வா வா கண்ணா…

வான்முகில் நிறத்தோய்; கேட்க
          வரம்பல ஈவோய்; தொங்குந்
தார்குழல் காற்ற சைக்கத்
          தாவணி இழுப்போய் ஊதுஞ்
சீர்குழல் ஓசை தன்னில்
          சிந்தையில் கலப்போய் ராதை
கூர்விழி சிக்கும் நேரம்
          குறும்புகள் செய்வோய் வாவா..

நஞ்சினால் மாறும் வண்ணம்
          நால்திசை ஆழி யாகிக்
கஞ்சமுங் காத லிக்கும்
          கனிவுடை எழிலோ சுற்றி
கொஞ்சிடுங் கோபி யர்கள்
          கோர்த்துனை ஓடி ஆடித்
துஞ்சிடும் வியப்பைத் தாருந்
          தூயதோர் அருளோ சொல்லாய்..

எண்ணமே உன்னை எண்ணி
          இவனுமோர் ராதை ஆனேன்
கன்னமே கிள்ளிப் பார்க்கக்
          கனிவுடன் வாவா கண்ணா
கண்துளை மூங்கில் ஆகிக்
          காதலே உன்மேல் கொண்டேன்
என்துயர் தீர்க்கும் வண்ணம்
          இதயமும் தாங்க வாவா..

பெண்துகில் உரிந்த நேரம்
          பேதமை பாரா தங்கே
முன்னருள் செய்தே காத்த
          மூச்செனும் பார்த்தா உன்னை
என்துகில் கொண்டே நாளும்
          இறக்கமே வாழ்வென் றானேன்
கண்துயில் போதும் என்னை
          காத்திட வாவா கண்ணா..

மண்ணுள வாயில் இந்த
          மாபெரும் அண்டங் கொண்டும்
என்னுளம் அதற்குள் உண்டு
          இதையுமே கொஞ்சம் பாராய்
உன்னுளம் இனிக்கும் வண்ணம்
          ஓதுவேன் பாடல் நூறு
பொன்னுளத் தானே வாவா
          பொழுதெலாம் காத்தேன் வாவா..

ஏடி வரதராசன்

பிப்வரி 2020 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

தமிழ்நெஞ்சம் - மார்ச் -2020

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், மற்றும்இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!


5 Comments

Vijirkrishnan · மார்ச் 6, 2020 at 5 h 17 min

இதழின் ஒவ்வொரு பக்கமும் அசத்தல்

ஹ.ரெங்கபார்வதி · மார்ச் 6, 2020 at 7 h 38 min

அருமையான மின்னிதழ் படைப்பு,வாழ்த்துகள்

Swarnam Meenakshi nathan · மார்ச் 6, 2020 at 9 h 59 min

அருமை

கோகிலா · மார்ச் 6, 2020 at 11 h 24 min

அழகான வடிவமைப்போடு ! பலரதும் திறன்களை எம்முன் கொண்டுவந்து அளிக்கின்றது இவ்விதழ். அழகு, சிறப்பு !

பாரதி பத்மாவதி · மே 11, 2020 at 6 h 41 min

உலகளாவிய ஹைக்கூ கவிஞர்களின் கைவண்ணத்தில் ஹைக்கூ 2020 மிகச் சிறப்பான புத்தகமாக வெளிவந்திருக்கிறது. வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியதில் மிகப் பெருமை அடைகிறேன் உலக கவிஞர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »