தொடர் 13

அசைபிரித்தீர்களா?

சரிபாருங்கள் இப்போது…

வானிருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
நிலவினிலே – நிரைநிரைநேர் – கருவிளங்காய்
வண்ணமெலாம் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
குடியிருக்கும் – நிரைநிரைநேர் – கருவிளங்காய்

வண்டுவந்து – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
தேனெடுக்க – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
வண்ணமலர் நேர்நிரைநேர் – கூவிளங்காய்
பூத்திருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்

தேனிருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
கூட்டினிலே – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
தேன்குடிக்கும்  – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
ஈயிருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்

தென்றலெனும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
காற்றுவேண்டி- நேர்நிரைநேர் – கூவிளங்காய்
அவள்முகத்தில் – நிரைநிரைநேர் – கருவிளங்காய்
முத்திருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்

மீனிருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
வதனமதில் – நிரைநிரைநேர் – கருவிளங்காய்
மேதினியோ – நிரைநிரைநேர் – கருவிளங்காய்
குடியிருக்கும் – நிரைநிரைநேர் – கருவிளங்காய்

மெருகேற்றும் – நிரைநேர்நேர் – புளிமாங்காய்
முகப்பூச்சில் – நிரைநேர்நேர் – புளிமாங்காய்
அழகெல்லாம் – நிரைநேர்நேர் – புளிமாங்காய்
ஒளிந்திருக்கும் – நிரைநிரைநேர் – கருவிளங்காய்

தானிருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
இடத்தினையே – நிரைநிரைநேர் – கருவிளங்காய்
தன்மணத்தால் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
வெளிக்காட்டும் – நிரைநேர்நேர் – புளிமாங்காய்

தண்மலரின் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
அழகொளியோ – நிரைநிரைநேர் – கருவிளங்காய்
எனைக்கிறுக்காய் – நிரைநிரைநேர் – கருவிளங்காய்
மாற்றிடுமே – நேர்நிரைநேர் – கூவிளங்காய்

சரியாக உள்ளதா?

தேமாங்காய் மட்டும் வரவில்லை பாருங்கள். தேமாங்காய் நீங்கள் அசைபிரிக்கும் வந்திருந்தால் அது தவறு. மீண்டும் சரிபாருங்கள்.

இது வரை பார்த்த சீர்களே பெரும்பாலான மரபு வகைகளை எழுதுவதற்குப் போதுமானதாக இருக்கும் என்றாலும் இப்போது கனிச்சீர்களையும் தெரிந்து கொள்வோம்.

கனிச்சீர்கள்

இதுவும் எளிதுதான்.

காய்ச்சீர்களில் உள்ள நேரசைச்சீர்களை எடுத்துவிட்டு நிரையசைச் சீர்களாக மாற்றிவிட்டால் போதும் அதுவே கனிச்சீராக மாறிவிடும்.

111 தேமாங்காய்
211 புளிமாங்காய்
121 கூவிளங்காய்
221 கருவிளங்காய்

இப்போது இதனை கவனியுங்கள்

112 தேமாங்கனி
212 புளிமாங்கனி
122 கூவிளங்கனி
222 கருவிளங்கனி

இதுவே கனிச்சீர்

ரோசா – இது தேமா
ரோசாமலர் – இது தேமாங்கனி
காதல் – இது தேமா
காதல்மலர் – இது தேமாங்கனி

மலரே – இது புளிமா
மலரேதடி – இது புளிமாங்கனி
களமா – இது புளிமா
களமாடிடு- இது புளிமாங்கனி

தேன்மலர் – இது கூவிளம்
தேன்மலரே – இது கூவிளங்காய்
தேன்மலரிது – இது கூவிளங்கனி
வான்முகில் – இது கூவிளம்
வான்முகிலே- இது கூவிளங்காய்
வான்முகிலெது – இது கூவிளங்கனி

கருமுகில் – இது கருவிளம்
கருமுகிலே – இது கருவிளங்காய்
கருமுகிலினில் – இது கருவிளங்கனி
விழிமலர் – இது கருவிளம்
விழிமலரே – இது கருவிளங்காய்
விழிமலரிலே – இது கருவிளங்கனி

வாய்பாடு

நேர்நேர்நிரை – தேமாங்கனி
நிரைநேர்நிரை – புளிமாங்கனி
நேர்நிரைநிரை – கூவிளங்கனி
நிரைநிரைநிரை – கருவிளங்கனி

இப்போது

ஈரசை மற்றும் மூவசைச் சீர்களை நன்கு அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »