தொடர் 14

இரண்டு அசைகள் மற்றும் மூன்று அசைகள் உள்ள சீர்கள் பற்றி இப்போது தங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்

சரி இந்த இரண்டு அசைச்சீர்களை வைத்துக் கொண்டு நாம் எப்படி கவிதைகளை எழுத முடியும் என்று பார்ப்போமா?

அன்பைக் கலந்துநாம் அறத்தை வளர்ப்போம்//
இன்முகத் தோடுநாம் என்றும் வாழ்வோம் //

இந்த இரண்டடிகளைக் காணுங்கள்

தேமா கருவிளம் புளிமா புளிமா
கூவிளம் கூவிளம் தேமா தேமா

அனைத்துமே ஈரசைச் சீர்கள்

இன்னும் இரண்டடி எழுதுவோம்

கன்னித் தமிழின் காதல ராகி
நன்மை வளர்த்தே நாம்சிறப் போமே!

இவற்றிலும் பாருங்கள்

தேமா புளிமா கூவிளம் தேமா
தேமா புளிமா கூவிளம் தேமா

இங்கும் ஈரசைச் சீர்களே உள்ளன.

அன்பைக் கலந்துநாம் அறத்தை வளர்ப்போம்//
இன்முகத் தோடுநாம் என்றும் வாழ்வோம் //
கன்னித் தமிழின் காதல ராகி//
நன்மை வளர்த்தே நாம்சிறப் போமே!//

இப்போது நன்றாக இன்னொன்றும் கவனியுங்கள்

அன்பைக்
இன்முகத்
கன்னித்
நன்மை

எதுகை வந்துள்ளதா?

அன்பை – அறத்தை
இன்முக – என்றும்
கன்னி – காதலராகி
நன்மை – நாம்சிறப்

மோனை வந்துள்ளதா?

இது சாதாரணப் பாடல்தான்

எதுகை மோனையுடன் அடிதோறும் நான்கு சீர்களோடு வந்துள்ளது.

இத்துடன் தளை என்றால் என்ன வென்று தெரிந்து கொண்டால் பெரும்பாலான பாவகைகளையும் நாம் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்

தளை என்றால் கட்டுதல் என்று ஒரு பொருள் உண்டு. இங்கு சீர்களைக் கட்டுவதால் தளை எனப்படுகிறது.

வெண்டளை
ஆசிரியத்தளை
கலித்தளை
வஞ்சித்தளை

பாவகையில் பயின்று வருவதை வைத்தே தளை அதன் பெயரைப் பெறுகிறது

வெண்பாவில் உள்ளது வெண்தளை
ஆசிரியப்பாவில் வந்தால் ஆசிரியத்தளை
கலிப்பாவில் உள்ளது கலித்தளை
வஞ்சிப்பாவில் வந்தால் வஞ்சித்தளை

சீர்களை இதுவரை நான்கு வகையாகப் பார்த்தோம்

மாச்சீர் – தேமா நேர்நேர்
புளிமா நிரைநேர்
விளம் – கூவிளம் நேர்நிரை
கருவிளம் நிரைநிரை

காய் – தேமாங்காய்
புளிமாங்காய்
கூவிளங்காய்
கருவிளங்காய்
கனி – தேமாங்கனி,
புளிமாங்கனி
கூவிளங்கனி
கருவிளங்கனி

இந்த சீர்கள் சேர்வதை வைத்தே தளைகள் பெயர் பெறுகின்றன

மாச்சீர் விளச்சீர்களைப் பார்ப்போம்

மாமுன் நிரை வந்தாலும்
விளமுன் நேர் வந்தாலும்
அது இயற்சீர் வெண்டளை எனப்படும்

காய் முன் நேர் வந்தால் அது வெண்சீர் வெண்டளை எனப்படும்

கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்

கற்க – கசடற
நேர்நேர்- நிரை நிரை

தேமா- கருவிளம்
இங்கு மா முன் நிரை வந்துள்ளது

கசடற – கற்பவை
நிரைநிரை- நேர்நிரை
கருவிளம்- கூவிளம்
இங்கு விளமுன் நேர் வந்துள்ளது

மேற்கண்டவை இயற்சீர் வெண்டளை ஆகும்.

மணற்கேணி – மாந்தர்க்கு
நிரைநேர்நேர் – நேர்நேர்நேர்
புளிமாங்காய் – தேமாங்காய்
இங்கு காய்முன் நேர் வந்துள்ளது
இது வெண்சீர் வெண்டளை ஆகும்

மேற்கண்ட 3 சீர்களும் வெண்பாவில் வரும் சீர்கள் எனவே வெண்டளை எனப்படுகின்றன.

மற்ற தளைகளைப் பிறகு காண்போம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »