ஹைக்கூ ஓர் அறிமுகம் – 36

தொடர் – 36 தற்குறிப்பேற்றலும், மறைமுக கற்பனையும்.. ஹைக்கூ இன்று பலராலும் எந்தளவு விரும்பப்படுகிறதோ, அந்தளவு விமர்சிக்கப்படும் ஒரு கவிதை வடிவமாகவும் இருக்கிறது. பலரும் ஹைக்கூ எழுத விரும்புகிறார்கள்..ஆனால் ஒரு தெளிவற்ற விதிமுறைகளும்..கண்ணில் படும் ஹைக்கூக்களின் மாறுபட்ட கட்டமைப்பும் பலரையும் குழப்பிக் கொண்டே இருப்பதையும் உணர முடிகிறது. ஒரு ஹைக்கூ கற்பனை தாங்கி மலர்கிறது. ஆனால் பலரோ கற்பனையை தவிர்க்கச் சொல்கிறார்கள். அதே போல தான் உவமை, உருவகம் போன்றவையும் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 35

தொடர் – 35 ஹைக்கூவில் படிமம் படிமம் என்பது நாம் எண்ணும் கருப்பொருளை வேறு ஒன்றின் மீதோ அது பறவை..பூச்சி..மரம்..செடி..கொடி என எதுவாகவும் இருக்கலாம்..அல்லது வேறு ஒரு பொருளின் மீதோ ஏற்றிச் சொல்வது படிம உத்திமுறை. இப் படிமக் குறியீடுகளை குறிப்பிட்ட எல்லைக்குள் வகுத்துக் கொண்டு..அந்த சூழலுக்கும்..நிகழ்வுக்கும் ஏற்ப கவி அமைப்பது எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்கும்.. படிம உத்தி முறையே துவக்கத்தில் ஹைக்கூவில் கையாளப்பட்டது. ஏனெனில் அது வாசகனை பல Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 34

தொடர் – 34 சாயலும்… போலச்செய்தலும்.. இன்று முகநூல் ஹைக்கூ உலகில் அனைவரிடமும் உலவும் வார்த்தைகள் இவ்விரண்டும். சாயல் கவிதை என்பது. ஒருவர் எழுதிய கவிதையின் சாயலில் தெரிந்தோ… தெரியாமலோ வேறு ஒரு கவிஞர் அதே சிந்தனையில் கவிதை வடிப்பது… இங்கு இந்நிகழ்வானது அறிந்தும் நடக்கலாம். அறியாமலும் நடக்கலாம். இதை தவறு எனக் கூறுவதற்கில்லை. ஏனெனில் ஒரு கவிஞன் காணும் காட்சியை வேறு ஒரு கவிஞன் காணமாட்டான் என எவ்வாறு Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 33

தொடர் – 33 ஹைக்கூ என்பது தமிழில் இன்று பலரால் கவனிக்கப்படும் விதத்தில் வளர்ந்திருக்கிறது. அது மட்டுமல்லாது பலரால் ஆரோக்கியமாய் விமர்சிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. இருப்பினும்… ஹைக்கூவைப் பற்றிய புரிதல்கள் பலரிடையே வேறுபட்டே திகழ்கிறது. இதில் ஹைக்கூவை எழுதும் கவிஞர்களும் விதிவிலக்கல்ல. ஹைக்கூ எழுதப்படும் விதத்thai வைத்து அதனை பொதுவில்… மூன்று வகையாக பிரித்துவிடலாம். நேரடிக் காட்சிப் ( View ) பதிவினை மட்டும் காட்டி நகரும் ஹைக்கூ ஒரு முறை. Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 32

தொடர் – 32 ஹைக்கூவின் வகைமையான சென்ரியு வகை கவிதை குறித்து சென்ற தொடரில் பார்த்தோம். ஹைக்கூ எழுதும் பலருக்கும் அவ்வப்போது திடீரென ஒரு சந்தேகம் முளைப்பது வாடிக்கை. நாம் எழுதியிருப்பது ஹைக்கூவா… அல்லது சென்ரியுவா… என்று. நகைச்சுவை, கிண்டல், கேலி, எள்ளல், பரிகசிப்பு, சீண்டல் என எழுதப்படும் வகை பெரும்பாலும் சென்ரியுவாகவே அமையும். அது மட்டுமல்லாது… சென்ரியுவிற்கும், ஹைக்கூவிற்கும் பொதுவான ஒரு வேறுபாடும் உண்டு. உங்களது கவிதை இரண்டு Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 31

தொடர் – 31 ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூவைப் போலவே… பிரசித்தமான ஏறக்குறைய ஹைக்கூவைப் போலவே காட்சி தரும் ஒரு வடிவம் சென்ரியு. ஹைக்கூவில் கவிநயமும்..கருத்தாற்றலும் மிகுதி.. ஆனால் சென்ரியுவில் இயல்பான நகைச்சுவை, அங்கதம், கேலி, கிண்டல், எள்ளல், சாடல், போன்ற உணர்வுகளே மேலோங்கி நிற்கும். ஜப்பானில் “சென்ரியு” எனும் புனைப் பெயரைக் கொண்ட “கராய் ஹச்சிமோன்” ( 1716-1790 ) என்பவரால் தொகுத்து வழங்கப்பட்ட கவிதை வடிவம் இது Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 30

தொடர் 30 இதுநாள் வரையில் ஒரு ஹைக்கூவை சிறப்பாக எழுதுவதற்கான சில வழிமுறைகளைக் கண்டோம்.. இப்போது ஒரு காட்சி… நீங்கள் வெளியூரில் வேலைசெய்கிறீர்கள். விடுமுறையை ஒட்டி தொலைதூரத்தில் உள்ள உங்களது சொந்த ஊருக்கு செல்லப் பேருந்து நிலையம் வருகிறீர்கள். இரவு நேரம். வரக்கூடியப் பேருந்து அனைத்தும் கூட்டமாக பயணிகளைத் திணித்தபடியே வருகிறது.. சில மணி நேரத்திற்குப்பின், ஒரு வழியாக உங்களுக்கு அமர்ந்து செல்ல வண்டியில் இடம் கிடைத்து விட்டது. இந்நிகழ்ச்சியை Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 28

தொடர் 28 ஹைக்கூவில் உத்திகள் என்பது ஹைக்கூவை வடிவமைக்க பயன்படுகிறது. பொதுவில் ஹைக்கூவில் ஈற்றடியை திருப்பம் வருமாறு அமைப்பதும், முரணாக அமைப்பதுமே உத்தி முறையாகும். எதுகையில் அமைப்பது மோனையில் அமைப்பது என அதுவும் உத்திமுறைகளாக சொல்லப் படுகிறது. ஆனால் அவை ஹைக்கூ வகைமையில் தான் கொள்ளப்படுமேயன்றி எதுகையோ, மோனையோ உத்தி முறை ஆகாது. சொல்லப்படும் வகையில் அது ஒரு படிமத்தைச் சார்ந்தோ… குறியீடு பயின்று வருவதாகக் கொண்டோ ஹைக்கூ படைக்கப் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 27

தொடர் 27 ஹைக்கூ ஒரு அழகிய ஓவியம். அதை நீங்கள் ரசிக்கத் துவங்கும் போது பல பரிமாணங்களில் அது உங்களை பரவசப்படுத்தும். ஹைக்கூ கவிதைகளை நாம் கவியரங்குகளிலோ… வாசகர் இடத்திலோ வாசிக்கும் போது சில நடைமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். ஹைக்கூ மூன்றடியால் எழுதப்படுவதும், ஈற்றடி கவிதையின் போக்கினை மாற்றும் வல்லமையுடன் இருப்பதையும், திருப்பம் தருமாறு எழுதப்படுவதையும் அனைவரும் அறிவோம். எனவே நாம் அதனை வாசிக்கும் போது இப்படியாகத்தான் வாசிக்கப் பட Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 26

தொடர் 26 ஹைக்கூ மூன்றடியில் எழுதப்படும் ஒரு பெரிய அற்புதம். இந்த மூன்றடியில் எந்த அடி சிறப்பு வாய்ந்தது எனக் கேட்டால்… பலரும் கூறும் ஒரே பதில் கவிதைக்கு திருப்பத்தையும், முரணையும் தந்து கவிதைக்கு அழகைத் தரும் ஈற்றடியே சிறப்பு வாய்ந்தது என்பார்கள். உண்மையும் அதுவே. இருப்பினும்… அதற்கு இணையான ஆற்றலையும்..சொற் இணைப்பையும் உருவாக்கித் தரும் ஒரு அடி… ஹைக்கூவின் இரண்டாவது அடி. ஏனெனில்… இந்த இரண்டாவது அடியே… முதலடியையும், Read more