பாடல் – 30

தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனும்
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்
என்று மழுக்கா றிகந்தானும் இம்மூவர்
நின்ற புகழுடை யார்.

(இ-ள்.) தன் நச்சி – தன்னை விரும்பி, சென்றாரை – அடைந்தவரை, எள்ளா ஒருவனும் – இகழாத ஒருவனும், மன்னிய – மிகுந்த, செல்வத்து – செல்வம் வந்த காலத்தில், பொச்சாப்பு – மறதியை, நீத்தானும் – நீக்கினவனும்; என்றும் – பிறரிடத்துப் பகைமை யுண்டாகிய காலத்திலும், அழுக்காறு – அவரது செல்வங் கண்ட இடத்து மகிழாமையை, இகந்தானும் – (கடந்தவனும்) நீங்கினவனும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும்; நின்ற புகழ் உடையார் – அழியாப் புகழுடையார்; (எ-று.)

(க-ரை.) தன்னை மதித்து வந்தவரை இகழாமல் ஏற்றுக் கொள்வதும், செல்வம் சிறந்த காலத்தும் நண்பர் முதலியவர்களை மறவாமல் போற்றுவதும், பிறன் வாழ்வுக்கு மகிழ்வதும் புகழுக்குக் காரணமானவை என்பது.

தன்நச்சி : இரண்டாம் வேற்றுமைத்தொகை. நச்சி – நச்சு : பகுதி. இ : வினையெச்ச விகுதி. எள்ளா – எள்ளாத : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். மன்னிய : மன் என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம். பொச்சாப்பு – பொச்சா : பகுதி, பு : தொழிற்பெயர் விகுதி; ப் : சந்தி – நீத்தான் : விணையாலணையும் பெயர் : நீ : பகுதி : அழுக்காறு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்; அழுக்கறு; பகுதி. இகத்தல் – கடத்தல். இக : பகுதி. நின்ற – நிலைபெற்ற.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

(இ-ள்.) பத்திமை சான்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98

பாடல் – 98

செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

(இ-ள்.) செந்தீ –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98  »