நிஜமாயிருக்கிறேன்
முரணானவள் என
முகம் சுழிக்கிறார்கள்.
மாக்கோலம் போடுவது
மருதாணி இடுவது
பூச்சரம் தொடுப்பது
கோயிலுக்குப் போவது
இப்படி எதுவுமே
என்னிடத்தில்
இல்லாததால்
விடிவேதும் இல்லாது
வேதனைப்படுகிறேனாம்.
அடங்காப்பிடாரி என
ஆசைதீரக் கத்தட்டும்
அதற்குமேல் என்னவுண்டோ
எல்லாமே சொல்லட்டும்.
நான், நிஜமாகத்தானிருப்பேன்
இவர்கள் முரணானவள் என
முகம் சுழித்தே வாழட்டும்…! ”