நிறத்தைப் போலவே
மனமும் வெள்ளை என்றவளே! – அதில்
கரும்புள்ளியை வைத்துவிட்டு
எங்கே சென்றாய்?

தேனினும் இனிமை
குரல் என்றவளே!
அதைக் கசப்பாக்கிவிட்டு
எங்கே சென்றாய்?

பாலினும் தூய்மை
குணம் என்றவளே! -அதைத்
திரியவைத்துவிட்டு
எங்கே சென்றாய்?

கண்கள் கலங்கிய போதெல்லாம்
என்னைவிட உன்கைகள்
என்கண்களைத் துடைத்தனவே!
இன்றும் கலங்குகிறேன்
உன்கைகளுக்காக ஏங்குகிறேன்!

துவண்டபோது எல்லாம்
தோள்கொடுத்துத் தூக்கியவளே!
இன்றும் துவளுகிறேன்
ஊன்றுகோலாய் நீ எங்கே?

இனியொரு பிறவி வேண்டும்!
இணைந்து தினம் கல்லூரிக்குச்
செல்லும் வரம் வேண்டும்!
கவலைகளின்றிச் சுற்றித்திரிந்திடவே …
வாழ்வதுவும் வேண்டும்!
உன்தோளில் தலைசாய
என்னதவம் செய்வேனோ?


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்