தொடர் – 43

ஹைக்கூ வகைமை

ஹைக்கூவில் பல்வேறு வகையான புது முயற்சிகளை அவ்வப்போது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் கவிஞர்கள்.

ஏற்கனவே ஹைக்கூ.. சென்ரியுவோடு

ஹைபுன்.. லிமரைக்கூ..லிமர்புன் போன்றவைகளைப் பற்றி கண்டோம்.

இப்போது பழமொன்ரியு மற்றும் மோனைக்கூ பற்றிக் காண்போம்.

பழமொன்ரியு

நம்முடைய தமிழ் பழமொழிகளோடு இணைத்து இணக்கமாகவோ அல்லது முரணாகவோ நகைச்சுவை..

கிண்டல்.. கேலி கலந்து படைக்கப் படுவதை பழமொன்ரியு என்கிறோம்.

பழமொன்ரியு அவ்வளவாக பிரபலமாக வில்லையெனினும் அவ்வப்போது ஒரு சிலரால் எழுதப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

இதை கவனியுங்கள்..

ஏட்டுச்சுரக்காய்
ம்ஹூம் பசிக்கு ஆகவில்லை
100 வகை சமையல் குறிப்புகள்.

  • ராஜூ ஆரோக்கியசாமி

அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
சின்னத்திரை தொடர்கள்
தினம்தினம் கொல்லும்..!

  • அனுராஜ்

பார்த்தவுடன் புரிந்திருக்கும்..பழமொழி ஒன்றோடு இன்றைய நிகழ்வினைக் கலந்து எழுதப்படும் வடிவமே பழமொழின்ரியு.

அடுத்த படியாக மோனைக்கூ…

தமிழ் இலக்கியக் கவிதை வடிவில்..

எதுகைத் தொடை, மோனைத் தொடையின்றி மரபுக் கவிதைகள் எழுதப்பட மாட்டாது..ஏனெனில் தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும் என்பார்கள்…கவிதைகளை கவித்துவ அழகில் மிளிரச் செய்வது எதுகையும்..மோனையும்.

அவற்றினை ஹைக்கூவிலும் அமைத்து எழுதலாம்..ஆனால் கட்டாயமில்லை.

முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனைத் தொடர்.. வார்த்தையில்

இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகைத் தொடர் எனப்படும்.

ஹைக்கூவிற்கு மோனையில் அமைப்பது சற்று அழகாய் அமையும்..

இவ்வகையினை நண்பர் கவிஞர்.இளையபாரதி கந்தகப் பூக்கள் முதலில் அறிமுகம் செய்து வைத்தார்.

அதிகாலைப் பயணம்
அதிகப்படியாக வருகிறார்கள்
அரசுப் பணியாளர்கள்.

  • பெ.ராஜேஸ்வரன்

அறிவுக் கரையேற்றும் பள்ளிகள்
ஆள்அரவமற்றுக் கிடக்கின்றது
அடக்குமுறையில் காஷ்மீர்.

  • இளையபாரதி கந்தகப்பூக்கள்

பற்றியெரிந்த கானகம்
பதைபதைக்க வைக்கிறது
பல்லுயிர் நேசிப்பாளர்களை.

  • அனுராஜ்.

மேற்கண்ட கவிதைகளில் உணர்ந்திருக்கலாம்..முதலெழுத்துகள் ஒன்றி வரத் தொகுப்பட்ட கவிதை என்பதை..இதையே மோனைக்கூ என்கிறோம்.

எதுகைக்கூ மற்றும் மோனைக்கூ இணைந்த ஒரு கவிதையை காண்போமா..

பறவை பறக்காத இடமும்
பறந்து அலைகிறது
பறவையின் இறகு..!

  • அனுராஜ்.

இக்கவிதை மோனைக்கூ மற்றும் எதுகைக்கூ இணைந்த வடிவம்..

ஹைக்கூ என்பது எங்கே..? என்ன..? எப்போது ..? என்ற மூன்று கேள்விகளை உள்ளடக்கிய ஒரு கவிதை வடிவம்..இம்மூன்று கேள்விகளுக்கான விடையை கவிதை தர வேண்டும்..கூடவே எழுதிய கவிஞனுக்கும்..படிக்கின்ற வாசகனுக்கும் ஒரு வித உணர்வையும் ஹைக்கூ தூண்டிச் செல்லும்..கவிஞனின் சிந்தனையைத் தான் வாசகன் உணர வேண்டுமென்பதில்லை..வாசகனிடத்தில் பலவித எண்ண அலைகளை நகர்த்திச் செல்வதே ஹைக்கூவின் பலம்.அதை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் உணரவே செய்வான்.

இன்னும் வரும்…

 முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 45

தொடர் – 45

ஹைக்கூ எளிய கவிதை வடிவம்… ஆனால் உள்ளார்ந்த பல விசயங்களைக் கொண்டிருக்கும் உன்னத கவிதை வடிவமாகும்.

இக் கவிதை வடிவில் கருப்பொருளோடு இரண்டறக் கலந்திருப்பது பல விசயங்கள்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 45  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 44

தொடர் – 44

ஹைக்கூவில் பாஷோவின் ஆளுமை

பாஷோ.. ஹைக்கூவின் பிதாமகர்.. ஜப்பானியக் கவிஞர் கி.பி.1644_ ல் பிறந்து 1694  ல் மறைந்த ஒரு மாபெரும் ஹைக்கூ ஆசான்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 44  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 42

தொடர் – 42

ரென்கா எனப்படும் அந்தாதி ஹைக்கூ கவிதை முறை.

ஹைக்கூ எழுத்தாளனையும்..வாசகனையும் இணைக்கும் ஓர் அற்புதக் கவிதை வடிவம்..எழுத்தாளன் எழுதிய கோணத்தையும்..பொருளையும் தான் வாசகனும் அறிந்து உணர வேண்டுமென்பதில்லை..வாசகனுக்கு ஹைக்கூ பலவித உணர்வலைகளை உண்டு பண்ணி நகரும் ஆற்றல் கொண்டது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 42  »