ஹைக்கூ

கவிஞர். மீன் கொடி பாண்டிய ராஜ்

1.
நதிக்கரையில்
பாடல் பாடுகிறேன்
இசைக்கிறது தண்ணீர்.

 2.
கடற்கரை
நடந்து செல்லும் போது
அலைக்கு ஒரு சொல்.

 3.
வேகமாக வீசும் காற்றில்
நகர்ந்து செல்லும் படகு
உடன் நிழல்.

 4.
அப்பா எப்போது வருவார்
கேள்வி கேட்கிறது குழந்தை
புகைப்படத்தில் பொட்டு வைத்த போது.

 5.
லாந்தர் விளக்கில்
படிக்கும் சிறுவனுக்கு
பார்வை இல்லை.

6.
சுவர் ஓவியம்
வரைந்த சிறுவனுக்கு
அடியும் உதையும்.

7.
நீண்ட சாலையில்
மெல்ல நகர்ந்து செல்லும்
நத்தை

 8.
அலைபேசியில் பாடல்
இசைக்கு ஏற்ப தலையசைக்கிறது
மரத்தில் இருந்த குருவி

 9.
பெரிய கட்டிடத்தின் மீது
ஏறிவந்த பின்பு
சுடுகிறது வெயில்

 10.
மேகங்களை விளக்கி
வெளியே வருகிறது
வெளிச்சம்

11.
பூங்காவில்
ஓடி பிடித்து விளையாடும்
சிட்டுகள்

 12.
புதிய தொழிற்சாலை
மாற்றம் ஏதும் இல்லை
கருத்த புகையில்

13.
முதியோர் இல்லம்
முகவரியை குறித்துக்கொண்டாள்
அந்த சிறுமி

 14.
குடிகாரனின் மனைவி
அழுது புளம்புகிறாள்
மகனிடம்

 15.
வேசி என்கிறது உலகம்
பேசி சிறிக்கிறாள்
தனிமையில் கடவுளுடன்

 16.
நிலாவை
வட்டமிட்டிருக்கிறது
வானவில்

 17.
வறண்ட ஆற்றை
வட்டமிட்டு கொண்டிருக்கிறது
ஒரு பறவை

 18.
அவள் அழுகிறாள்
காரணம் புரியாமல்
தாய் அழுவதை பார்த்து

19.
மூன்று நாளாக
துணையாக இருக்கிறது
நிலாவுக்கு நட்சத்திரம்

20.
இறகு பந்து விளையாட்டில்
சிறுமி அடித்த பந்து
நிலாவை தாக்குகிறது