எழுதுகிறேன், மரணத்தை தழுவும் முன்; இதுவே கடைசி பதிவாகவும் எனது மரண ஓலையாகவும்……!!

முகநூல்! இன்றைக்கிது உலகெங்கும் பரவி உள்ள ஓர் உன்னத, அதேசமயம் எளிய ஊடகம்…! இதுதான் இன்று என் உயிரை குடிக்க காரணமாகிறது…!!

” … நான் முகநூலுக்குள் நுழைகிறேன்(அழைத்து வரப்படுகிறேன்) முதற்முதல் அனுபவம் எனக்கு! அதுவரை கேள்வி-ஞானம் மட்டுமே இந்த முகநூல் பற்றிய பரிசயம். விஞ்ஞான வளர்ச்சி; இது கொஞ்சம் வளராமலே இருந்திருக்கலாம்! அல்லது என் போன்றோரை ஈர்க்காமலும் இருந்திருக்கலாம்.

என்செய்ய, விதி என் வாழ்வில் முகநூல்வாயிலாக விளையாடியது இப்படியோர் துவக்கத்துடன்………?

முகநூல்! அதுவரை கண்டிராத அப்படியோர் புது உலகம்…! புலகாங்கிதம் கொண்டேன் இவ்வுலகில் காலெடுத்து வைத்தவுடன்…… விரல்விட்டு எண்ணும் என் நட்புவட்டம் எண்ணிலடங்கா எண்ணிக்கையில் விரிந்தது…! பேசினோம், பழகினோம், பகிர்ந்து கொண்டோம் பற்பல விடயங்களை.… எழுத்துக்கள் என்னை ஆகர்ஷணம் செய்தன! நானும் எழுத துவங்குகிறேன், என் எழுத்துக்களும் அழகழகாய் உயிர்த்தெழுகின்றன! ஆச்சர்யம்! எனக்குள் இத்தனை ஆற்றலா? என்று. அடுத்தடுத்த பதிவுகள் குவிகிறது ஆதரவுகளும் உற்சாக கரம் கோர்க்கிறது. இப்படியாக என் நாட்கள் நகர்கின்றது…!

இப்படி போகும் என் முகநூல் பயணத்தில் மனங்கவர் ஒர் பெண்ணின் நட்பு என்னை அதிகமாய் பாராட்டுகிறது! மெல்ல மெல்லமாய் என் இதயம் தொடுகிறது! அது விஸ்வரூபமும் எடுக்கிறது அழகிய காதலாக. என்னையும் அறியாது தன்னிலம் மறக்கிறேன் அவளுடன் உரையாடும் காலங்களில். அவள் என்னுள் வேரூன்றி நிற்கிறாள் ஆலமரமாக. இப்படியாக அவளுடன் என் நட்பு காதலாகி கவிபாட வருடங்கள் உருண்டோடின…!

நேற்று அவள் என்னோடு நீண்ட நேரம் பேசினாள் நேரம்போவதும் தெரியாத அளவுக்கு பேச்சு என் மூச்சோடு கலந்திருந்தது…! (நேற்று, அது கடக்காமலே இருந்திருக்கலாம்…???)

இன்று அவளிடமிருந்து அழைப்பு ஒலி மீண்டும், பேசினேன் அவள் என் ஊருக்கு விஜயம் செய்திருக்கிறாள் என் மீதான முழு நம்பிக்கையுடன். மணம்முடிக்க இல்லம் துறந்து என்னை காண! கல்யாணம் பண்ண புறப்பட்டு வந்திருக்கிறாள் என்னிடத்தும் தகவல் பகிராமல். என்ன முடிவு இது என நான் வினவ; நல்ல முடிவு தான் விரைந்து புறபட்டு வாருங்கள் நான் தனியாக நிற்கிறேன் தெரியாத ஊரில் என்கிறாள். நானும் விரைந்து செல்ல முனைகிறேன் கல்யாணம் பண்ணவல்ல அவள்மீதான நேசம்  காரணமாக. காரணம் அப்போது அவளின் பாதுகாப்பு? பாதுகாப்பது என் கடைமை என்னும் உணர்வே ஓங்கியது…!

சென்றேன் அவள் வந்திரங்கிய பேருந்து நிலையம் வாயினுள்…, அதிர்ச்சி அங்கு பூதாகாரமாக நின்றிருந்தது…! ஆம், அவளை எப்படியெல்லாமோ கணவு கண்டிருந்தேன்…! என்னென்னமோ யூகங்கள் கொண்டிருந்தேன் அவளையும் அவளின் அழகையும் எண்ணி என்னுள்…! என் சொப்பனங்கள் அத்தனையும் அந்நொடியிலே சிதறிவெடித்தது, என் இதயம் துடிதுடித்தது…! காரணம், அவள் குரலில் மட்டுமே மயக்கம் கொண்டிருந்த நான் அவள் முகம் காணும் துர்பாக்கியம்! அன்று எனக்கு நேர்ந்தது. காணபிடிக்கலை, அவளோடு பேசப்பிடிக்கலை, அவளை பற்றிய கவலையும் மறந்து போன நிலையில் இப்போது நான்…!!

என்ன செய்வேன், என்ன செய்வேன் என் மனதாழம் வரை வேரூன்றிய அவள்! அவளின் கற்பனைகள்! என்னை நிலைகுலுங்க செய்த அத்தருணம் என்னவென்பேன், ஏதுரைப்பேன்…, அதுவரை குளிர்ச்சியூட்டிய கற்பனைகள் சுட்டெரிக்கும் வெப்பமாக மாறியது என்னுள்……!!

அவளை மறக்க மனமில்லை…! அவளை மணக்கவும் மனமில்லை…! வாழ்க்கை இப்போது கேள்வியாக என்முன் எள்ளி நகையாடுவதைப் போன்ற காட்சி…!! ஆம், நான் வாழ்க்கையை வெல்ல முடிவெடுக்கிறேன் என் காதல் என்னோடு மட்டுமே அது இனி என் நினைவுகளோடு மட்டுமே என்று என் அறைக்குள் என்னை நானே பூட்டபடுகிறேன்! விடியல் இனி இல்லை என்னும் உறுதியுடன்…!!”

என் இனிய முகநூலே என்னை ஏன் ஈர்த்தாய்…? ஈர்த்து என்னை ஏன் ஏமாற்றத்துள் அடைத்தாய்…? அடைத்து என் பலகீனத்தோடு ஏன் விளையாடினாய்…???

இவன் பாவத்தில் “முகநூலே” உனக்கும் தான் பங்குண்டு…!!
விடைபெறுகிறேன் இனி நீ வேண்டாம் என்னும் முடிவுடனே …!!!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

டாக்டர் அக்கா

நான் அப்போது புளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அம்மாவும் அப்பாவும் இல்லாததால் பாட்டி நாகம்மாளின் ஆதரவில் இருந்தேன். சமாதானபுரத்தில் இருந்து ஜெபபுரவிளைக்கும், புளியூருக்கும் போகும் வழியில் இடதுபுறம் உள்ள பெரிய தென்னந் தோப்புக்குள் இருக்கும் பழைய மோட்டார் ரூம்தான் எங்களின் வீடு.

 » Read more about: டாக்டர் அக்கா  »

சிறுகதை

ஊழிற் பெருவலி

ஒழுகினசேரி பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸூக்காகக் காத்திருந்தேன். எனது ஆட்டிறைச்சிக்கடை ஒழுகினசேரி பாலத்தில் இருந்து சுடுகாடு போகும் பாதையில் இருக்கிறது. வாரம்தோறும் புதன்கிழமை வள்ளியூர் சந்தைக்கு ஆட்டுத் தோலை விற்கப் போவேன். அதுபோல தான் அன்றும் பஸ்ஸூக்காக நின்றிருத்தேன்.

 » Read more about: ஊழிற் பெருவலி  »

சிறுகதை

கணையாழி

நான் நினைக்கவே இல்ல இப்படி நடக்குமென்று ”நீ இப்புடியா பேசுவாய் …என்ன என்னண்டு நெனசாய்டா. உண்ட பகடிக்கு இங்க இருக்கிற ஆக்கள்தான் செரி … எனக்கிட்ட வெச்சிக்காத நானும் உன்னப் போல ஒரு அரசாங்க ஊழியந்தான்..”

 » Read more about: கணையாழி  »