எண்ணெய்யிலா தலையெனினும்
ஈர்ப்பு இருக்குது; நல்ல
இளமை சிரிக்குது; கண்கள்
பார்க்கத் துடிக்குது; முகமோ
பழக அழைக்குது; இதழ்கள்
பருக விரும்புது.

வறண்டுபோன முடியெனினும்
வனப்பைக் காட்டுது; புது
வசந்தம் கூட்டுது; எழில்
வடிவம் பேசுது; விழிகள்
காணக் கூசுது; மயக்கம்
கண்ணில் தெரியுது.

கறுப்புநிற முகமெனினும்
கவிதைப் பாடுது; இளமை
கருத்தில் ஆடுது; கவர்ச்சி
சிந்தைக் கலக்குது; அழகு
சிரசில் நிலைக்குது; கன்னம்
கவர்ந்து இழுக்குது.

அலங்காரம் இல்லையெனினும்
அழகு இருக்குது; இமையோ
அன்பைப் பறிக்குது; புருவம்
வேட்டை யாடுது; இதய
வீட்டைத் தகர்க்குது; பருவம்
வீணை மீட்டுது.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »