கம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.

தமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை. அவ்வளவு திறன்மிகு படைப்பு இராமாயண காவியம். இலக்கியம் என்று சொன்னால் இலங்கு பொருள் எடுத்தியம்பும் நயம் என்றே சொல்லலாம்.

மூக்கறுபட்ட சூர்ப்பனகை இலங்கைமாநகர் அடைந்து தனது சோகக் கதையை அண்ணன் இராவணனிடம் கூறும் போது சீதையின் பேரெழிலை பலவாறு எடுத்துச் சொல்லி இராவணனுக்கு காமப் பசியைத் தூண்டுகிறாள். அளவிலா ஆசைத் தீ வளர்க்கிறாள் இராவணன் மனதில்.

இங்கே பாருங்கள் தனது மூன்று பழிகளைத் தீர்த்துக் கொள்கிறாள் சூர்ப்பனகை.

ஒன்று காதல் மணமுடித்த தனது கணவான் வித்யுஜ்ஜிஹ்வாவை ஏற்கனவே கொன்ற இராவணனைத் தரைமட்டம் ஆக்குவது இரண்டாவது மகன் சாம்பன் காட்டில் கடுந்தவம் இருக்கும் நேரத்தில் தர்பைப்புல் அறுக்கச் சென்ற இலக்குவன் சம்பனின் தலையையும் சேர்த்து அறுத்துவிட்டான். ஏற்கனவே கணவனை இழந்த துயரம் மேலும் மகனையும் இழந்தால் சூர்ப்பனகை. அடுத்து மூன்றாவதாக இராமன் மீது காதல் வயப்பட்டு அடைய முடியாததை சீதை எனும் பேரழகியின் இருத்தல் என்பதையும் தனது தீ எண்ணத்தால் ஒரு முப்பரிமாண பழிவாங்கலில் செயல்படுகிறாள் சூர்ப்பனகை.

சீதையின் எழில் தோற்றத்தை கம்பன் சூர்ப்பனகை வழி சொல்லும் போது…

“இந்திரன் சசியைப் பெற்றான்; இரு-மூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான்; தாமரைச் செங்கணானும்
செந் திருமகளைப் பெற்றான்; சீதையைப் பெற்றாய் நீயும்;
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே; ஐயா!”
(சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலம் 75)

“இந்திரன் சசி தேவியை பெற்றான், இரு மூன்று, ஆறு முகம் கொண்டவனின் தந்தையாகிய சிவன் உமாதேவியைப் பெற்றான்,
தாமரை போன்ற சிவந்த கண்களை பெற்ற திருமாலோ திருமகளைப் பெற்றான். நீ சீதையைப் பெற்றால்… அந்தரம் (அந்த தர வரிசையைப்) பார்க்கின் நன்மை அவர்களுக்கெல்லாம் இல்லை, உனக்குத்தான் ஐயா” என்று கூறுகிறாள்.

இங்கே சற்று காற்புள்ளியை மாற்றி இடுங்கள்……

அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு, இல்லை உனக்கே ஐயா
அந்த தரம் பார்த்தால் நன்மையெல்லாம் அவர்களுக்கே ஆனால் சீதையை நீ பெற்றால் தரம் இல்லை உனக்கே ஐயா என்றும் பொருள் கொள்ளலாம்.

அந்தரம் பார்க்கு இன்னல் மை
அவர்க்கில்லை, உனக்கே ஐயா!
(அந்தரம்- ஆகாயம், பார்- பூமி, இன்னல்- துயரம், மை- குற்றம்)
‘ராவணா! நீ! சீதையைப் பெற்றால் ஆகாயத்திலும் பூமியிலும், துயரமும் குற்றமும் உனக்கே உண்டாகும்’ என்பதே சூர்ப்பனகையின் உண்மையான வாக்கு.
வஞ்சமகள் சூர்ப்பனகையின் எண்ணம் இங்கே கடைசி இரண்டு வரிகளில் பிரதிபலிக்கிறார் கம்பர். இப்படிப் பல பாடல்களில் கம்பனின் கவித்திறன் மேலோங்கி நிற்கிறது கம்பராமாயணத்தில்.

 

கண்ணதாசனும் கவித்திரனில் சலித்தவனா… இல்லையில்லை இவனும் கம்பனின் வரிகளில் பாதித்து ஒரு தரவரிசையை தனது “ பாலக்காடு பக்கத்திலே “ என்ற பாடலில் தருகிறான்…..

 

பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தான்
யாரம்மா அது நானம்மா
யாரம்மா அது நானம்மா (படம் : வியட்நாம் வீடு)

இன்னும் ரசிப்போம் ருசிப்போம் கம்பன் கவிநயத்தை !

தொடர் 10
தொடர் 12


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

(இ-ள்.) பத்திமை சான்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98

பாடல் – 98

செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

(இ-ள்.) செந்தீ –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98  »