கொக்காட்டிக் கொலுசாட்டிக்
கொஞ்சிக் கொச்சனை நீராட்டி …
கொப்பாட்டிக் குலையாட்டிக்
கொத்துக் கொத்தாய் கொழுநீர் வடித்து
கொண்டெனையிழுத்து வந்த கொம்மையே …

நரையேறி நலிவேறி
நடுக்கேறி நட்டோரும் உதறி
நரங்கேறி நளதேறி
நன்னிச் சுருங்கிய நனவேறி
நழுவிப் பின் நீ நயம் தேடுமுன்

சீத்தாட்டிச் சீமையேற்றி
சீர்ப்போடுனை சீமாட்டி
சீரூட்டிச் சிரிப்பூட்டி
சீயாளாக்கியுனை சிறப்பாக்கி
சீமத்துச் சீமந்தினியாய் … சீதேவியாய் வனப்பாக்கி …

பட்ட கடன் பங்கெடுத்து
பலாபலன்களுன் பாதமிறக்கி
பட்டனாகிப் பாவுரைத்து
பட்டினம் போற்றப் பட்டது மறந்து
பப்புவர் பரப்புவர் பம்மலும் போக்கி …

மெத்துப் பெருக்கிடும் மெச்சில் நனைந்து
மெழுகும் மென்மையுமாய் பிணைந்த (வு) னை
மென்னகை மெய்ப்பொருளாய்
மெட்டிட்டுக் கட்டிட்டு மென்பாவோங்கி உரைத்து
மெய்ப்பிக்கக் காத்திருந்த மெய்யனை மெல்ல

விட்டுட்டுச் சென்றதென்ன நியாயம்
விக்கித் திரளுகின்றேன் கேட்கின்றதா என் கானம்
விடுகதைக்கு நான் விடை தேட முன்னம்
விசிறியடிக்கிறது விசாலம்
வி்ண்டலமேறினும் கிடைத்திடுமா விதானம்!

விடை தெரியா விதூரத்தில் நீ …
விபரமறியா விளையாட்டில் நான் …
விம்மியழும் விதம் காண மட்டும்
விரைந்தோர் முறை வருவாயோ …
விடியும் வரை மடிசாயத் தருவாயோ …

என் செக்குச் சீமாட்டியே ..!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்