கொளுத்திப் போட்ட பட்டாசுகளில்
மருந்துகளைத் திரட்டிக் கொண்டிருந்தான்.
இதை வைத்தே வெடிகளைத் தயாரித்து விடுவான்.
ஒவ்வொன்று வெடிக்கும்,
ஒவ்வொன்று புஸ்ஸ்ஸ் விடும்.
அடுத்த வீட்டு அண்ணன் கொடுத்த
பழைய உடைதான், இவனுக்குப் புதிய உடை!

ஆண்டை வீட்டிலிருந்து, எப்படியும்
அம்மா, பாயசமும், வடையும் கொண்டு வந்துவிடும்.
தங்கச்சி பாப்பாவுக்கு மட்டும்
ஆண்டை வீட்டிலேயே புதுத்துணி எடுத்திட்டாங்க,
அவளுக்காக, சேர்த்துவைத்த பணத்தில் இவன்
வளையலும், பொட்டும் வாங்கி வைத்திருக்கிறான்.
தலைக்குக் குளித்தாலே போதும்,
தீபாவளி சூப்பராகத் தொடங்கிவிடும்.

ஆனாலும்,
அவனுக்கு ஒரு வேண்டுதல் உண்டு!

மட்டும் எப்போதும் போல் அப்பா
எங்கேயாவது விழுந்து கிடந்தால் போதும்,
இல்லையென்றால், வந்து குடித்துவிட்டு
இந்தத் தீபாவளியும் புஸ்ஸ்ஸ் விட்டுக்கும்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்