தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 03-2020

இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் மார்ச் – 2020 இதழ் தரவிறக்கமாகும். வா வா கண்ணா… வான்முகில் நிறத்தோய்; கேட்க          வரம்பல ஈவோய்; தொங்குந்தார்குழல் காற்ற சைக்கத்          தாவணி இழுப்போய் ஊதுஞ்சீர்குழல் ஓசை தன்னில்          சிந்தையில் கலப்போய் ராதைகூர்விழி சிக்கும் நேரம்          குறும்புகள் செய்வோய் வாவா.. நஞ்சினால் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2020

இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் பிப்ரவரி – 2020 இதழ் தரவிறக்கமாகும். “நீ இப்படி செய்தாயாமே…?” உங்கள் மீது பழிச் சொல்லை சுமந்து வரும், நீங்கள் செய்யாத ஒன்றை, செய்ததாக குற்றம் சொல்லும் இந்த கேள்வியை எதிர் கொள்ளாதவர்களே இல்லை எனலாம். உங்களிடம் கேட்கப் படும் அந்தக் கேள்வி உங்களுக்குள் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி விடும். அதிலும், உங்கள் மீதான அந்த பழிச் சொல்லை உங்களிடம் கொண்டு வருபவர் உங்களுக்கு Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 01-2020

இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் ஜனவரி – 2020 இதழ் தரவிறக்கமாகும். முகநூல்குழும்மொன்றில் பெரும் பணியாற்றி வருகிறீகள். அதைப்பற்றி கொஞ்சம்… தற்போது கவியுலகப்பூஞ்சோலை முகநூல் குழுமத்தில் செயலாளராக மூன்றாண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறேன். இதன் நிறுவனர் தம்பி ஒரத்தநாடு நெப்போலியன் அவர்களுக்கு மனம்நிறை நன்றிகள் பல. என்னுடன் உடன்பிறவா தம்பிகளாய் உடனிருந்து தமிழ்ப்பணி பூஞ்சோலையில் ஆற்றிய ஆனந்த் உமேஷ், பாலா தியாகராஜன், வெற்றி வேல்பாண்டித்துரை, விஜய் என்று இவர்களை எந்நாளும் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 12-2019

இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் டிசம்பர் இதழ் தரவிறக்கமாகும். உங்களுக்கு கதை எழுத பிடிக்குமா? உங்கள் பதில் இல்லை என்பதாக இருந்தாலும் நீங்கள் ஒரு பிறவிக் கதாசிரியர் என்பது உங்களுக்கு தெரியுமா?! என்ன வியக்கிறீர்கள். சற்றே உங்கள் இளவயதிற்கு பின்னோக்கி போய் பாருங்கள். என்றாவது ஒரு நாள் உங்கள் நண்பர்கள் எல்லோரும் சுற்றுலா சென்ற போது உங்களால் மட்டும் போக முடியாத சூழல் ஏற்பட்டதா? அப்போது உங்கள் மனம் என்ன செய்தது Read more

நகரத்து காக்காவும் கிராமத்துக் காக்காவும்

நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது. ”எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரிய கட்டடமா இருக்கும். இங்கே என்னன்னா ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிக ஓடுது. ஆனா, இங்கே கட்டைவண்டியும், சைக்கிளும்தான்…” என்று பட்டணத்து பெருமை பேசியது நகரத்து காக்கா. ‘பட்டணத்துல அப்படி என்னதான் இருக்குன்னு நாமளும் போய் பார்த்துட்டு வருவோம்’ என்று நகரத்து காக்காவுடன் புறப்பட்டு போனது கிராமத்து காக்கா. Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2019

மறக்க முடியாத சம்பவங்கள்? பணி ரீதியாக மறக்கமுடியாத சம்பவம் என்று சொன்னால், ஆப்பிரிக்காவில் ஒருசமயம் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கடத்தப்படும் குழந்தைகளின் மீட்பு மற்றும் மறுவாழ்வு போன்ற பணிகளை உள்ளடக்கிய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். வழக்கமாக அண்டை நாடுகளிலிருந்து வரும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையத்தில் எப்பொழுதுமே குழந்தை தொழிலாளர்கள், வீட்டிலிருந்து ஓடி வரும் குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள் இவர்களை மீட்கும் பணி இருக்கும். கடத்தப்படும் குழந்தைகள் என்றால் திரைப்படங்களில் வருவது Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2019

ஒழுக்கம் இயந்திர மாய்மாறி விட்ட உலகினில்     இன்றைய குமுகாய மிழந்த தெத்தனைஇயற்கையின் வளங்களையும் ஒழுக்க மென்றிடு(ம்)      இன்னுயிர் வரத்தினையும் நேர்மைத் திறனையும்!உயரிய குமுகாய வளர்ச்சி யென்பது     உன்னத ஒழுக்கம்தா னென்று ணர்த்துவோம்!செயலிலு மொழுக்கத்தைக் காட்டும் மானிடர்      செம்மையாய் வாழ்ந்திடுவர் வழிகாட் டி டுவரே! எத்துறை கண்டிடினும் கையூட் டரசியல்      எங்கணும் நாள்தோறும் வன்முறைப் பாலியல்இத்தரை மாந்தரெலா மின்று துன்புறும்  Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2019

பிறமொழி வார்த்தையை கலக்காமல் தூயத்தமிழில் மட்டும் பாடல் எழுதும் கொள்கையை வைத்துள்ளீர்களா? உலக மொழிகளின் ‘ஏவாள்’ தமிழ்தான்.நாம் பேசும் தமிழில் பன்னாட்டு மொழிகள் கலந்து இருக்கின்றன. அதுபோல் நம் மொழியும் பல மொழிகளில் மலர்ந்து மணக் கிறது. நான் குமளி பழம் சாப்பிட்டேன் என்றால் இன்று பலருக்கும் புரியாது. ஆப்பிள் பழம் என்றால் அனைவரும் இலகுவில் புரிந்து கொள்வர். சீமெந்து என்றால் பைஞ்சுதை என்று இங்கு எத்தனை பேருக்கு தெரியும்? Read more

மாற்றி யோசி

அன்று மதியம் ரூமுடைய கதவை திறந்த போது சாவி கைதவறி கீழே விழுந்து விட்டது. சாவியை எடுக்க குனிந்த போதுதான் அது கண்ணில் தெரிந்தது. எறும்புகளின் ஒரு பெரும் படையே கதவின் ஓரத்தில் இருந்த இடுக்கு வழியாக போய்க்கொண்டு இருந்தது. அவசர அவசரமாக கதவை திறந்து பார்த்த போது அதன் ஓடுபாதை மேற்புறமுள்ள சுவற்றை நோக்கி இருந்தது. நான் மெதுவாக சுவரோரம் கிடந்த பிளாஸ்டிக் பையை எடுத்து விட்டு பார்த்தேன். Read more