அன்று மதியம் ரூமுடைய கதவை திறந்த போது சாவி கைதவறி கீழே விழுந்து விட்டது. சாவியை எடுக்க குனிந்த போதுதான் அது கண்ணில் தெரிந்தது. எறும்புகளின் ஒரு பெரும் படையே கதவின் ஓரத்தில் இருந்த இடுக்கு வழியாக போய்க்கொண்டு இருந்தது.

அவசர அவசரமாக கதவை திறந்து பார்த்த போது அதன் ஓடுபாதை மேற்புறமுள்ள சுவற்றை நோக்கி இருந்தது. நான் மெதுவாக சுவரோரம் கிடந்த பிளாஸ்டிக் பையை எடுத்து விட்டு பார்த்தேன். எறும்புகளின் பாதை சுவரிலிருந்து வடபக்கமாக திரும்பி கட்டிலுக்கு கீழாய் போனது.

‘’எறும்புப் பொடியை எடுத்து தூவி விட்டால்தான் சரியாக வரும்..’’ என்று எண்ணியவாறே எறும்புகளின் ஊர்வலத்தை பின் தொடர்ந்தேன். கண்கள் எறும்பு பொடி இருக்கும் இடத்தை தேடின.

அதே நேரத்தில் ‘’எறும்பு பொடியை போட்டே தீரணுமா.. கொஞ்சம் மாற்றி யோசிக்கலாமே. பாரு எவ்ளோ எறும்புகள். அதுவும் கடிக்காத சிற்றெறும்புகள். எவ்வளவு அழகாக போகின்றன. இத்தனையையும் கொல்லணுமா.’’ என்று மனம் ஆலோசனை சொன்னது.

‘’முதலில் அது எந்த அளவு சாத்தியம் என்று பார்க்கலாம். ‘’

எறும்புகள் எதன் மீதும் பட்டுவிடாமல் கால்களை கவனமாக எடுத்து வைத்து எறும்பூர்வலத்தை தொடர்ந்தேன். இப்போது அதன் திசை கிழக்கு நோக்கி திரும்பி இருந்தது.

தண்ணீர் குடம் இருந்த இடத்திற்கு பக்கத்தில் என்னவோ கிடந்தது. சகல எறும்புகளும் அங்கே சங்கமித்து இருந்தன. கிட்டே குனிந்து பார்த்தேன். ஏதோ ஒரு துண்டு உணவுப் பொருள் கீழே கிடந்தது. அதை மெதுவாக தொட்டேன். உடனேயே எல்லா எறும்புகளும் பரபரப்பாக விலகி ஓடவே அந்த உணவுத் துண்டை எடுத்து கதவுக்கு வெளியில் வீசினேன்.

பிறகு கதவை திறந்து வைத்துக் கொண்டு ஒரு ஐந்து நிமிடம் பாப்போம்.. என மாற்றி யோசித்தேன். காத்திருந்தேன். ரெண்டு நிமிடம் கூட ஆகவில்லை.. எல்லா எறும்புகளும் ‘ ரிவேர்ஸ் – ல போன அழகப் பார்க்கணுமே. அடா அடா அடா. ரசிக்கத் தெரிந்தவனுக்கு எல்லாமே அழகுதான்.

‘’எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா.’’ என்று பாடணும் போல் இருந்தது.

ரெண்டு நிமிசத்துல ஒரு எறும்பு கூட இல்லை. ரூமு சுத்தம்.

அப்போதுதான் புரிந்தது.

எதையும் ஒருமுறை சாதக பாதகங்களை நிதானமாக சிந்தித்து செய்தோம் என்றால்.. நம்மாலும் அற்புதங்கள் நிகழ்த்து விடத்தான் செய்யும் என்கிற மறுக்க முடியாத உண்மை.

– இப்னு செய்யிது.
கடையநல்லூர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »