ஹைக்கூ

மலர்வனம் 4

ஹைக்கூ

ஷர்ஜிலா பர்வீன்

1.
மழைத்துளிகளை
சுமந்து கொண்டிருக்கும்
கார்காலச் சிலந்தி வலை.

2.
இலையுதிர்காலக் கிளை
தண்டுகளெல்லாம் மின்னுகிறது
வைகறைப் பனி.

 » Read more about: மலர்வனம் 4  »

By Admin, ago
ஹைக்கூ

மலர்வனம் 3

ஹைக்கூ

கவிஞர். மீன் கொடி பாண்டிய ராஜ்

1.
நதிக்கரையில்
பாடல் பாடுகிறேன்
இசைக்கிறது தண்ணீர்.

2.
கடற்கரை
நடந்து செல்லும் போது
அலைக்கு ஒரு சொல்.

 » Read more about: மலர்வனம் 3  »

By Admin, ago
தன்முனை

மலர்வனம் 2

தன்முனை

இராம வேல்முருகன், வலங்கைமான்

1

புத்தகம் படித்து
நிமிர்ந்து பார்த்தேன்
புதிய உலகம்
கண்ணுக்குத் தெரிந்தது

2

தெரிந்த நண்பர்களைத்
தேடிப் பார்த்தேன்
வறியவன் ஆனதை
உணர்த்திச் சென்றனர்

3

சென்ற காலம்
திரும்பி வராது
இருக்கும் காலத்தை
இறுக்கிப் பிடிப்போம்

4

பிடித்த கவிதைகள்
பிடிக்காமல் போயின
பொறாமையா ஆதங்கமா
காரணம் தெரியவில்லை

5

இல்லாத காரணத்தைத்
தேடிப் பார்க்கிறேன்
தேர்வு செய்யப்படாத
கவிதைக்குச் சொல்ல…

 » Read more about: மலர்வனம் 2  »

By Admin, ago
ஹைக்கூ

மலர்வனம் 1

ஹைக்கூ

ரசிகுணா

1

ஆடு மேய்த்தவன்
ஓய்வெடுக்கும் போது
துரத்தியது வெயில்.

2

மழையும் வெயிலும்
வேடிக்கை பார்க்கிறேன்
அதற்கிடையே வானவில்..

 » Read more about: மலர்வனம் 1  »

By Admin, ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2020


இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் ஏப்ரல் – 2020 இதழ் தரவிறக்கமாகும்..


தமிழ்நெஞ்சம் ஏப்ரல் 2020

தனித்தமிழ் ஆற்றல் உடைய நீங்கள் அவ்வப்போது பிறமொழிச் சொற்களைக்கலப்பது தொண்டை யில் சிக்கிய துரும்பு போல இருக்கிறதே.

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2020  »

By Admin, ago
சிறுகதை

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது

 சிங்களச் சிறுகதை – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

தமிழில் – எம். ரிஷான் ஷெரீப்

“மஞ்சு சொல்றான் அவனுக்கு என்னோட சுருண்ட கூந்தல் பிடிக்கலையாம்.

 » Read more about: மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது  »

By Admin, ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 03-2020


இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் மார்ச் – 2020 இதழ் தரவிறக்கமாகும்.

வா வா கண்ணா…

வான்முகில் நிறத்தோய்; கேட்க
          வரம்பல ஈவோய்; தொங்குந்
தார்குழல் காற்ற சைக்கத்
          தாவணி இழுப்போய் ஊதுஞ்
சீர்குழல் ஓசை தன்னில்
          சிந்தையில் கலப்போய் ராதை
கூர்விழி சிக்கும் நேரம்
          குறும்புகள் செய்வோய் வாவா..

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 03-2020  »

By Admin, ago