போராட்டத்தை சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது. பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துக்கொண்டேத்தான் இருக்கிறது. பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தன் தேவைகளை பூர்த்தி செய்கிறது (நேதாஜி). போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து, போராட்டத்தில் மடிவதுதான் வாழ்க்கை. இன்று மனிதன், போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றான், அதைத்தான் விரும்புகின்றான். வாழ்க்கையில் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்திக் கொள்ள ஓவ்வொரு மனிதனும் இவ்வுலகில் போராட வேண்டியுள்ளது.

பூந்தோட்டத்தில் தினம் தினம் புதுப்புது மலர்கள் பூப்பது உண்டு. ஆனால் அவை நிலைப்பது இல்லை, அது நியதியும் இல்லை. அதுப்போலத்தான் வாழ்க்கை பூந்தோட்டத்தில் இன்பம், துன்பம் வருவதும். எவ்வாறு பூந்தோட்டத்தில் மலர்ந்த ஓரு பூ நிலைப்பது இல்லையோ அதே வாழ்க்கை. இன்பம் மேலே மட்டுமல்ல ஓவ்வொரு படியிலும் இருக்கிறது. வாழ்க்கையில் உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் இருந்தாலும் சிரிப்பதற்கு என்னிடம் 1000 காரணங்கள் இருக்கிறது என்று வாழ்ந்து காட்டுங்கள்.

சரியான நேர்மையான வாழ்க்கை பயணப் பாதை முட்கள் நிறைந்த கரடு முரடான பாதைத்தான். இந்தப் பாதையில் முட்களாகவும், கரடுமுரடான கற்களாகவும், பிறரின் ஆவமானப் பேச்சுக்களும், பழிச்சொற்களும், நியாயமில்லாத விமர்சனங்களும் தான் நிறைந்திருக்கும். நீங்கள் இப்படிப்பட்ட பாதையில் பயணிக்கிறீர்கள் என்றால் உங்கள் நற்சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்புங்கள். வாழ்க்கைப் பயணம் இனிதாய் அமையும்.

கப்பல் வடிவமைக்கப்படுவது கரையில் நிறுத்தி வைக்கப்படுவதற்கு அல்ல! வாழ்க்கையும் கரையில் நின்று வேடிக்கைப் பார்ப்பதற்கு அல்ல!

வாழ வாருங்கள் வாழ்க்கைக்கு வழிகள் ஆயிரம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

கட்டுரை

ஒரு பரபரப்பு செய்தி…

செய்திக்காகப் பரபரப்பு அடைந்த காலம் சென்றுவிட்டது. செய்தியால் பரபரப்பு அடைகிற காலம் வந்துவிட்டது. ஒரு தகவல் புதுமையானதாகவும், தேவையானதாகவும், இருக்கும் போதுதான் அது மக்களிடையே விழிப்புனார்வு கொடுப்பதாக மாறுகிறது. மக்களை மாற்றுகிறது. ஒரு செய்தி தரும் தாக்கத்தை பொருத்து ஏராளமானவர்கள் அஜாக்கிரதை நிலையில் இருநது  தங்களைப் ஜாக்கிரதை நிலைக்குப் பழக்கப்படுத்தி கொள்கிறார்கள்.

 » Read more about: ஒரு பரபரப்பு செய்தி…  »

கட்டுரை

அர்த்தமுள்ளது வாழ்க்கை

வாழ்க்கை பலருக்கு போராட்டமான ஒன்று. அதே வாழ்க்கை தான் பலருக்கு மிகுந்த மகிழ்வை தரும் ஒன்றாகவும் இருக்கிறது. அவரவர் கண்ணோட்டத்தை வைத்தே அவரவரின் வாழ்வு மதிப்பீடு செய்யப்பட்டு அளக்கப்படுகிறது என்றால் அது மிகை இல்லை என்றே சொல்லி விடலாம்.

 » Read more about: அர்த்தமுள்ளது வாழ்க்கை  »

தன்னம்பிக்கை

வார்த்தை வன்மை

நாக்கு வன்மையானதுதான். இதனால் நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை அதைவிட வன்மையானது. இதைக் குறித்து வள்ளுவர் தனது 129 வது குறட்பாவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் இறாதே
நாவினாற் சுட்ட வடு.

 » Read more about: வார்த்தை வன்மை  »