பிறமொழி வார்த்தையை கலக்காமல்
தூயத்தமிழில் மட்டும் பாடல் எழுதும் கொள்கையை வைத்துள்ளீர்களா?

உலக மொழிகளின் ‘ஏவாள்’ தமிழ்தான்.நாம் பேசும் தமிழில் பன்னாட்டு மொழிகள் கலந்து இருக்கின்றன. அதுபோல் நம் மொழியும் பல மொழிகளில் மலர்ந்து மணக் கிறது. நான் குமளி பழம் சாப்பிட்டேன் என்றால் இன்று பலருக்கும் புரியாது. ஆப்பிள் பழம் என்றால் அனைவரும் இலகுவில் புரிந்து கொள்வர். சீமெந்து என்றால் பைஞ்சுதை என்று இங்கு எத்தனை பேருக்கு தெரியும்? மேசை என்ற போர்த்துக்கேய சொல்லைத்தான் நாம் தத்தெடுத்து தமிழாக நினைத்து பயன்படுத்துகின்றோம். தமிழ் நாட்டு பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங் களில் ஆங்கில வார்த்தைகள் தமிழுக்கு நிகராக பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். இங்கு பலருக்கு ஆங்கிலம் தெரிந்தளவுக்கு தமிழ் தெரியாது என்பது உறைக்கும் உண்மை. இத்தகைய சூழலில் தூய தமிழில் மட்டும்தான் பாடல் எழுதுவேன் என்று கூறுவது ஏமாற்று வேலை. உடை தைக்கும் தையல்காரரிடம் யாராவது தனக்கு பிடிக்காத நிறத்தில துணியை கொடுத்தாலும் தைத்துக் கொடுத்தே ஆகவேண்டும். எனக்கு இந்த நிறம் பிடிக்கவில்லை என்னால் இதனை தைக்க முடியாது என்று சொன்னால் வந்தவர் வேறு தையல்காரரை நாடுவார். அந்த தையல்காரர் நிலைதான் பாடலாசிரியனுக்கும். இங்கு எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை.

கதைச் சூழலுக்கு என்ன தேவையோ இயக்குனர் இசையமைப்பாளர் எதை விரும்புகிறாரோ அதைதான் நாங்கள் செய்ய வேண்டும். தமிழ் சினிமாவில் நான் இப்படிதான் பாடல் எழுதுவேன் என்று முரண்டு பிடிக்க முடியாது.

எப்படி நான் எழுத வேண்டும் என்று கேட்க வேண்டும். நான் ஆங்கில வார்த்தை கலந்து எழுத மாட்டேன் தூய தமிழில்தான் எழுதுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அந்த வாய்ப்புக்காக பலர் வரிசையில் காத்திருக்கின்றார்கள். தூய தமிழில் பாடல் வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம் நமது அன்றாட வாழ்வில் தமிழுக்கு கொடுக்கும் இடந்தான் என்ன? ஆங்கிலத்தில் பேசுவதை கௌரவமாய் நினைக்கும் நாம் குறைந்த பட்சம் தமிழர்களுடனாவது தமிழில் பேசுகின்றோமா?

‘குட்நைட்’டில் தூங்கச் செல்லும் எங்கள் இரவு ‘குட்மோர்னிங்கில்’தானே மீண்டும் எழும்புகிறது..

இதழ் முழுவதும் படிக்க இங்கேச் சொடுக்கவும்

தமிழ்நெஞ்சம் – 2019

பக்கத்திலிருக்கும் செப்டம்பர்  2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், மற்றும்இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

 


3 Comments

அனுராஜ்.. · செப்டம்பர் 1, 2019 at 13 h 51 min

அருமையான வடிவில்..அழகான உள்ளடக்கங்களுடன்..மிளிர்கிறது தமிழ்நெஞ்சம்.

நிர்மலா சிவராசசிங்கம் · செப்டம்பர் 1, 2019 at 14 h 23 min

சிறப்பான ஆக்கங்களுடன் அருமையான இதழ்! மிக்க நன்றி என் ஆக்கம் இணைத்தமைக்கு

"ஈழவேங்கை" தம்பியின் தம்பி · செப்டம்பர் 6, 2019 at 2 h 33 min

தமிழ் கூறும் நல்லுலகில், ஆகச்சிறந்த முயற்சி, வாழ்த்துகள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்

நேர்கண்டவர் :
தமிழ்நெஞ்சம் அமின்

மைதிலி சம்பத்: “வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?”

ஆசிரியர் திரு அமின்: “நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சார்.

 » Read more about: தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்  »

நேர்காணல்

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »