தொடர் 17
அசை, சீர் , எதுகை , மோனை மற்றும் இயைபு அனைத்தும் தற்போது தங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இப்போது பா வகைகளைத் தெரிந்து கொள்வோம்.
பாவகை சுருக்கமாகக் காணும் போது
நான்கே வகைகளில் காணலாம்
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா
இப்போது வெண்பாவைப் பார்ப்போம்
வெண்பா என்றதுமே தங்களுக்கு ஞாபகத்தில் வர வேண்டியவை
சீர் – ஈரசைச்சீர்கள் 4
காய்ச்சீர்கள் 4
தளை – இயற்சீர் மற்றும் வெண்சீர்
வெண்டளை
எதுகை- அடிஎதுகை ( போதுமானது)
மோனை- பொழிப்பு மோனை ( போதும்)
இன்னொன்று முக்கியமானது
வெண்பாவின் நான்காம் அடியின் ஈற்றுச்சீர் அதாவது கடைசி சீர் நாள் மலர் காசு பிறப்பு எனும் வாய்பாட்டில் இருக்க வேண்டும்.
நாள் – நேர்
மலர் – நிரை
காசு- நேர்பு
பிறப்பு – நிரைபு
எடுத்துக்காட்டு
நாள் – வான், விண், பார், நாள்
மலர்- சுகம், வனம், மணம்
காசு- மாடு, நாடு, பாடு தேடு
பிறப்பு- அறிவு, நெருப்பு , உதவு
வெண்பா வகைகள்
குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
நேரிசை பஃறொடை வெண்பா
இன்னிசை பஃறொடை வெண்பா
கலிவெண்பா
குளக வெண்பா
கட்டளை வெண்பா
ஆகா இத்தனை வகைகள் உள்ளதா என்று தி கை க் கா தீ ர் கள்
எல்லா வெண்பாக்களும் ஒன்றுதான்
இலக்கணம் ஒன்றாகத்தான் இருக்கும் அளவும் சிலநுணுக்கங்களும் மட்டுமே மாறும். அவ்வளவுதான்
வெண்பா இலக்கணம் மிகவும் எளிமையானது
1- 2 , 2-1, 1-1 இதனை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் போதும்.
கற்க கசடற கற்பவைக் கற்றபின்
நிற்க அதற்குத் தக
இது குறள் வெண்பா
இரண்டே இரண்டு அடிகள் கொண்டதுதான் குறள் வெண்பா
அதுவும் ஒரு அடுக்கு 4 சீர்
அடுத்த அடிக்கு 3 சீர்
ஏழே சீர்கள்
அதுவும் கடைசி சீர்
நாள் மலர் காசு பிறப்பு என நிறைவு பெற வேண்டும்
அவ்வளவுதான்
குறள் வெண்பா
விதி
இது இரண்டு அடிகளைக் கொண்டது
அடிஎதுகை
பொழிப்பு மோனை
முதல் அடி நான்கு சீர்கள்
இரண்டாவது அடி மூன்று சீர்கள்
ஈற்றுச்சீர் நாள் மலர் காசு பிறப்பு என நிறைவு பெற வேண்டும்
எடுத்துக்காட்டு
எழுந்துவா இங்கே எனதுயிரே உன்முன்
விழுந்தவர் ஆவர் விழுது
சாதாரண சொற்களே இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளதைக் காணுங்கள்
அதே நேரத்தில் எதுகை மோனையும் வந்துள்ளதையும் கவனியுங்கள்.
சிந்தியல் வெண்பா
விதி
இது மூன்று அடிகளைக் கொண்டது
அடிஎதுகை
பொழிப்பு மோனை
முதல் இரண்டு அடிகள் – நான்கு சீர்கள்
மூன்றாவது அடி மூன்று சீர்கள்
ஈற்றுச்சீர் நாள் மலர் காசு பிறப்பு என நிறைவு பெற வேண்டும்
எடுத்துக்காட்டு
அழுந்தும் துயரங்கள் ஆர்த்தெழுந் தாலும்
எழுந்துவா இங்கே எனதுயிரே உன்முன்
விழுந்தவர் ஆவர் விழுது
நேரிசை வெண்பா
விதி
இது நான்கு அடிகளைக் கொண்டது
அடிஎதுகை
பொழிப்பு மோனை
முதல் 3 அடிகள் நான்கு சீர்கள்
இரண்டாவது அடி நான்காவது சீர் தனிச்சொல் இது முதல் இரண்டடிக்கான எதுகைகளுடன் ஒத்திருக்க வேண்டும்.
நான்காவது அடி மூன்று சீர்கள்
ஈற்றுச்சீர் நாள் மலர் காசு பிறப்பு என நிறைவு பெற வேண்டும்
எடுத்துக்காட்டு
கடைத்தெரு சென்று கடலை உருண்டை
வடையுடன் வாங்கி வருவோம் -உடையைச்
சரிசெய்து கொண்டு சடுதியில் வாவா
சிரிக்கும் முகமலர் சேர்த்து
இன்னிசை வெண்பா
விதி
இது நான்கு அடிகளைக் கொண்டது
அடிஎதுகை
பொழிப்பு மோனை
முதல் 3 அடிகள் நான்கு சீர்கள்
நான்காவது அடி மூன்று சீர்கள்
ஈற்றுச்சீர் நாள் மலர் காசு பிறப்பு என நிறைவு பெற வேண்டும்
எடுத்துக்காட்டு
கீரை விலைஎன்ன கேள்வி இரண்டுண்டா
பேரை உரைப்பாயா பேரழகே ஊரில்
உனைக்காண இங்கே ஓடி வருவேன்
நினைக்காயோ நெஞ்சில் இனித்து
நேரிசை பஃறொடை வெண்பா
விதி
இது 5 முதல் 12 அடிகளைக் கொண்டது
அடிஎதுகை
பொழிப்பு மோனை
இறுதி அடி தவிர்த்து நான்கு சீர்கள்
ஒவ்வொரு இரண்டாவது அடி நான்காவது சீர் தனிச்சொல் இது ஒவ்வொரு இரண்டடிக்கான எதுகைகளுடன் ஒத்திருக்க வேண்டும்.
இறுதி அடி மூன்று சீர்கள்
ஈற்றுச்சீர் நாள் மலர் காசு பிறப்பு என நிறைவு பெற வேண்டும்
எடுத்துக்காட்டு
நாரெடுத்துப் பூத்தொடுத்து நானுனக்குச் சூட்டுகிறேன்
நீரெடுத்து ஊற்றுவேன் நின்றனுக்குப் – பேரெழிலே
கார்மேகம் பெய்தும் கரையா நிலவே
சீர்கொண்டு நான்வரவா செந்தமிழே – பார்வணங்கும்
கவிஞர்ப் படைசூழ காவலரும் சூழப்
புவிமகள் போற்றப் புகழ்ந்து
இன்னிசை பஃறொடை வெண்பா
விதி
இது 5 முதல் 12 அடிகளைக் கொண்டது
அடிஎதுகை
பொழிப்பு மோனை
இறுதி அடி தவிர்த்து நான்கு சீர்கள்
இறுதி அடி மூன்று சீர்கள்
ஈற்றுச்சீர் நாள் மலர் காசு பிறப்பு என நிறைவு பெற வேண்டும்
எடுத்துக்காட்டு
நாரெடுத்துப் பூத்தொடுத்து நானுனக்குச் சூட்டுகிறேன்
நீரெடுத்து ஊற்றுவேன் நின்றனுக்குப் – பேரெழிழே
கார்மேகம் பெய்தும் கரையா நிலவே
சீர்கொண்டு நான்வரவா செந்தமிழே – பார்வான்
கவிஞர் படைசூழக் காவலரும் சூழப்
புவிமகள் போற்றப் புகழ்ந்து
மற்ற வெண்பாக்களைப் பிறகு காணலாம்
2 Comments
நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் · மே 31, 2020 at 8 h 14 min
அருமை, இனிய நல்வாழ்த்துகள்.
how long is finasteride effective for · ஏப்ரல் 22, 2025 at 20 h 52 min
In the 2016 ACC AHA HFSA HF guidelines focused update 3, ivabradine was recommended as a Class IIa, Level of Evidence B R 1, 2 therapy to reduce the risk of HF hospitalization in patients with HFrEF LVEF 35 already receiving GDMT including a beta blocker at maximally tolerated dose, and who are in sinus rhythm with a heart rate greater than 70 bpm at rest Figures 2 and 3, Tables 1 and 5 discount finasteride