யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும்.

நம்மில் எத்தனை பேருக்கு, யாளி(யாழி) என்றால் என்னவென்று தெரியும்..?

யாளிகள்:~
~~~~~~~~
தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும்.
இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.

சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவூட்டும் உறுப்புடன் காணப்படும் யாளி, இந்தியாவில் கி.மு. 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்துக்கு வந்தது…

சீனாவில், பாண்டா கரடி, இத்தாலியில் வெள்ளைப்புலி இப்படிச் சில விலங்கினங்கள் அழியாமல் இப்போதும் பாதுகாப்பதுபோல், யாளியையும் நமது முன்னோர்கள் பாதுகாத்து வந்துள்ளனர். இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாளிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில்கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை “யாளி வரிசை” என்றே அழைக்கிறோம்.

ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில்கூட இந்த யாளிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது.

மேலும், தஞ்சைபெரியகோவில், மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ்மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாளியின்சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட யாளி சிலை தென்இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்குமேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறியதவறிய உண்மை.

குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில்பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாளி சிலைகளை முழுமனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். இனியாவது, கோயில் செல்லும் நாம் அனைவரும் இந்த யாழின் சிலையைப் பார்த்து, அதன் சிறப்பை அறிவோம்.

“வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும்”

– நக்கண்ணையார்,

விளக்கம்:-
~~~~~~~~
அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற
வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவூட்டும் உறுப்புடன் காணப்படும் யாளி.

குமரி கண்டம் என்ற லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகம் என்றும் நம்பப்படுகிறது. யாளி காட்டில் வாழும் விலங்கு என்றும், அது புலியைக் கொல்லும் என்றும், யானையை அது தன் நகங்களால் பற்றி இழுக்கும் என்றும் அதன் ஆற்றலை விளக்குகிறது. யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைகளோ வேறு ஒரு விலங்கின் சாயலில் வடிவமைக்கப்படுகின்றன. யானை, சிங்கம் (சிம்மம்), ஆடுகளின்(மகரம்) தலைகளையும், அரிதாக நாய், எலி போன்றவற்றின் தலைகளையும் யாளியிடம் காணலாம்.

வகைகள்:-
~~~~~~~~
(1) சிம்ம யாளி
(2) மகர யாளி
(3) யானை யாளி

யாளிகள் கோவில்களை பாதுகாப்பதாகவும், மக்களை ஆலயத்திற்கு வழிநடத்துவதாகவும் நம்பப்பட்டது.

நம் தமிழ் வரலாற்றில் யாளிகள் யானையின் உயரத்தை விட, (3,4) மடங்கு உயரமாக இருந்துள்ளது. ஏனெனில் சிற்பங்களில் யானையை விட பெரிய அளவிலும், அதன் மேல் இருந்து யானையை ஆதிக்கம் செலுத்தும் வகையில் உள்ளது. இது அன்றில் பறவை போலவும், அனிச்சம் செடியினம் போலவும் வாழ்ந்து மறைந்துபோன உயிரினம் ஆகும்.

எனவே, முற்காலங்களில் காணப்பட்டு அழிந்த இனமான டையனோசர்களாகவும் கருதப்படுகின்றது. இன்னும் பல அறிஞர்கள் இவற்றை பாண்டியர்களின் டையனோசர்களாகவும் குறிப்பிடுகின்றனர்.

ஏனெனில், தமிழ் மன்னர்களின் மூவேந்தர்களில் பழமையான பாண்டியர்களே லெமூரியாவை ஆட்சி புரிந்தனர். ஆகவே இவை லெமூரியாவில் வாழ்ந்து அழிந்த இனமாகவே கருதப்படுகிறது.

இதன் உண்மையை மட்டுமல்லாமல், நம் தமிழ் வரலாற்றை உலகிற்கு அறிந்து கொள்ள செய்ய இயலாமலும், அகழ்வராய்வுகளை தடுக்கும் நோக்கிலேயே இந்திய அரசு செயல்படுகின்றது.

இயந்திரம்:~
~~~~~~~~~
நம் அறிவியலில் இவை வேற்றுகிரக வாசிகளின் வாகனமாகவும் (ufo, flights) இருந்திருக்கலாம்,

நம் யாளிகள் கடவுளின் பாதுகாவலனாகவும் ( ஆலயங்களில் இந்த பாதுகாவலர்களை கடக்காமல் கடவுளை காண இயலாது) இருக்கிறது. மேலும் இந்து கடவுள்களுள் தேவர்களின் தலைவனான இந்திரனின் வாகனம் ஐராவதம் ( யானை). அது மிக நீண்ட (நான்கு) தந்தங்களை உடையதாகவும், வானில் பறந்து செல்ல ஏதுவாக இறக்கைகளையும் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், யாளியின் உருவத்தை ஒத்ததாகவும் காணப்படுவதால், வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் இயந்திரமாகவும் இருந்திருக்கலாம்.

ஆகவே, அவற்றை கண்ட அன்றைய மக்கள் அதிசக்தி படைத்த அவற்றை தங்கள் கடவுளின் பாதுகாவலனாகவும், அந்நாளில் மனிதனை அச்சுறுத்தம் கொடும் மிருகங்களான சிங்கம், புலி, யானைகளை அடக்கி அதிகாரம் செய்வதாக தங்களது சிற்பங்களில் காட்டியுள்ளனர்.

இந்த யாளியை அறிவியல் பூர்வமாகவோ, உண்மை பூர்வமாகவோ காண்பது உங்களின் முடிவு.
நம் தமிழ் மக்கள் அறிவியலிலும், கற்பனை வளத்திலும், வீரத்திலும் சிறந்து விளங்கியதை நாம் அறிவோம். இன்னும் நம் தமிழர் வரலாற்றை தேடி செல்லும் தேடலாய்…

தொகுப்பு தொடரும்… 2


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »