ஆண்மகன் பிறந்தாலே அளவற்ற
மகிழ்ச்சி அனைவரின் வாழ்விலும். !!!

பிள்ளையை கரையேற்றுவதில் தந்தைக்குதான்
எவ்வளவு பாசம்.

கல்விக்கடனுக்காக கையேந்தி நிற்கிறாரே
ஏன் பிள்ளைகளின் வாழ்விற்கா? பாசத்திற்கா?
இருண்டோடும் சேர்த்து தன் கடமை எனும் சொல்லுக்கு. !!!

தங்கையும் கண்ணியமாய் காத்து கிடக்கிறாள்
அண்ணன் கரம்பிடித்து தரும் வரனுக்காக.

தம்பியும் கல்வியை கையில் ஏந்தி
தத்தளிக்கின்றான் அண்ணனின் பணத்திற்காக.

தாயின் கழுத்தில் மினுக்கும்கயிறுகூட
சங்கிலி துணையின்றி தவியாய் தவிக்கிறது.

தந்தையின் அடகு பத்திரங்கள் அடுக்கிய
இடத்திலேயே அழகாக காட்சித்தருகிறது.

இத்தனை சுமைகளையும் நிறைவேற்றிய
மகிழ்ச்சியில் என் வயதை அன்னார்ந்து
பார்த்தால் நான்கு, எட்டாக கூடிவிட்டது.

அழகுமங்கையை கரம்பிடித்து அருகில்
அமர்த்தினேன். மீண்டும் குடும்ப சுமைகள்
தள்ளிநின்று எட்டிப்பார்த்து எக்காலமிட்டது.

பணத்தைதேடி
எண்ணிப்பார்த்துவிட்டு விரும்பிப்பார்த்தேன்.

வாழ்ந்த நாளை வாழ்க்கை எண்ணிப்பார்த்து
ஏலனமாய் சிரித்துவிட்டு சென்றது. !!!!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்