பாடல் – 60

பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய்
விலங்கின் பிறப்தபின் வெருவும் – புலந்தெரியா
மக்கட் பிறப்பின் நிரப்பிடும்பை இம்மூன்றும்
துக்கப் பிறப்பாய் விடும்.

(இ-ள்.) பேஎய் பிறப்பில் – பேயினது பிறப்புடையவர்களில், பெரு பசியும் – மிக்க பசியும்; பாஅய் விலங்கின் பிறப்பின் – பாயும் இயல்புடைய மிருகப்பிறப்படைந்த உயிர்களில், வெருவும் – அச்சமும்; புலம் தெரியா – அறிவாகியபொருளை உணராத, மக்கள்பிறப்பின் – மனிதப் பிறப்படைந்த உயிர்களில், நிரப்பு – வறுமையும், இடும்பை – துன்பந் தருவனவாம்; இ மூன்றும் – இம் மூன்று பிறப் புயிர்களும், துக்கப் பிறப்பு ஆய்விடும் – துன்பமாகிய பிறப்புள்ள உயிர்களாய்விடும்; (எ-று.)

(க-ரை.) பேய்ப்பிறப்பில் பசி வருத்தமும், விலங்குப் பிறப்பில் கொலைப்பயமும், மக்கட்பிறப்பில் வறுமைத்துன்பமும் மிகுந்திருக்கின்றமையால் எப்பிறப்பும் நலமுடையதன்று. பிறப்பு நீங்க முயல வேண்டும் என்பது.

பேஎய், பாஅய் : செய்யுளிசைநிறை அளபெடைகள். வெருவு : தொழிற் பெயர். நிரப்பு – மங்கல வழக்கு : எதிர்மறை இலக்கணையால் நிரம்பாமையை யுணர்த்தி அதன் காரணமாகிய மறுமைக்கு ஆகுபெயராயிற்று.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »