இசைப்பாடல்

யே ராசா ராசா
என் நெஞ்சுக்குள்ளே
வந்து நீயும்
என்னை யென்ன
யென்ன செய்யப் போகிறாய்?

தினம் லேசா லேசா வந்து
என்னைத் தொட்டு
எங்கே நீயும் போகிறாய்?
இது பருவம் தந்த காதல் மயக்கமோ?
உன்றன் பார்வை யென்றும்
என்னை மயக்குமோ?
யே…..ராசா…. ராசா…..
யே…..ராசா…. ராசா…..

____ (யே…..ராசா…. ராசா…..)

மின்னல் போலெ
முன்னே வந்து
என்னை தொட்டுச்
செல்லும் உன்னைக்
கண்ணுக்குள்ளே வைத்து
நானும் பார்க்கிறேன்
அட என்னென்னமோ
செய்யச் சொல்லிக் கேட்கிறேன்

என் நாணம் இங்கே
விட்டுப் போச்சு
நாளும் தூக்கம்
கெட்டுப் போச்சு
நீயில்லாமல்
என்னன்னமோ ஆகிறேன்
அட நீரில்லாமல்
நீச்சல் இங்கே போடுறேன்

ஊருக்குள்ளே போகும் போது
உன்னை மட்டும் தேடும் கண்கள்
எங்கே எங்கே
எங்கே என்று பார்க்குதே
தினம் ஏக்கத்தாலே
தூக்கம் கெட்டுப் போனதே….
நீயும் இன்றி நானும் இல்லை
நெஞ்சுக்குள்ளே ஈரம் இல்லை
என் தாகம் தீர்க்கும்
தண்ணி உன்னைத்
தேடி நெஞ்சம் ஓடுதிங்கே

____ (யே…..ராசா…. ராசா…..)


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

விடுபடுதல்

சிலவேளைகளில் கற்பனைகள்
உண்மைகளைவிட உன்னதமானவை

நான் வகுப்பறைக்குள் நுழைந்தேன்
பெஞ்சுகளில் பேசாமல் அமர்ந்திருக்கும்
பட்டாம்பூச்சிகள் வணக்கம் சொல்லின

கட்டிப்போட்டு பாடம் நடத்தினால்
பட்டுப்போய்விடுமென யோசித்தேன்
அவற்றின் படபடக்கும் கண்கள்
வானுக்கு அழைத்துப் போகச் சொல்லின

பறக்கத் தொடங்கினோம்
கிறக்கமுற்ற வானம் கைகுலுக்கி வரவேற்றது
வானத்தின் வகுப்பில் கணக்குப் பாடம்
நட்சத்திரங்களை எண்ணச் சொன்னேன்
பறித்துக் கோர்த்து மாலையாக்கி மகிழ்ந்தனர்

விடுதலை பற்றிய பாடத்தில்
கூண்டுக்குள் வேண்டாமென
காற்றிடம் பெருவெளி கேட்டோம்
காற்றும் கடை திறந்து பெருவெளி கொடுத்தது
உண்டு மகிழ்ந்தோம்

நிலவின் சாலையில் நடந்தே வந்தோம்
வடை சுட்ட ஆயா காணாது தவித்தோம்
ஆயா சிறையிலிருக்கிறார் என்றான்
வடை சுடும்போது கேஸ் தீர்ந்துவிட்டதாம்
சிலிண்டரைக் கொடுத்துதவிய
ஆம்ஸ்ட்ராங் உயிர்காற்றின்றி
உயிர்விட்டுவிட்டாராம்…

 » Read more about: விடுபடுதல்  »

புதுக் கவிதை

தீபாவளி

எனது சிறுவயது
தீபாவளி எப்படி!!!

என்று வரும் என்றே எனை
ஏங்க வைக்கும்

காலை எழுந்தவுடன்
நாட்காட்டி பார்த்து பார்த்து
தாள்கள் பழசாய்ப்போகும்

என்ன வண்ண உடை
எங்கே எடுப்பது கவலை
வேறு வந்து ஆட்டும்

யாருமே அணியாத
புது வகைத்துணியில்
நான் மட்டுமே அழகியாக
தோன்றவே விருப்பம் கொள்ளும்

தீபாவளிக்கு ஐந்துமுறையேனும்
கடைக்குச்செல்லவேண்டும்

புதிதாக என்ன மாதிரி உடை
கண்கள் வட்டமிடும்
உனக்கு மட்டுமே இத்தனை
நேரம் எடுத்தால் மற்றவர்களுக்கு??

 » Read more about: தீபாவளி  »

புதுக் கவிதை

இயலாமையின் ஓளி

இதோ
இந்த பொழுதுதான்
உன்னை அழைத்து
இசை மீட்ட சொன்னது…

நான் பாத்துக்கொண்டே
இருக்கும் சமயத்தில்தான்
நமக்கான இருளும்
இசைந்து வந்தது…

வழியெங்கும் விழிபதித்து
உன் வருகைக்காய்
என்னுடனே காத்திருந்தது
இருளும் கைகோர்த்தபடியே…

 » Read more about: இயலாமையின் ஓளி  »