பாடல் – 31

பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாங்
கில்லற முட்டா தியற்றலும் – வல்லிதின்
தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றுங்
கேள்வியு ளெல்லாந் தலை.

(இ-ள்.) பல்லவையுள் – பல நூல்களிலும், நல்லவை – நல்ல நூற் பொருள்களை, கற்றலும் – கற்றுணர்தலும்; பாத்து – (பிரமசாரி முதலிய பதின்மர்க்குப்) பகுத்துக் கொடுத்து, உண்டு – (தானும்) உண்டு, ஆங்கு – அந்நிலையில், இல்லறம் – இல்லாளோடு கூடிச் செய்யும் அறமானது, முட்டாது – குறைவுபடாமல், இயற்றலும் – செய்தலும்; வல்லிதின் – ஊக்கத்தொடு, தாளின் – முயற்சியால், ஒரு பொருள் – செய்தற்கரிய செய்கையை, ஆக்கலும் – செய்து முடித்தலும்; இ மூன்றும் – இந்த மூன்றும், கேள்வியுள் எல்லாம் – கல்விகளெல்லாவற்றிலும், தலை – சிறந்த கல்வியாம்; (எ-று.)

(க-ரை.) கற்கத் தக்கவற்றைக் கற்றலும், இல்லறத்தை முட்டின்றிச் செய்தலும், ஊக்கத்தோடு முயற்சியால் அருஞ்செயல் ஆற்றலும் தலைசிறந்தன.

பல்லவை – பல அவை, சபையுமாம். முட்டாது : எதிர் மறை வினையெச்சம்; முட்டு : பகுதி, வல்லிது : வலிமை என்னும் பண் படியாகப் பிறந்த ஒன்றன்பால் வினையாலணையும் பெயர். தாளின் : இன் : உருபு, ஐந்தாம் வேற்றுமை, ஏதுப்பொருள், ஆக்கல்: அல் ஈற்றுத் தொழிற்பெயர். கேள்வி : தொழிற்பெயர். தொழிலாகு பெயருமாம். கேள்வியுளெல்லாம் : உருபுமாறி நின்றது : இலக்கணப் போலி.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »