யாளியை வியாழம், சரபம் என்றும் அழைக்கிறார்கள். இது, அன்றில் பறவை போலவும், அனிச்சம் செடியினம் போலவும் வாழ்ந்து மறைந்துபோன உயிரினம் ஆகும்.
யாழிகளின் வகைகள்:-
•••••••••••••••••••••••••••••••••
சிம்ம யாளி
மகர யாளி
கஜ யாளி
ஞமலியாளி
பெரு யாளி
என யாழிகளின் வகைகள் இருக்கின்றதாம்..!
யாளியில் மிகவும் பலம் வாய்ந்தது கஜயாளியும், சிம்மயாளியும் தான்..! இதை கண்டால், அனைத்து விலங்குகளும் நடுங்கும் டைனோசர் உட்பட… இவைதான் டைனோசர் கால காட்டின் ராஜாக்கள்.
ஒரு யாளி பத்து காட்டு யானைகளுக்குச் சமம், காட்டு யானை என்றால், இப்போது உள்ளவை அல்ல 10000 BC படத்தில் வருமே அதை விடப் பெரியது…
இப்படி பட்ட யாளியை நம் தமிழர்கள் எப்படி அடக்கினார்கள் என்று தானே கூறுகிறீர்கள்… அது தான் நம் தமிழரின் நுணுக்கமான வீரம்.
யாளியை அடக்குபவன் மாவீரனாக இருக்கவேண்டும். அவன் சில மூலிகைகளின் பலம் கொண்டு, யாளியை அடக்கும் ஆற்றல் பெற்றவன் “கஜகேசரி” ஆவன். (வீரன் என்பவன் தனி ஆட்களை சமாளிப்பவன், மாவீரன் என்பவன் நூறு வீரர்களை ஒரே போரில் சமாளிக்கும் திறன் கொண்டவன்)
இந்த மூலிகைகள் என்னென்ன என சித்தர்கள் பாடல்களில் தெளிவாக உள்ளது.சில மூலிகைகளை உண்டால் யாளியின் பலம் கிடைக்கும் என கொடுத்து இருப்பார்கள். அதை வைத்து யாளியை அடக்கி அதற்க்கு கடிவாளம் போடுவார்கள்…
பின், அதை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பார்கள். ஆனால் பின் வந்தவர்கள் விளக்கவுரையில் ஒரு யாளின் பலத்தோடு பெண்ணை புணரலாம் என தவறாக கொடுத்துள்ளனர்…
நான் தெரியாமல் தான் கேட்கிறேன்…
ஒரு யாளி பத்து யானைக்கு சமம் என்றால், பத்து யானை பலம் ஒரு பெண்மேல் விழுந்தால், என்ன ஆவது…? சற்று கூட, யோசிக்காமல் எப்படி இப்படி விளக்கம் எழுதுகிறார்கள் என தெரியவில்லை… புணர்தல் என்பதற்கு, சந்தித்தல் என ஒரு விளக்கம் தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியம் (எழுத்ததிகாரம் 108)
யாளியை அடக்கிய மாவீரன் மதிப்பு மிகுந்தவனாக இருந்திருக்கிறான், அதுவும் கஜயாளி அடக்கியவனை மிகப்பெரிய தலைவனாக மதிக்கபட்டுள்ளான். அந்த மாவீரன் பட்டப் பெயராக கஜகேசரி என அழைக்கபடுவான். எல்லாம் மூலிகை மூலம்தான் என்றாலும், அதற்கும் தைரியம் வேண்டும் அல்லவா..? கோவில்களில் முகப்புகளில் இந்த யாளியின் உருவம் இருக்க காரணம்… இதைக் கண்டால் தைரியமான விழிப்புணர்வு கிடைக்கும் என்கிறார்கள்.
இந்த யாளியின் எழும்புகளில் இருந்து உருவாக்கபட்டதே..! யாழ் இசை கருவி என்றும், “குறிப்பிட்ட யாழ் மிகவும் அதிகபடியான ஒலியலைகளை கொண்டதாக இருந்தது எனவும் உயிரை கொன்றது எனவும் கூறுகிறார்கள்.”
காலத்தால் இவை அழிந்து மரவகைகளை பயன்படுத்தி யாழ் செய்யபட்டதாக கூறுகிறார்கள்.
கஜயாளி
•••••••••••••
யானையின் துதிக்கை, தந்தம் பொருந்திய அமைப்புள்ளதை கஜயாளி என்பர்.
சிம்மயாளி
••••••••••••••••
சிங்கம் போல் கூரிய பற்களும், நகங்களும், பிடரி உள்ளதை சிம்மயாளி என்பர்.
மகரயாளி
•••••••••••••••
ஆடுகளைப்போல், கொம்பும், சிறிய வால் உள்ளதை மகரயாளி என்பர்.
ஞமலியாளி
•••••••••••••••••
நாயை போல் நாக்கு மிக நீளமானதை மெல்லிய உடலுடையதை ஞமலியாளி என்பர்.
பெருயாளி
••••••••••••••••
பெருச்சாளியை போல் உள்ள சிங்கமுக யாளியை விட, உயரம் குறைவாக உள்ளதை கூறுவர்…
யாளி குறித்த மருத்துவப் பாடல்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில்
“யாளி” யென விஞ்சுவார் போகத்தில்(போர்களத்தில்)
– அகத்தியர்
நிரச்சொன்னர் மெய்யாம் தகரையை ஒத்த
யாளி(ஆழி),அன்னர்(அன்னம்),புலத்து கையான் தகரை
ஒத்துகால்
– தேரையர்
யாளி கற்பனை விலங்கு அல்ல. அதற்க்கு நம் குமரிக்கண்டம் அகழ்வாரச்சி செய்தால் தான் தெரியும்.
வெளிநாட்டவர் டைனோசர்தான் பலம் வாய்ந்த விலங்கு என்கிறார்கள்…
ஆனால்..? அங்கோர்வாட் கோவிலில் டைனோசரை காட்டிலும் யாளியின் சிற்பம் அதிகம் உள்ளது என இங்கு சுட்டுகிறேன். டைனோசர் உருவம் சில தான் இக்கோவிலில் உள்ளன.
டைனோசர்களைப் பார்த்து, வியக்கும் ஆங்கிலேயர்கள் மத்தியில்…
அதற்க்கும் மேலான யாளியையே கட்டி ஆண்டுள்ளான் என்பது, தமிழனின் வீரத்தை பறை சாற்றும் விதமாக உள்ளது. கோவில்களில் இதற்கு யாளி சிற்பத்தின் மீது தமிழன் இருப்பது சான்றாக உள்ளது.
ஆய்வுக்கு உதவிய நூல்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~
(1) அகத்தியர் வைத்தியகாவியம்~1000
(2) தேரையர் வைத்திய சாரம்
(3) அகத்தியர் பரிபூரணம்~1200
(4) பழங்கால கோவில்கள்(குறிப்புகள்)
(5) பெரியகோவில் ஆய்வுகள்(குறிப்புகள்)
(6) போகர் 7000

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »