நாம் கவனிக்கத் தவறிய, இயந்திர வாழ்க்கையில் நாம் இழந்த கிராமத்து வாழ்வியல் முறைகளை மண் வாசனையோடு தந்து இருக்கிறார் “காட்டு நெறிஞ்சி” யில் கவிஞர் சோலச்சி.

முதல் பரிசு என்ற சிறுகதை நூலின் மூலம் அறிமுகமான சோலச்சியின் இரண்டாவதுப் படைப்பாக வெளிவந்துள்ளது இந்த “காட்டு நெறிஞ்சி”.

கவிதை என்றாலே காதலைப் புறம் தள்ளிவிட்டு எழுதிவிட முடியாது. காரணம் காதல்தான் அவனின் முதல் கவிதை.

எங்குப் பார்த்தாலும்
எழுதிவிட்டுத்தான்
செல்கிறேன்
என்னோடு
உன் பெயரையும்
கள்ளிச் செடிகளில் !

எல்லோருக்கும் வாய்த்திருக்கும் கிராமங்களில் கள்ளிச் செடிகளில் ரணமான காதல் முள்ளினால் குத்திய வடுக்களால் இதயத்தின் ஆறாத வலிகளால் இன்னும் அப்படியே பதியப்பட்டு இறக்கிறது கள்ளிச் செடிகளில் காதல்.

அயர்ந்து உறங்கினேன்
ஆடை இழந்த மரத்தின்
அடியில்
பூமி சிம்மாசனத்திற்குக்
குடை பிடித்தவாறு
காளான்கள்!

வெப்பமயமாகிவரும் பூமியில், இனி என்ன மிச்சம் இருக்கப்போகிறது? என்ற ஆசிரியரின் கோபம்தான் கவிதையாக படிந்து இருக்கிறது.

கிராமத்து வயல்கள், குளங்கள், ஆறுகள் காணாமல் போய்விட்டன. மணல் இன்று அதிகாரவர்க்கத்தின் சுரண்டலாக மாறிவிட்டது. தனியார் மயமாக்கலால் கானாமல் போனது கிராமத்து வயல்கள் மட்டுமல்ல நம் தலைமுறை பிள்ளைகளின வளங்களும்தான்.

என் இனம்
அழிந்தலைத் தடுக்கத்
துப்பில்லை
தேசிய கீதம்
ஒரு கேடா…!

கிராம வாழ்வியலை முன் வைத்து நிறைய கவிதைகள் இத் தொகுப்பில் இடம் பெற்றிருந்தாலும், ஈழம் சார்ந்தும் கவிதைகள் இத்தொகுப்பில் காணக் கூடியதாக இருக்கின்றது. இருந்தாலும் இப்படிக் கேட்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.

இந்திய இறையாண்மை மீறி எப்படி பேசலாம், எப்படி எழுதலாம் என்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார். ஒரு இனம் கொத்துக் கொத்தாக நம் கண்முன்னே செத்து வீழ்ந்துக் கிடக்கிறது, இந்நூற்றாண்டில்  நடைபெற்ற பாரீய மனித பேரவலம் ஈழத்தில், நடந்தேறிய பிறகும், ஆட்சி அதிகாரங்களுள்ள சரிவதேசங்கள் கேட்கவில்லையே என்ற ஆதங்கம் கவிஞரின் கவிதைகளில் அனலாய் எரிகின்றது.

எவ்வளவு உழைத்தாலும்
உழவுக்கு
கூலியாய்க் கிடைப்பது
வறுமை மட்டுமே!

சேற்றை
புறம் தள்ளிவிட்டு
சோற்றை மட்டுமே
ருசிக்கின்றார்கள்
சுகவாசிகள்!

இப்படி இன்னும் கவிதைகள் நிறைந்து இருக்கின்றது. கவிஞர் சோலச்சியின் தொகுப்புகள் முழுவதும் தமிழின அழிப்புக்கு எதிராக, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக, சாதி, அடக்கு / ஒழுங்கு முறைகளுக்கு எதிரான, போர்த்தொடுத்து இருக்கிறார் கவிதைகளில் கவிமதி சோலச்சி.

காணாமல் போன கிராமத்து வயல்களுக்காக, உழவுக்காக, மாடுகளுக்காக, ஆற்றுமணல் பருக்கைகளுக்காக, ஈழத்திற்கான ஆதரவாக ஒரு கிராமத்துக் குரலாய் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது காட்டு நெறிஞ்சி.

எல்லாவற்றையும்பேசும் கவிதையாக காட்சிப்படுத்தி அழகிய வடிவமைப்பில் வெளிவந்திருக்கும் கவிமதி சோலச்சியின் கவிதைகள் இலக்கியத் தளத்தின் மக்களின் வாழ்வியல் படைப்பாகும்.

14 x 21,5 செ.மீ அளவில் 128 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை :  110 INR

தொடர்புகளுக்கு மின்னஞ்சல் : nandavanam10@gmail.com


3 Comments

பா.தென்றல் · டிசம்பர் 26, 2016 at 4 h 26 min

சமூகத்தில் பொறுப்பான ஆசிரியர் பணியினையும் திறம்பட ஆற்றிக்கொண்டு, கவிதை வழி சமூகக் கேடுகளையும் விளாசுகிறார் சோலச்சி.
வாழ்த்துகள்.

சோலச்சி · டிசம்பர் 26, 2016 at 4 h 26 min

கவிஞர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. காட்டு நெறிஞ்சிக்கு ஆழமானதொரு விமர்சன உரை வழங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். என் உணர்வுகளை உள்வாங்கிய தங்களுக்கு மீண்டும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. தங்களின் மேலான இலக்கிய பணியும் தொய்வில்லாது தொடர வாழ்த்துகிறேன்.
நட்பின் வழியில்
எந்நாளும்
சோலச்சி – புதுக்கோட்டை

இளைய ராஜா · ஜனவரி 28, 2017 at 22 h 07 min

உன்மையில் நல்ல படைப்புகள் நல்ல படைப்பாளிகளை தேர்வு செய்துள்ளிர்கள் வாழ்த்துக்கள் .காட்டு நெறிஞ்சி கவிதைத் தொகுப்பு அற்புதம் வாங்கி படிக்க முற்படுகிறேன். வழிகாட்டுங்கள்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நூல்கள் அறிமுகம்

Moon inside the well

ஹைக்கூ (Haiku) தமிழ் இலக்கியத் தளத்தில் தவிர்க்க முடியாத கவிதை வடிவமாக நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வருகின்றது. ஹைக்கூ ஜப்பானிய இலக்கிய வடிவம் என்றாலும், 17 ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக் வடிவமைக்க,

 » Read more about: Moon inside the well  »

நூல்கள் அறிமுகம்

இலங்கையில் சிங்களவர்

இலங்கை அரசின் இனவெறிப் படுகொலைக்குத் துணை நிற்கும் நடுவணரசும் ஏன் தமிழக அரசும், உருசியா, சீனா போன்ற பொதுவுடைமை நாடுகளும், ஏனைய உலக நாடுகளும் வரலாற்றுப் பிழை செய்வதை இந்நூல் அரண் செய்கின்றது. தமிழர் யார்?

 » Read more about: இலங்கையில் சிங்களவர்  »

நூல்கள் அறிமுகம்

மொழி பெயர்க்கப்படாத மௌனம்

வாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே.

 » Read more about: மொழி பெயர்க்கப்படாத மௌனம்  »