பாடல் – 16

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் – உண்ணுநீர்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய்தி னார்.

(இ-ள்.) மண்ணின்மேல் – மண்ணுலகத்தில், வான் – பெரிய, புகழ் – புகழை, நட்டானும் – நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் – பெண்களுள், மாசுஇல் – குற்றமற்ற, சீர் – சிறப்புடைய கற்பு உடையாள் – கற்புடையவளை, பெற்றானும் – (மனைவியாகப்) பெற்ற கணவனும், உண்ணு நீர் – உண்ணப்படுகின்ற நீர் குறைவு இன்றி – குறைவுபடாதபடி, கூவல் – கிணறுகளை, தொட்டானும் – தோண்டி வைத்தவனும், இ மூவர் – ஆகிய இம் மூவரும், சாவா – (எக்காலத்தும்) இறவாத, உடம்பு – (புகழ்)உடலை, எய்தினார் – பெற்றவராவார்; (எ-று.)

(க-ரை.) உலகத்தில் ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்ற பொய்யாமொழிக்கிணங்க, இரப்பவர்க்கு ஈந்து சிறந்த புகழை நாட்டியவனும், சிறந்த கற்புடைய மனைவியைப் பெற்றவனும் நீரறாத கிணறு முதலியவற்றைத் தோண்டி வைத்தவனும் இறந்தும் இறவாத புகழுடம்பைப் பெற்றவராவார்.

மண் : கருவியாகு பெயர். நட்டான், தொட்டான், பெற்றான் என்பவை நடு, தொடு, பெறு என்ற வினைப் பகுதியடியாகப் பிறந்த விளையாலணையும் பெயர்கள், பெண்: சாதியொருமை சீர் கற்பு – சீரும் கற்பும் எனக் கொள்ளுமிடத்து எண்ணும்மை தொக்கது. கற்புடையாட் பெற்றான் – உயர்திணைப் பெயராயினும், இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலால், ளகரம் டகரமாகத் திரிந்தது. கூவல் : கூவம் என்பதன் போலி, பூத உடம்பு அழிந்தும்,அதனாலாய புகழுடம்பு அழியாதிருத்தலால் சாவா வுடம்பு எனவும், அம் மூவரும் என்றும் உளர்போல விளங்குதலின் உடம்பு எய்தினார் எனவுங் கூறினார்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 20

பாடல் – 20

ஆசை பிறன்கட் படுதலும் பாசம்
பசிப்ப மடியைக் கொளலுங் – கதித்தொருவன்
கல்லானென் றெள்ளப் படுதலும்இம்மூன்றும்
எல்லார்க்கு மின்னா தன.

(இ-ள்.) பிறன்கண் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 19

பாடல் – 19

கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற்
பிறன்கடை நின்றொழுகு வானு – மறந்தெரியா
தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர்
நாடுங்காற் றூங்கு பவர்.

(இ-ள்.) கொல் யானைக்கு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 19  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18

பாடல் – 18

ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்
கிருதலையு மின்னாப் பிரிவு – முருவினை
யுள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றுங்
கள்வரி னஞ்சப் படும்.

(இ-ள்.) ஒருதலையான் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18  »