இலெமூரியாவில் பிறந்தவன்
ஆழியில் உலகம் அளந்தவன்

நாற்பத்தொன்பது நாடுகளாம் குமரிக்கண்டத்தில்…..

நாதியற்று நிற்கிறான் உலகக்கண்டங்களில்..!

மயிலுக்கும்
முல்லைக்கும் …..
அள்ளிக்கொடுத்த கடை ஏழு வள்ளல்கள்
வாழ வழியின்றி காத்துக்கிடக்கிறான்
அயல்நாட்டில்
அகதியின் வாரிசுகள்…..!

ஈழத்தில் பல உயிர்கள்
உயிரோடு புதைக்கப்பட்டபோதும்…
இனப்படுகொலைகள் நடந்தபோதும்…
கம்பிரமாய் ஒளித்துக்கொண்டு இருக்கிறது
ஐ. நாவின் நுழைவாயில்

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”

தஞ்சையின் பெரியகோவில்
மதுரை மீனாட்சி
கம்போடியாவின் அங்கூர்வாட்
தமிழனின் பெருமைதான்
இன்று……
கலை
திரை வடிவில்
கேலிக்கூத்து…..!

யாழ்பாணத்தில் தீயிட்டு எரித்தான்
ஆரியர்கள் ஆத்தில் மூழ்கிக்கரைத்தான்

இப்போது…..
தமிழன்
ஆங்கிலத்தில் பேசி தொலைக்கிறான்…!
எம் மொழியை
செம்மொழியை…!

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இலக்கண…
இலக்கிய செழுமையோடு
பிறந்த முதல் குழந்தை
அன்னியமொழி கலந்து பேசியே
ஊனமாகி விட்டோம்….!

மறந்து விடாதீர்கள்
மரியாஸ்மித்தின் கல்லறையில்
“ஏயக்” மொழி
உறங்கிக்கொண்டு இருக்கின்றது…!

தமிழுக்குப் பின் பிறந்த
லத்தீனும் , கிரேக்கமும் என்னானது…?
உலகை தனது அன்புக்கரங்களாள் அரவணைத்த
தேவகுமாரனின் ஆசீர்வதிக்கப்பட்ட மொழிதான்…

அராமிக்கும், ஹீப்ரூம் என்னானது…..?
புத்தர் போதித்த பாலி மொழி ,
மாபெரும் இதிகாசங்களையும் புராணங்களையும் தந்த
சமஸ்கிருதம் என்னானது..?

இப்போது
அகராதியில் மட்டுமே இருக்கிறது
நாளை….!
அதுவும் இருக்காது….!

மொழி இனத்தின் அடையாளம்
“மொழி அழிந்தால் இனம் அழியும்”
இனம் வாழ மொழி காப்போம்.

தமிழரிடம் தமிழில் பேசுவோம்
தமிழர் பெருமை உணர்த்துவோம்
தமிழன் என்று சொல்வோம்
தலை நிமிர்ந்து நிற்போம்…

வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!


2 Comments

ஈழபாரதி · அக்டோபர் 25, 2016 at 17 h 29 min

நன்றி ஐயா….

Sofia · அக்டோபர் 25, 2016 at 17 h 56 min

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இலக்கண…
இலக்கிய செழுமையோடு
பிறந்த முதல் குழந்தை
அன்னியமொழி கலந்து பேசியே
ஊனமாகி விட்டோம்….!

இப்போது
அகராதியில் மட்டுமே இருக்கிறது
நாளை….!
அதுவும் இருக்காது….!

நல்ல வரிகள். மிகவும் நன்றாக இருக்கிறது.

அதுவும் இருக்காது….!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

விடுபடுதல்

சிலவேளைகளில் கற்பனைகள்
உண்மைகளைவிட உன்னதமானவை

நான் வகுப்பறைக்குள் நுழைந்தேன்
பெஞ்சுகளில் பேசாமல் அமர்ந்திருக்கும்
பட்டாம்பூச்சிகள் வணக்கம் சொல்லின

கட்டிப்போட்டு பாடம் நடத்தினால்
பட்டுப்போய்விடுமென யோசித்தேன்
அவற்றின் படபடக்கும் கண்கள்
வானுக்கு அழைத்துப் போகச் சொல்லின

பறக்கத் தொடங்கினோம்
கிறக்கமுற்ற வானம் கைகுலுக்கி வரவேற்றது
வானத்தின் வகுப்பில் கணக்குப் பாடம்
நட்சத்திரங்களை எண்ணச் சொன்னேன்
பறித்துக் கோர்த்து மாலையாக்கி மகிழ்ந்தனர்

விடுதலை பற்றிய பாடத்தில்
கூண்டுக்குள் வேண்டாமென
காற்றிடம் பெருவெளி கேட்டோம்
காற்றும் கடை திறந்து பெருவெளி கொடுத்தது
உண்டு மகிழ்ந்தோம்

நிலவின் சாலையில் நடந்தே வந்தோம்
வடை சுட்ட ஆயா காணாது தவித்தோம்
ஆயா சிறையிலிருக்கிறார் என்றான்
வடை சுடும்போது கேஸ் தீர்ந்துவிட்டதாம்
சிலிண்டரைக் கொடுத்துதவிய
ஆம்ஸ்ட்ராங் உயிர்காற்றின்றி
உயிர்விட்டுவிட்டாராம்…

 » Read more about: விடுபடுதல்  »

புதுக் கவிதை

தீபாவளி

எனது சிறுவயது
தீபாவளி எப்படி!!!

என்று வரும் என்றே எனை
ஏங்க வைக்கும்

காலை எழுந்தவுடன்
நாட்காட்டி பார்த்து பார்த்து
தாள்கள் பழசாய்ப்போகும்

என்ன வண்ண உடை
எங்கே எடுப்பது கவலை
வேறு வந்து ஆட்டும்

யாருமே அணியாத
புது வகைத்துணியில்
நான் மட்டுமே அழகியாக
தோன்றவே விருப்பம் கொள்ளும்

தீபாவளிக்கு ஐந்துமுறையேனும்
கடைக்குச்செல்லவேண்டும்

புதிதாக என்ன மாதிரி உடை
கண்கள் வட்டமிடும்
உனக்கு மட்டுமே இத்தனை
நேரம் எடுத்தால் மற்றவர்களுக்கு??

 » Read more about: தீபாவளி  »

புதுக் கவிதை

இயலாமையின் ஓளி

இதோ
இந்த பொழுதுதான்
உன்னை அழைத்து
இசை மீட்ட சொன்னது…

நான் பாத்துக்கொண்டே
இருக்கும் சமயத்தில்தான்
நமக்கான இருளும்
இசைந்து வந்தது…

வழியெங்கும் விழிபதித்து
உன் வருகைக்காய்
என்னுடனே காத்திருந்தது
இருளும் கைகோர்த்தபடியே…

 » Read more about: இயலாமையின் ஓளி  »