பாரிய மரத்தின் படர்ந்து நின்ற விழுதுகள்
நின்றன உறுதியாய் நிஜம் நாங்களென
மேலிருந்து கீழாய் ஆழமாய் பற்றிய விழுதினை
அதிசயமாய் பார்த்தது புதிதாய் முளைத்த விதை!

மலர்ந்து பூப்பூவாய் கண்மலர்
புன்னகையாய் சிமிழ் வாய் திறந்து
பிஞ்சுக் கால்களை செல்லமாய் உதைத்து
பற்றிப் பிடித்திட கைகளை அசைத்து!

விழுதினில் ஒன்று உறுதியாய் நின்ற
புது விதையை பார்த்தது, சிரித்தது
முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக
நான் உன் மாமனடா என்றது!

புன்னகை பூத்தது மற்றொரு விழுதோ
பாசமாய் ஆயிரம் பொன்னகை வார்த்தது
கனிவுறும் குரலில் மென்மையாக
அத்தை நானடா கண்ணே என்றது!

ஒவ்வொரு உருவாய் ஒவ்வொரு விழுதும்
சொந்தங்கள் என்றே பந்தங்கள் காட்டின
ஆராவர இன்பக் களிப்பைக் கூட்டின
அன்பென்னும் அரும் அமுதை ஊட்டின!

விதையினை தழுவித் தாய் மரம் தாங்கிட
தந்தையின் கிளைகள் தலையைத் தடவிட
விதையின் விழிகளில் வியப்பும் திகைப்பும்
விரிந்த இதழ்களில் களிப்பும் சிரிப்பும்!

விருட்சமாவேன் நிஜமாவேன் நாளை நானும்
உ ன்னைப் போன்றே விதைகளை விதைப்பேன்
விழுதுகள் என்றே உறவுகள் வளர்ப்பேன்
அன்பில் என்றும் கலந்தே சிறப்பேன்!

கிளைகளை விரிப்பேன் பாசக்கரம் எனவே
நட்பெனும் பறவைகள் அமர்ந்திட சிலிர்ப்பேன்
உறவெனும் விழுதுகள் உரமாய் காத்திட
உறுதியாய் நின்றே நன்மைகள் பயப்பேன்!

விதையோ புதினங்கள் புத்தம் புது பார்த்தே
புன்னகையுடனே தலையினை அசைத்தது
விதையின் கண்களில் கனவுகள் விரிந்தன
பாசம் நேசம் பிறவிப் பயன் என்றன!

வினையேதுமில்லை விதைக்கும் விதையில்
விஷத்தை விதைத்தால் பயனேதுமில்லை
நல்லதை நினைத்தே நானிலம் போற்றிட
நல்விதைகள் விதைத்தால் குறையேதுமில்லை!

நாம் என்றும் நல்லன ஒன்றையே பகிர்வோம்
நாட்டுக்கும் வீட்டுக்கு நல்லதை நினைப்போம்
அன்பையும் பண்பையும் பகிர்ந்தே மகிழ்வோம்
மனிதம் மறவா மனிதராய் வாழ்வோம்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்