தொடர் 15

இப்போது வெண்பாவுக்கு உரிய சீர்களும் தளைகளும் தங்களுக்குத் தெரியும். இருந்தாலும் ஞாபகப்படுத்திப்பார்ப்போம்.

மா
விளம்
காய்

இவை சீர்கள்

எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்

ஈரசைச்சீர்கள் 4
காய்ச்சீர்கள் 4

11
21
12
22
111
211
121
221

தளைகள்

இரண்டு அசைச்சீர்களில் 1 வந்தால் அடுத்துவருவது 2 தான்

2 வந்தால் 1 தான்

மூன்று அசைச்சீர்களில் 1 வந்தால் அடுத்து வருவதும் 1 தான்

அதாவது

மா முன் நிரை
விளமுன் நேர்
காய் முன் நேர்

அவ்வளவுதான்

எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்

அகர – முதல
நிரைநேர்- நிரைநேர்
புளிமா – புளிமா
மா முன் நிரை

தேனே – திரவியமே
நேர் நேர் – நிரை நிரை நேர்
தேமா- கருவிளங்காய்
மா முன் நிரை

இதனைத் திருப்பிப் போடுங்கள்

திரவியமே – தேனே
நிரை நிரை நேர் – நேர் நேர்
கருவிளங்காய் – தேமா
காய் முன் நேர்

களப்பணி ஆற்று
நிரைநிரை – நேர்நேர்
கருவிளம் – தேமா
விளமுன் நேர்

அடுத்து நேர்ஒன்றிய ஆசிரியத்தளை
நிரை ஒன்றிய ஆசிரியத்தளை
ஒன்றாத ஆசிரியத்தளை

ஒரு எளிமையான வழி உண்டு

ஆசிரியப்பாவில் வெண்பா போலவே ஈரசைச் சீர்கள் மட்டுமே பயின்று வரும்
மூவசைச்சீர்களில் காய்ச்சீர் மட்டும் ஓரிரு இடங்களில் மட்டும் வரும்

11
21
12
22

இது உங்களுக்குத் தெரியும்

நேர் நேர்
நிரை நேர்
நேர் நிரை
நிரை நிரை

நேர் வந்தால் நேர்
இது நேர்ஒன்றிய ஆசிரியத்தளை
நிரை வந்தால் நிரை
இது நிரைஒன்றிய ஆசிரியத்தளை

1 வந்தால் 1
2 வந்தால் 2

அவ்வளவுதான்

மாறி வந்தால் அவை ஒன்றாத ஆசிரியத்தளை எனப்படும்

அவ்வளவே

எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்

1

வாரீர் வாரீர் வையத் தீரே
தாரீர் தாரீர் தானம் தாரீர்

வாரீர் – நேர்நேர் – தேமா
வாரீர் – நேர் நேர் – தேமா
வையத் – நேர்நேர்- தேமா
தீரே – நேர்நேர்- தேமா

அனைத்துசீர்களையும் பாருங்கள் நேரில் முடிந்து நேரில் தொடங்கியிருக்கும் . இது நேரொன்றிய ஆசிரியத்தளையாகும்

2.

வளமிகு வயல்வெளி வளம்தர நதிவரும்

இந்த அடியைக் கவனியுங்கள்

வளமிகு – நிரைநிரை – கருவிளம்
வயல்வெளி – நிரைநிரை – கருவிளம்
வளம்தர -நிரைநிரை – கருவிளம்
நதிவரும்- நிரைநிரை- கருவிளம்

அனைத்துசீர்களையும் பாருங்கள் நிரையில் முடிந்து நிரையில் தொடங்கியிருக்கும் . இது நிரையொன்றிய ஆசிரியத்தளையாகும்

3

உயர உயரப் பறப்பினும் என்ன
ஊர்வாழ் குருவி பருந்தென ஆகா

இவற்றையும் பாருங்கள்

உயர – நிரைநேர்
உயரப் – நிரைநேர்
பறப்பினும் – நிரைநிரை
என்ன. – நேர்நேர்

ஊர்வாழ் – நேர்நேர்
குருவி – நிரை நேர்
பருந்தென – நிரைநிரை
ஆகா – நேர் நேர்

இவற்றில் நேர் முன் நிரை

நிரை முன் நேர் என மாறிவந்துள்ளதா?

இது ஒன்றாத ஆசிரியத்தளை ஆகும்

( இது வெண்பாவில் வெண்டளை எனப்படும் )

மற்ற தளைகளை அடுத்து காண்போம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

மரபுக் கவிதை

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

மரபுக் கவிதை

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.