மரபுக் கவிதை

என்தேசம் என்சுவாசம்

வளைந்தகோடால் வரைந்துவைத்த படமா நாடு ----- வாழ்க்கையையே தியாகத்தின் வேள்வி யாக்கி வளையாத முன்னோர்கள் தீப்பி ழம்பால் ----- வார்த்துவைத்த வார்ப்படந்தான் இந்த நாடு! முளைவிட்டுத் தானாக முளைத்தெ ழுந்த ----- முட்செடியா இந்தநாடு? மானத் தாலே தலையுடலை விதைகளாக்கிக் குருதி நீரால் ----- தளிர்க்கவைத்த பன்னீர்ப்பூ இந்த நாடு!

மரபுக் கவிதை

ஏழ்மையின் எதிர்பார்ப்பு

குரல்: பாத்திமா பர்சானா வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு —— வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத் —— தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை வீழ்ந்திடாமல் தலைநிமிர்ந்து நிற்ப தற்கு —— விளங்குகின்ற அடிப்படையாம் இந்த மூன்றே ஏழ்மையிலே தவிக்கின்ற மக்கள் எங்கள் —- – எதிர்பார்ப்பாம் இவைகிடைத்தால் வாழ்வோம் நாங்கள்! பிச்சையாக இலவசங்கள் தேவை யில்லை —— பிறக்கின்ற கருணையதும் தேவை யில்லை முச்சந்தி Read more…

மரபுக் கவிதை

புதுமைப்பொங்கல் பொங்கிடுவோம்

கழிக்கின்றோம் பழையவற்றைக் காணவாரீர் எனவழைத்தே விழியெரிய நேயத்தை விளையன்பை எரியவைத்தே கழிவென்றே மனிதத்தைக் கருகவைத்துக் கணியன்தன் வழியடைத்துக் கொளுத்துகின்ற வன்முறையா போகியிங்கே ! சாதிமணி உலையிலிட்டுச் சதிவெறியாம் பாலையூற்றி மோதிபகை வளர்வெல்லம் மொத்தமுமாய் அதிலிட்டு வீதிகளில் குருதிவாடை வீசிடவே மனக்குடத்தில் ஆதிக்கம் பொங்கவைத்தே ஆடுவதா பொங்கலிங்கே ! காடுகளில் உழைப்பவரை கழனிச்சேற்றில் புரள்பவரை ஆடுகளின் மந்தையாக அடித்தட்டில் தாழ்ந்தவராய் மாடுகளைப் போல்விரட்டி மனிதகுலம் தலைகுனிய கேடுகளை விளைவிக்கும் கேளிக்கையாகக் காணும்பொங்கல் Read more…

மரபுக் கவிதை

என்ஓட்டம் என்இலக்கு

செந்தமிழே ஆட்சிமொழி; பள்ளி யெல்லாம்         செந்தமிழே கல்விமொழி; தெருவி  லெல்லாம் செந்தமிழே பேச்சுமொழி; வீட்டி லெல்லாம்         செந்தமிழே மழலைமொழி; குவிந்தி ருக்கும் செந்தமிழின் நூல்களெல்லாம் மொழிபெ யர்த்தும்         செந்தமிழில் பிறமொழிநூல் ஆக்கம் சேர்த்தும் எந்தமிழை உலகமொழி ஆக்க லொன்றே         என்இலக்கு என்ஓட்டம் முயல்வேன் செய்வேன்!   மக்களுக்காய் Read more…

மரபுக் கவிதை

தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி

ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில் —– அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல் பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து —– பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும் தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த —– திரைமறைவு செய்தியினை அறிந்த வ.ரா ஓங்குபுகழ் பாரதியைக் காண்ப தற்கே —– ஓரிரவு அவரிருந்த வீடு சென்றார்! மூடியுள்ள கதவுதனைத் தட்டும் போது —– முன்காப்பாய் பாபுஎன்னும் உதவி யாளன் ஓடிவந்து கதவுதனைத் திறந்து கேட்க —– Read more…

கவிதை

இழந்து விட்ட கணப்பொழுது

வாய்த்திட்ட இப்பிறவி ; வளர்ந்து நன்றாய் —-வண்டமிழின் புலமைபெற்றுக் கவிதை யாத்து தூய்மையான புகழுடனே உலகம் போற்ற —-துலங்குகின்ற பலநூல்கள் தமிழ்க்க ளித்துச் சேய்நானும் தலைநிமிர்ந்து நின்று நன்றாய் —-செழுமையான வாழ்வினிலே வாழ்வ தெல்லாம் தாய்தந்தை இருமனங்கள் கலந்தொன் றாகித் —-தமைமறந்த கணப்பொழுதின் இழப்பி னாலே ! இழக்கின்ற கணப்பொழுது பலரின் வாழ்வை —-இனிக்கின்ற வாழ்வாக உயர்த்தும் மேலே இழக்கின்ற கணப்பொழுது பலரின் வாழ்வை —-இன்னலுக்கு வழிகாட்டித் தள்ளும் கீழே Read more…

கவிதை

கிடைத்த ஐம்பது உரூபா

நடைபயிற்சி மேற்கொள்ளும் காலை நேரம் —-நல்லிருட்டு விலகியொளி படரும் நேரம் விடைகொடுத்து சோம்பலுக்கு நடந்த போது —-விழிகள்தாம் கண்டதொரு பணத்தின் தாளை ! கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்த வாறு —-கால்விரலால் எடுத்ததனைக் காணும் போது கிடைத்தத்தாள் ஐம்பதென்று தெரிந்து கொண்டு —-கீழ்ச்சட்டைப் பைக்குள்ளே மறைத்து வைத்தேன் ! இயல்பாக நடப்பதற்குத் தொடங்கும் போதோ —-இருநண்பர் அருகினிலே வந்து சேர்ந்தார் கயல்முள்தான் பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டு —-கடுகடுப்பைத் தருவதைப்போல் நெஞ்சிற் குள்ளே Read more…

கவிதை

வரதட்சணை

சுற்றமுடன் வந்தவர்கள் பெண்ணைப் பார்த்தார் சுகமானப் பாட்டுதனைப் பாடக் கேட்டார் கற்றிட்ட கல்வியினைப் பணியைக் கேட்டார் கால்களினை நடக்கவிட்டே ஊனம் பார்ததார் பெற்றவர்கள் சொத்துகளைச் சரியாக் கேட்டார் பெயரளவில் சிற்றுண்டி சுவைத்த பின்னர் சற்றேனும் நெஞ்சமதில் ஈர மின்றிச் சரியாக தட்சணையை எடுத்து ரைத்தார் ! குணம்பார்க்கும் குணமில்லா மதிப டைத்தோர் குலமகளின் தரந்தன்னைப் பார்த்தி டாமல் பணம்பார்த்தார் ! பாவையரைப் பணத்தை வைத்துப் பார்க்கின்ற இழிவான செயலைச் செய்தார் Read more…

கவிதை

சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்

கழிக்கின்றோம் பழையவற்றைக் காணவாரீர் எனவழைத்தே விழியெரிய நேயத்தை விளையன்பை எரியவைத்தே கழிவென்றே மனிதத்தைக் கருகவைத்துக் கணியன்தன் வழியடைத்துக் கொளுத்துகின்ற வன்முறையா போகியிங்கே !