பாடல் – 18

ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்
கிருதலையு மின்னாப் பிரிவு – முருவினை
யுள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றுங்
கள்வரி னஞ்சப் படும்.

(இ-ள்.) ஒருதலையான் – உறுதியாக, வந்துறூஉம் – வந்தடையும், மூப்பும் – கிழப்பருவமும்; புணர்ந்தார்க்கு – நட்பினருக்கு, இருதலையும் – (பிரியப்பட்டவரும் பிரிந்தவரும் ஆகிய) இரண்டிடத்தும், இன்னாப் பிரிவும் – துன்பத்தைத் தருகின்ற பிரிவும்; உருவினை – உடம்பை, உள் – உள்ளிடத்துள்ள தசை முதலியவற்றை, உருக்கி – கரையச் செய்து, தின்னும் – வருத்துகின்ற, பெரும் பிணியும் – (மருந்து முதலியவற்றால்) தீராத நோயும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், கள்வரின் – கள்வர்க்கு அஞ்சுவது போல், அஞ்சப்படும் – பயப்படப்படும்; (எ-று.)

(க-ரை.) கள்வருக்கு அஞ்சி எச்சரிக்கையாயிருப்பது போல உறுதியாக வரக்கூடிய மூப்பு, நண்பரிருவர்க்கும் விருப்ப மில்லாத பிரிவு, உரு அழிக்கும் நோய் இம் மூன்றுக்கும் அஞ்சிச் செய்ய வேண்டுவன செய்து எச்சரிக்கையா யிருக்கவேண்டும்.

ஒருதலையான் என்பதற்குக் கணவன் மனைவி என்னும் இருவருள் ஒருவரிடத்து எனலுமாம். பருவம் முதலிய ஒத்த தலைமகனும், தலைமகளும் மணத்தல் மரபாதலால் ஒருதலையான் எனப் பொதுப்படக் கூறப்பட்டது. இருதலை : தலை – இடம், இது தலைமகன் தலைமகள் என்ற இருவரையுங் குறிக்கும்; பன்மையில் ஒருமை வந்த பால்வழுவமைதி. இன்னாப் பிரிவு : இன்னாமையைத் தரும் பிரிவு எனின் இரண்டாம் வேற்றுமைத் தொகை; இன்னாமையாகிய பிரிவு : பண்புத்தொகை. உறு : பண்பாகு பெயர், உள் : இடவாகு பெயர். உருக்கி : உருக்கு என்னும் பிறவினைப் பகுதியடியாகப் பிறந்த வினையெச்சம். பெரும்பிணி – பெருமையாகிய பிணி : பண்புத்தொகை, பெருமையாவது மருந்துண்ணல், மந்திரித்தல், மணி முதலியன தானஞ் செய்தல் இவைகளால் தணியாமை. கள்வரின் : இன் ஐந்துனுருபு ஒப்புப் பொருள். அஞ்சப்படும் : ஒரு சொல் நீர்மைத்து.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

(இ-ள்.) பத்திமை சான்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98

பாடல் – 98

செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

(இ-ள்.) செந்தீ –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98  »