும் இம்மூன்றும்
தெற்றென வில்லார் தொழில்.

(இ-ள்.)தன்பயம் – தனக்கு வரும் பயனை, தூக்காரை – ஆராய்ந்து அதற்கு உதவி செய்யாதாரை, சார்தலும் – அடுத்தலும்; காய்வின்கண் – ஒருவன் சினமுற்ற காலத்து, தாம் பயவா – தாம் பயன்படாமல் போவனவாகிய, நல் பயம் – நன்மையாகிய பயனைத் தரும் மொழிகளை, கூறலும் – சொல்லுதலும்; பின் பயவா – பின்னே பயன் படுதலில்லாத, குற்றம் – குற்றங்களை, பிறர்மேல் – மற்றவர்கள்மேல், உரைத்தலும் – சொல்லுதலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், தெற்றென – (இன்னது இன்ன பயனைத் தரும் என்பதனைத்) தேறுதல், இல்லார் – இல்லாதவருடைய, தொழில் – செய்கையாம்; (எ-று.)

(க-ரை.)தனக்கு உதவியற்றவரைச் சேர்தலும், சினமுற்ற காலத்தில் பயனற்ற மொழிகளைப் பேசுதலும், மனவருத்தத்துடன் வீணாகக் குற்றத்தைச் சாட்டுதலும் அறிவின்மையாம்.

பயம் – பயன். தூக்கார் : விணையாலனையும் பெயர். தெற்றெனவு; தெற்று என்னும் முதனிலையடியாகப் பிறந்த தொழிற்பெயர். காய்வு : தொழிற் பெயர்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »